வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதைத் தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டது.
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு அரசு அனுமதி அளித்ததாக பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கருப்பு தின பேரணி எனும் கண்டனக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தி.மு.க அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர். அப்போது பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Dec 21, 2024 20:49 ISTஅ.தி.மு.க-வில் இணைந்த நாம் தமிழர் கட்சியினர்
சீர்காழியில் 50-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர், அ.தி.மு.க-வில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் பிடிக்காமல் விலகுவதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த வாரம் 100 பேர் அக்கட்சியில் இருந்து விலகியிருந்தனர்.
-
Dec 21, 2024 18:15 ISTஊர்க்காவல் படை பணியிடங்களுக்கான தேர்வு
திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 25 பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியுள்ளவர்கள் ஜனவரி 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 21, 2024 17:21 ISTபெற்றோர் சாலை மறியல் போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம், தேர்த்தாண்டம்பட்டியில் உள்ள திவான் முகமது மெமோரியல் மெட்ரிக் பள்ளியை வரும் 31-ஆம் தேதிக்குள் மூடப்போவதாக பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்குமாறு பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
Dec 21, 2024 16:58 ISTபா.ஜ.க நிர்வாகி கொலை - தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர் கைது
வேலூர் மாவட்டத்தில், பா.ஜ.க நிர்வாகி விட்டல் குமார் கொலை வழக்கில், தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மகனும், ஊராட்சி செயலருமான தரணிகுமாரையும் போலீசார் கைது செய்தனர்.
-
Dec 21, 2024 16:50 ISTமருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
நெல்லை மாவட்டத்தில், கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில், கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சேலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Dec 21, 2024 16:11 ISTகொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிவுகள் - கிருமி நாசினி தெளிப்பு
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே பறக்கை ஏரிப்பகுதியில் உள்ள மைலமடை என்ற இடத்தில், கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவை, நேற்றிரவு கொட்டப்பட்டதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். கேரளாவின் கிம்ஸ் மருத்துவமனை அடையாளங்கள் இக்கழிவுகளில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மூலம் மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு, அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 21, 2024 16:08 ISTமீண்டும் கொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிவுகள்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே பறக்கை ஏரிப்பகுதியில் உள்ள மைலமடை என்ற இடத்தில், கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவை, நேற்றிரவு கொட்டப்பட்டதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். கேரளாவின் கிம்ஸ் மருத்துவமனை அடையாளங்கள் இக்கழிவுகளில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
Dec 21, 2024 15:24 ISTபள்ளி மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் தனியார் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்யும் நோக்கில் மாடியில் இருந்து குதித்தாரா? என போலீசார் விசாரணை.
-
Dec 21, 2024 15:10 IST``உங்க வீட்டுல ஆம்பளைங்களே இல்லையா?’’ - பாமக MLA விட்ட வார்த்தை
முத்துநாயக்கன்பட்டி கால்நடை மருத்துவமனை எதிரே, அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினர் இடையே தொடர்ந்து பிரச்சனை நிலவி வந்தது. சமரசம் பேச முயன்ற பாமக எம்.எல்.ஏ., பெண்களை பார்த்து, “உங்கள் வீட்டில் ஆம்பளைங்களே இல்லையா“ என்று கேட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இரு தரப்பினர் இடையே உடன்பாடு எட்டாததால், கோயிலுக்கு சீலும் வைக்கப்பட்டிருந்தது. இந்த சீலை, செல்லப்பிள்ளைகுட்டை விஏஓ, நேற்று அகற்றினார். அப்போது அங்கு வந்த இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு, லேசான கைகலப்பிலும் இறங்கினர். தற்போது கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
Dec 21, 2024 14:45 ISTதென்காசி: சொத்து தகராறில் தலை துண்டிக்கப்பட்டு கொலை
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே கருத்த பிள்ளையூர் அந்தோணியார் தெருவைச் சேர்ந்த அருள் என்பவரது மகன், சொக்கன் என்ற இருதயராஜ் (45). இவர் ஆதரியானூர் பகுதியில் உள்ள அச்சங்குளம் - கள்ளத்திகுளம் பகுதியில் மீன் பாசி குத்தகைக்கு எடுத்துள்ளார். இவர் இரவு நேரத்தில் குளத்துக் கரையில் காவல் இருப்பது வழக்கம். அப்படி நேற்று இரவும் காவலில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் தாக்கி அவரது தலையை துண்டித்துக் கொலை செய்துள்ளனர்.
-
Dec 21, 2024 13:55 ISTதிருப்பூர் - காணாமல் போன பள்ளி மாணவி உட்பட 3 பேர் சடலமாக மீட்பு.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த குறிச்சிகோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவி தர்சனா (16), கடந்த 18ஆம் தேதி காணமல் போனதாக தளி காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் 3 சடலங்களையும் மீட்டனர். அப்போது அதில் ஒரு சடலம் காணாமல் போன தர்சனா என்பது தெரியவந்துள்ளது. மற்ற இரு சடலங்கள் சென்னையைச் சேர்ந்த ஆகாஸ் (19), குறிச்சிகோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து (20) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.
இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது மூவரும் நிலை தடுமாறி குளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இது குறித்து பல்வேறு கோணங்களில் அமராவதி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Dec 21, 2024 13:45 ISTநெல்லையில் செப்டிங் டேங் குழியில் தவறி விழுந்து உயிரிழந்த நபர்..
நெல்லை மாவட்டம், வள்ளியூர் பேரூராட்சியில் தான், இந்த சோகம் நடந்துள்ளது. திமுக வார்டு செயலாளர் முருகன் என்பவர்தான், இங்கு பேருந்து நிலையத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் செப்டிங் டேங் குழியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். வள்ளியூர் பேரூராட்சியில், நகர சீரமைப்பு திட்டத்தின் கீழ், 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தான், செப்டிக் டேங்கிற்காக தோண்டிய பெரிய குழியில் முதியவர் விழுந்திருக்கிறார்.
-
Dec 21, 2024 13:27 ISTஈபிஎஸ்.வாகனத்தின் பின்னால் நடந்த கோர மரணம்
ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு ஈபிஎஸ் சேலம் திரும்பிக் கொண்டிருந்தார்... மின்னாம்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த தோட்டத் தொழிலாளி தங்கவேல் என்பவர் மீது பணமரத்துப்பட்டி அதிமுக ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதனின் கார் பலமாக மோதியது. இதில் வாகனத்துடன் தூக்கி வீசப்பட்ட தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அதிமுக ஒன்றிய குழு தலைவரின் கார் ஓட்டுநர் அண்ணாதுரையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Dec 21, 2024 13:06 ISTதிருப்பூரில் தீ விபத்து
திருப்பூரில் பனியன் கொரியர் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம். தீ விபத்தால் கடும் புகைமூட்டம் - தீயை அணைக்க போராடுகின்றனர் தீயணைப்புத்துறை
-
Dec 21, 2024 13:03 ISTதிருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் லாரி பறிமுதல்
திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் லாரி பறிமுதல். சேலத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுனரிடம் போலீஸ் தீவிர விசாரணை. நெல்லை நகர் பகுதியில் உலா சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த லாரியை பறிமுதல் செய்தனர் காவல்துறை. லாரி உரிமையாளரிடம் விசாரித்ததை தொடர்ந்து போலீஸ் கேரள விரைந்துள்ளனர்.
-
Dec 21, 2024 12:48 ISTதிருச்சி மாநகராட்சி மேயரை முற்றுகையிட்ட ஆளுங்கட்சி கவுன்சிலரால் பரபரப்பு
திருச்சி மாநகரம் காஜாமலை பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லை என்று தி.மு.க கவுன்சிலர் காஜாமலை விஜி தலைமையில், 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மாநகராட்சி மேயர் அன்பழகனை, முற்றுகையிட்டு, கவுன்சிலரும், பொதுமக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
-
Dec 21, 2024 12:36 IST27வது JK டயர் - FMSCI நேஷனல் ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டி; சீறிப்பாய்ந்த கார்கள்
கோவையில் 27வது JK டயர் - FMSCI நேஷனல் ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. செட்டிபாளையம் பகுதியில் உள்ள காரி மோட்டார் கார் பந்தயதளத்தில் கார்கள் சீறிப்பாய்ந்தன.
-
Dec 21, 2024 12:00 ISTஉடுமலைப்பேட்டை அருகே குளத்தில் 16 வயது சிறுமி, 2 இளைஞர்கள் என மூவர் சடலமாக மீட்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குளத்தில் 16 வயது சிறுமி, 2 இளைஞர்கள் என மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் (20) என்பவரிடம் பழகியதாகவும், சிறுமியைப் பார்க்க வந்த ஆகாஷ் மற்றும் சிறுமியின் உறவினர் மாரிமுத்து (20) மூவரும் ஒரே பைக்கில் செல்லும் போது குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது
-
Dec 21, 2024 11:28 ISTகோவை கண்டன ஆர்ப்பாட்டம்; அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
கோவை காந்திபுரம் பகுதியில் அனுமதியின்றி கூட்டத்தை கூட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
-
Dec 21, 2024 10:59 ISTகோவையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நிலம் கையகப்படுத்தியது செல்லும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
கோவை உப்பிலிப்பாளையம் பகுதியில் 1988ம் ஆண்டு 11.95 ஏக்கர் நிலத்தை (தற்போதைய மதிப்பு ₹217 கோடி) தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நிலத்தை கையகப்படுத்தியதற்கு எதிரான வழக்கில், குறிப்பிட்ட காலத்திற்குள் இழப்பீடு வழங்காததால் நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகள் அமர்வில் வீட்டு வசதி வாரியத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடியானதால், உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் அரவிந்த் குமார் அமர்வு, நிலத்தை கையகப்படுத்தியது செல்லும் என தீர்ப்பு அளித்துள்ளனர்
-
Dec 21, 2024 10:55 ISTமதுரை மெட்ரோ ரயில் திட்டம்; இயக்குநர் தலைமையிலான குழு இன்று கள ஆய்வு
மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட செயலாக்கம் குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் தலைமையிலான குழு இன்று ஆய்வு செய்து வருகிறது. திட்டமிடப்பட்ட மெட்ரோ வழித்தட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது
-
Dec 21, 2024 10:19 ISTகுடியாத்தத்தில் சிறுத்தை நடமாட்டம் - வேலூர் ஆட்சியர் அறிவுறுத்தல்
குடியாத்தத்தில் சிறுத்தை நடமாட்டமுள்ளதால் இரவு நேரத்தில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் வீட்டின் வெளிப்புறங்களில் விளக்குகளை எரியவிட வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்
-
Dec 21, 2024 10:18 ISTமகளின் காதல் திருமணத்தை நடத்தி வைத்த நபரைக் கொன்ற தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மகளின் காதல் திருமணத்தை நடத்தி வைத்த நபரைக் கொன்ற தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தாராபுரம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது
-
Dec 21, 2024 09:42 ISTமுக்கிய அணைகளின் இன்றைய நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 2,938 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 119.12 அடியாகவும் நீர் இருப்பு 92.073 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. விநாடிக்கு 800 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது
வைகை அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1,900 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 64.37 அடியாகவும் நீர் இருப்பு 4492 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. விநாடிக்கு 1,699 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது
-
Dec 21, 2024 09:17 ISTநெல்லையில் கேரள மாநில மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் - மேலும் 2 வழக்குகள் பதிவு
நெல்லையில் கேரள மாநில மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில், முக்கூடல் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சீதற்பநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுத்தமல்லி காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்ட நிலையில் கேரள ஏஜெண்டை போலீசார் தேடி வருகின்றனர்
-
Dec 21, 2024 08:37 ISTதிருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Dec 21, 2024 08:32 ISTமதுரை ஏர்போர்ட்டில் இருந்து சென்னைக்கு இரவு விமான சேவை; பயணிகள் வரவேற்பு
மதுரை விமான நிலையத்தில் இருந்து முதன்முறையாக சென்னைக்கு இரவுநேர விமான சேவை தொடங்கியது. இது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.