Advertisment

Coimbatore, Madurai, Trichy News Updates: திருப்பரங்குன்றம் மலை பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

Coimbatore, Madurai, Trichy News Live Updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thirupparankundram dharga

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உடல் நலக் குறைவால் விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் நகைக்கடை அதிபர்கள் வீடுகளில் சுமார் 40 மணி நேரம் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த விவகாரத்தில், ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Jan 05, 2025 21:05 IST
    மது விற்பனையை அம்பலப்படுத்திய திண்டுக்கல் பா.ஜ.க நிர்வாகி கனகராஜ் கைது - அண்ணாமலை கண்டனம்

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை: “மது விற்பனையை அம்பலப்படுத்திய பா.ஜ.க திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ் அவசர அவசரமாக கைது செய்யப்பட்டுள்ளார். சாராய் வியாபாரிகளுக்கு அரணாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தி.மு.க அரசு; தமிழக காவல் துறை தி.மு.க-வின் பிரிவு போல் இல்லாமல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என்று கூறினார்.



  • Jan 05, 2025 20:07 IST
    திருப்பரங்குன்றம் மலை பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

    மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதனால், காவல்துறையினர், போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



  • Advertisment
    Advertisement
  • Jan 05, 2025 17:11 IST
    திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

    புது வருடத்தின் முதல் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக, கடலில் புனித நீராடி, நாழிக்கிணற்றில் குளித்து விட்டு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர்.



  • Jan 05, 2025 16:33 IST
    த.வெ.க சார்பில் சமத்துவ பொங்கல் விழா

    விழுப்புரம் மாவட்டம், கயத்தூர் அருகே தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சுமார் 397 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



  • Jan 05, 2025 15:09 IST
    மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் - நாளை முதல் முன்பதிவு தொடக்கம்

    மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நாளை (ஜன 6) முதல் தொடங்கப்படவுள்ளது. இதற்காக,  http://madurai.nic.in என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • Jan 05, 2025 14:43 IST
    எடப்பாடி பழனிச்சாமி திருந்துவார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை -டி.டி.வி தினகரன்

    அ.தி.மு.க.,வை எடப்பாடி பழனிச்சாமி தன் சுயநலத்திற்காக வணிகரீதியாக பயன்படுத்தி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி திருந்துவார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழக மக்கள் பா.ஜ.க வை நிச்சயம் ஏற்று கொள்வார்கள். தமிழகத்தில் பா.ஜ.க வும் வளர்ந்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியும் பலம் பெற்று வருகிறது என திருச்சியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்



  • Jan 05, 2025 14:41 IST
    சிகிச்சை முடிந்து மாநாட்டிற்கு மீண்டும் வருகை தந்தார் சு.வெங்கடேசன்

    மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டிற்கு மீண்டும் வருகை தந்தார் 



  • Jan 05, 2025 14:08 IST
    இந்து முன்னணி மாநில செயலாளர் நெல்லையில் கைது

    அரசு மருத்துவமனையில் ஹிந்து பெண்களுக்கு அவர்களின் அனுமதியின்றி கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டு, ஹிந்து ஜனத்தொகையை கருவறுப்பு செய்யப்படுகிறது என சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்த இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், நெல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார்



  • Jan 05, 2025 14:07 IST
    சு.வெங்கடேசன் தற்போது நலமாக உள்ளார் - அமைச்சர் பொன்முடி

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தற்போது நலமாக உள்ளார் என நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்



  • Jan 05, 2025 13:27 IST
    கோவையில் ஹேப்பி ஸ்ட்ரீட்

    கோவையில் நடைபெற்று வரும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்



  • Jan 05, 2025 12:44 IST
    2,553 மருத்துவர் பணியிடங்கள் இம்மாத இறுதிக்குள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சு பேட்டி

    தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியாக உள்ள 2,553 மருத்துவர் பணியிடங்கள் இம்மாத இறுதிக்குள் நிரப்பப்படும். மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், 20 நாட்களில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்கள் என பெரம்பலூரில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் 



  • Jan 05, 2025 12:27 IST
    சீர்காழி அருகே ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து ரூ.7 லட்சம் கொள்ளை

    சீர்காழி அருகே, ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து ரூ.7 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் கைவரிசை காட்டிய 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. நேரில் விசாரணை நடத்தினார்



  • Jan 05, 2025 12:09 IST
    நாகை த.வெ.க.,வில் தொடரும் கருத்து மோதல்

    நாகையில் இரு பிரிவாக செயல்படும் த.வெ.க நிர்வாகிகளால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மாவட்ட செயலாளர் சுகுமாறன் மற்றும் புதிதாக இணைந்த சேகர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்ட செயலாளர் புகைப்படம் இன்றி மற்றொரு பிரிவினர் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியில் புதிதாக இணைந்த சேகர் தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. அதேநேரம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற இருந்த கூட்டம், நிர்வாகிகள் வராததால் ரத்து செய்யப்பட்டுள்ளது



  • Jan 05, 2025 12:06 IST
    டங்ஸ்டன் திட்டத்தை ரத்துச் செய்ய கோரி போராட்டம்

    டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்களை கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்



  • Jan 05, 2025 11:28 IST
    அரசு மருத்துவமனையில் ஆய்வு

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமைனையில் ஆய்வு மேற்கொண்ட திருச்சி எம்.பி., துரை வைகோ. மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும், நவீன சிகிச்சைகளுடன் மருத்துவமனை மேம்பட்டுக்கான வழிமுறைகள் குறித்தும் துரைமுருகன் கேட்டறிந்தார்.



  • Jan 05, 2025 11:23 IST
    சிமெண்ட் மூட்டை ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து விபத்து

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி, தீப்பிடித்து விபத்து லாரியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.



  • Jan 05, 2025 11:21 IST
    6 மணி நேர மருத்துவ கண்காணிப்பு அவசியம்

    மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 6 மணி நேரம் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



  • Jan 05, 2025 10:09 IST
    கரடி தாக்கி முன்னாள் ராணுவ வீரர் பலி

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கரடி தாக்கியதில் முன்னாள் ராணுவ வீரர் பலியானார்.  சிதம்பரம் விலக்கு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சென்றாய பெருமாள் மனைவியுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். வீட்டிற்கு காய்கறி வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது கரடி தாக்கியதாக கூறப்படுகிறது. கரடியிடம் இருந்து தப்பிக்க போராடியபோது, கண்களை தாக்கியதால் சென்றாய பெருமாள் நிலை குலைந்து கீழே விழுந்தார். அவரது உயிர்போகும் வரை தாக்கிய கரடி, பின்னர் காட்டுக்குள் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. சென்றாயபெருமாள் உடல், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.



  • Jan 05, 2025 10:05 IST
    பக்தரிடம் செல்போன் ஒப்படைக்கப்படும்

    திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த செல்போன், உரிய நபரிடம் இன்று ஒப்படைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.



  • Jan 05, 2025 10:00 IST
    திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

    விடுமுறை நாளையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். புத்தாண்டின் முதல் வளர்பிறை சஷ்டியையொட்டி திருச்செந்தூர் கோயிலில் ஏராளமானோர் வழிபாடு நடத்தினர். சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



Trichy Madurai kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment