Coimbatore, Madurai, Trichy News Live: தஞ்சை, சி.பி.எஸ்.இ மாணவர்கள் விவகாரத்தில் திடீர் திருப்பம்

Coimbatore, Madurai, Trichy News Live Updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CBSE Students

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்திற்கு கல்வி நிதி தராத மத்திய அரசைக் கண்டித்து, தி.மு.க கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Feb 18, 2025 23:46 IST

    சி.பி.எஸ்.இ மாணவர்கள் விவகாரத்தில் திடீர் திருப்பம்

    தஞ்சையில், சி.பி.எஸ்.இ அங்கீகாரம் இல்லாமல் பாதிக்கப்பட்ட  தனியார் பள்ளி மாணவர்கள் 19 பேர் மாநில பாடப்பிரிவில் தேர்வு எழுதுகின்றனர். பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இவர்கள் சிறப்பு வகுப்புகள் மூலம் தேர்வுக்கு தயார் செய்யப்பட்டு வருகின்றனர். 



  • Feb 18, 2025 21:42 IST

    த.வெ.க அலுவலகம் இடிப்பு

    திருவள்ளூரில், ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழக அலுவலகம் இடிக்கப்பட்டது. இத்துடன் சேர்த்து 17 கடைகள் மற்றும் வீடுகளையும் நெடுஞ்சாலை துறையினர் இடித்து அகற்றினர்.



  • Advertisment
    Advertisements
  • Feb 18, 2025 21:21 IST

    2-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

    திருச்சியில் 2-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Feb 18, 2025 20:16 IST

    சிறாருக்கு 20 ஆண்டுகள் சிறை

    2022ம் ஆண்டு பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சிறாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, வேலூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ரூ. 23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



  • Feb 18, 2025 19:11 IST

    அமித்ஷாவுக்கு கருப்புக் கொடி காட்ட முடிவு!

    பிப்ரவரி 25 ஆம் தேதி கோவைக்கு வரும் ஒன்றிய  உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கருப்புக் கொடி காட்ட பெரியாரிய அமைப்புகள் முடிவு செய்துள்ளனர். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு, அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசியது உள்ளிட்டவற்றிற்காக கருப்புக் கொடி காட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.



  • Feb 18, 2025 18:34 IST

    மருதமலை முருகன் கோயிலிலுக்கு கார்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை: கோயில் நிர்வாகம்

    கோவை மருதமலை முருகன் கோயிலுக்கு பிப்.20-ஏப்.06ம் தேதி வரை கார்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும், பிப்.20- ஏப்.06 ஆம் தேதி வரை செவ்வாய், ஞாயிறு, கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பைக்கில் செல்ல அனுமதியில்லை மலைப்படிகள் வழியாகவும், கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.04ம் தேதி திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டி கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.



  • Feb 18, 2025 17:56 IST

    பாலியல் வன்கொடுமை - அன்புமணி கண்டனம்

    "பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறுவதை தடுத்து நிறுத்தவேண்டும்" என்று கோவை அருகே சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

     



  • Feb 18, 2025 17:17 IST

    தங்கச்சிமடத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ரூ.360 கோடி ஒதுக்கீடு - ஸ்டாலின் உத்தரவு

    ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மீன்பிடி துறைமுகம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

    தங்கச்சிமடம் மீன் இறங்குதளத்தை மீன்பிடி துறைமுகமாக தரம் உயர்த்தவும், குந்துகால் மீன் இறங்குதளத்தை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாம்பன் வடக்கு மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்தல் ஆகிய பணிகளுக்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இன்று காலை மீனவ சங்க பிரதிநிதிகள் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்த நிலையில் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.



  • Feb 18, 2025 16:45 IST

    சிறையில் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா விற்ற புகார்; காவலர் சஸ்பெண்ட்

    சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு செல்போன் மற்றும் கஞ்சா விற்ற புகாரில், அங்கு பணியாற்றும் முதல்நிலை காவலர் சரவணகுமாரை (35) தற்காலிக பணியிடை நீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டுள்ளார் 



  • Feb 18, 2025 16:18 IST

    சிறுமி பாலியல் வன்கொடுமை - எல்.முருகன் கண்டனம்

    17 வயது சிறுமியை, கல்லூரி மாணவர்கள் 7 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. வயது வித்தியாசம் இன்றி பெண்களுக்கு எதிராக நிகழும் கொடூரக் குற்றங்களுக்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்



  • Feb 18, 2025 15:36 IST

    நெல்லை ‘பொருநை’ அருங்காட்சியக பணிகள்; அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

    நெல்லையில் 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.33 கோடி செலவில் அமையும் ‘பொருநை’ அருங்காட்சியகத்தின் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். வரும் ஏப்ரல் மாதம் முதலமைச்சரால் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்படும் என கூறப்படுகிறது



  • Feb 18, 2025 15:05 IST

    பறவை காய்ச்சல் எதிரொலி - ஆட்சியர் நேரில் ஆய்வு

    ஆந்திராவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் பண்ணைகளுக்கு நேரில் சென்று ஆட்சியர் உமா ஆய்வு மேற்கொண்டார்



  • Feb 18, 2025 14:32 IST

    கோவையில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - இ.பி.எஸ் கண்டனம்

    “கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானோர் மீடு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியின் பாதுகாப்பு பறிபோனதற்கு யார் பொறுப்பு” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  கேள்வி எழுப்பியுள்ளார்.

     



  • Feb 18, 2025 14:27 IST

    மதுரை, திருச்சி டைடல் பூங்கா - அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்

    மதுரை மாட்டுத்தாவணி மற்றும் திருச்சி பஞ்சப்பூரில் அமையவுள்ள டைடல் பூங்காக்களூக்கு இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். திருச்சியில் ரூ.413 கோடி மதிப்பீட்டில் 5.58 லட்சம் சதுர அடி பரப்பளவிலும் மதுரையில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் 5.34 லட்சம் சதுர அடி பரப்பளவிலும் டைடல் பூங்கா அமைய உள்ளது.



  • Feb 18, 2025 12:43 IST

    கூட்டு பாலியல் வன்கொடுமை - கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

    கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளம் மூலம் பழகிய நபர் குனியமுத்தூரில் உள்ள தனது அறைக்கு சிறுமியை அழைத்துச் சென்று கூட்டாக பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர். உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 கல்லூரி மாணவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.



  • Feb 18, 2025 11:57 IST

    தஞ்சாவூர் - பாமகவினர் சாலை மறியல்

    தஞ்சாவூர் - மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் உள்ள நெய்க்குப்பை என்ற கிராமத்தில் பாமக கொடிக்கம்பம் மீது கார் மோதியதைக் கண்டித்து  பாமகவினர் சாலை மறியல்லில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை, வேண்டுமென்றே மர்ம நபர்கள் காரைக் கொண்டு மோதி கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு. போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர். 



  • Feb 18, 2025 11:47 IST

    வளர்ப்பு நாய், தெருவில் சென்றவர்களை கடித்ததில் 6 பேர் காயம்

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சி பகுதியில் வீட்டு வளர்ப்பு நாய், தெருவில் சென்றவர்களை கடித்ததில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் காங்கேயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • Feb 18, 2025 11:28 IST

    மகனை தேடி ஓடிய தாய்.. பாலியல் தொல்லை கொடுத்த தந்தை, மகன்

    திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதுடன் அதை தடுக்க வந்த தந்தையை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்ட பெண், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த பெண், தனது மகனை தேடிச் சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த திம்மராயன் என்பவரும், அவரது மகன் அருண்குமாரும் பாலியல் தொந்தரவு கொடுத்து தவறாக நடக்க முயன்றதாக குறிப்பிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த தனது தந்தையை அவர்கள் கத்தியால் தாக்கியதாகவும் கூறியுள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



  • Feb 18, 2025 11:24 IST

    காணொலி வாயிலாக அடிக்கல்

    மதுரை, திருச்சியில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் பார்க் கட்டிடத்திற்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • Feb 18, 2025 11:14 IST

    இந்திய மாணவர் சங்கத்தினரை தடுத்து நிறுத்தி எச்சரித்த போலீசார்

    திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் தொடர்பாக அனுமதியின்றி துண்டு பிரசுரம் வழங்கிய இந்திய மாணவர் சங்கத்தினரை தடுத்து நிறுத்தி எச்சரித்துள்ளனர் போலீசார். 



  • Feb 18, 2025 11:06 IST

    உயிரை மாய்த்துக்கொள்ள இருந்த முதியவரை காப்பாற்றிய புகைப்படக் கலைஞர்

    குடும்பத்தினர் கைவிட்ட விரக்தியில் கன்னியாகுமரி கடலில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்த கேரளாவைச் சேர்ந்த 90 வயது முதியவரை துரிதமாக செயல்பட்டு ஒரு புகைப்படக் கலைஞர் தங்கராஜ் காப்பாற்றியுள்ளார். முக்கடல் சங்கமம் பகுதியில் கடலில் இருக்கும் பாறையில் ஏறி கடலில் குதிக்க இருந்த முதியவரை கரைக்கு கூட்டி வந்த தங்கராஜ், ஆறுதலாகப் பேசி உணவு வாங்கிக்கொடுத்து, விபரங்களை கேட்டறிந்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.



  • Feb 18, 2025 10:27 IST

    கோயில் திருவிழாவில் கறி விருந்து

    நத்தம் அருகே கோயில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து 50 ஆடுகள், 100 மூட்டை அரிசியில் சமைக்கப்பட்ட உணவு பரிமாறப்பட்டது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர். 



  • Feb 18, 2025 10:26 IST

    கடைசி நேரத்தில் ஹால் டிக்கெட் தர மறுப்பு

    காஞ்சிபுரம் காரப்பேட்டை மீனாட்சி மருத்துவ கல்லூரியில் தேர்வுக்கு கடைசி நேரத்தில் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் தராமல் இழுத்தடிக்கப்பட்டது. கட்டண நிலுவை இருப்பதாக கூறி அத்துமீறலில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.



  • Feb 18, 2025 09:57 IST

    உலக சாதனை படைத்த சிறுமி

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி நிலானி, ஒற்றை கையில் 30 பரதநாட்டிய முத்திரைகளை 30 வினாடிக்குள் சொல்லி வேர்ல்ட் வைட் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று அசத்தியுள்ளார்.



  • Feb 18, 2025 09:36 IST

    இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவாக காரைக்காலில் கடையடைப்பு

    இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவாக காரைக்காலில் கடையடைப்பு நடத்தப்பட்டது. 10,000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடின. 



  • Feb 18, 2025 09:28 IST

    போக்சோவில் உதவி தலைமை ஆசிரியர் கைது

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி தலைமை ஆசிரியர் பெருமாள்(58) போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகள் அளித்த புகாரின் பேரில், அவர் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை. விசாரணைக்குப் பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.



  • Feb 18, 2025 09:27 IST

    ஆட்டு சந்தையில் விற்பனை அமோகம்

    மகாசிவராத்திரியை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை அமோகம். அதிக மக்கள் வாங்குவதால் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதிகாலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.12,000-க்கும், 20 கிலோ எடை கொண்ட கிடா ரூ.23,000 என விற்பனை செய்யப்பட்டது.



  • Feb 18, 2025 09:20 IST

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; உதவி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் (58) போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகள் அளித்த புகாரின் பேரில், அவர் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 



Madurai Coimbatore Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: