/indian-express-tamil/media/media_files/2024/10/19/fDb36VXN7SQE0TOi6n0g.jpg)
கீழடி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். சென்னையில் இன்று (ஜனவரி 23) நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதன்படி கீழடி அகழாய்வுத் தளத்தில் ரூ.17 கோடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தில் ரூ.22 கோடியில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. கீழடி இணையதளத்தை தொடங்கி வைத்து 'இரும்பின் தொன்மை' என்ற நூலையும் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ தொடங்கியுள்ளது. முன்னதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை அடுத்து வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது.
-
Jan 23, 2025 19:00 IST
ரூ. 9000 லஞ்சம் வாங்கிய நில அளவையாளர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்க, ரூ. 9000 லஞ்சம் வாங்கிய நில அளவையாளர் குமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இடைத்தரகராக செயல்பட்ட சுஹேல் என்பவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
Jan 23, 2025 18:15 IST
டங்ஸ்டன் திட்டம் ரத்து - பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அரிட்டாப்பட்டி மக்களுக்கு மறக்க முடியாத வெற்றி. வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ வழி செய்திருக்கிறார்கள். மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து இனிப்பு வழங்கி அரிட்டாப்பட்டி மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
Jan 23, 2025 17:38 IST
'மதுரையில் டங்ஸ்டன் திட்டம் கைவிடப்படுகிறது' - மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மதுரையில் டங்ஸ்டன் திட்டம் முழுமையாக கைவிடப்படுகிறது என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
Jan 23, 2025 17:13 IST
பொள்ளாச்சி: காட்டு யானை தாக்கியதில் பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
மின்வாரிய ஊழியர்கள் சென்ற வாகனத்தை வழிமறித்து யானை தாக்கியதில் 10 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது. ஜீப்பில் பயணித்த மின்வாரிய ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
-
Jan 23, 2025 15:38 IST
அரசு அனுமதியின்றி மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் மகிழினி மெடிக்கலில் உரிய கல்வித்தகுதி இன்றியும், அரசு அனுமதியின்றியும் மருத்துவம் பார்த்து வந்த வி.பி.அகரம் கிராமத்தை சேர்ந்த அசோக் என்ற போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மெடிக்கலில் இருந்த மருத்துவப் பொருட்களை பறிமுதல் செய்த வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
Jan 23, 2025 14:01 IST
கோவில்பட்டியில் அதிமுக எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜு பேட்டி
அதிமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுதான் எங்கள் வரலாறு. கூட்டணி முடிவை பொதுச் செயலாளர்தான் எடுப்பார், அனைவரும் அவரது முடிவுக்கு ஒத்துழைப்போம் என்று கோவில்பட்டியில் அதிமுக எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜு பேட்டியளித்துள்ளார்.
-
Jan 23, 2025 13:16 IST
திருச்சியில் ரூ.3 கோடியில் நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம்
இந்த ஆண்டு சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைப்பதற்கான அரசாணையை அமைச்சர் அன்பில் மகேஷ் விழா குழுவினரிடம் வழங்கினார். திருச்சி பெரிய சூரியூரில் ரூ.3 கோடி செலவில் இந்த ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுகள் விளையாடும் வகையில் ஒருங்கிணைந்த விளையாட்டு திடலாக இது அமையும்.
-
Jan 23, 2025 13:14 IST
திண்டுக்கல்லில் உண்ணி காய்ச்சல் பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 8 பேருக்கு உண்ணி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், வேடந்தூர், நிலக்கோட்டை, நத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த காய்ச்சல் பரவி வருகிறது.
-
Jan 23, 2025 13:10 IST
தூத்துக்குடி மாவட்டம் - நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தை ஒட்டி, அங்கு விண்வெளி தொழிற்பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், ஆதியாக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,376 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தி கடந்தாண்டு ஜூனில் இஸ்ரோவிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து, அங்கு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
-
Jan 23, 2025 12:56 IST
திருச்செந்தூர் கடல் அரிப்பு குறித்து ட்ரோன் மூலம் ஆய்வு
திருச்செந்தூர் கடல் அரிப்பு குறித்து ட்ரோன் மூலம் ஆய்வு நடந்து வருகிறது. திருச்செந்தூரில் 50 அடி தூரத்திற்கு கடல் அரிப்பு கடல் அரிப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து தேசிய கடலோர ஆராய்ச்சி மைய குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
-
Jan 23, 2025 12:34 IST
நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழு 2வது நாளாக ஆய்வு
திருவாரூர் மாவட்டம் கோவில்வெண்ணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழு 2வது நாளாக ஆய்வு நடத்தியது. பூவர்நாதம், சோளப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
-
Jan 23, 2025 12:00 IST
மதுரையில் சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது மோதிய சரக்கு வாகனம்; சம்பவ இடத்திலேயே மனைவி மரணம்
மதுரை அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கணவர், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சிசிடிவியில் பதிவான விபத்தின் அதிர்ச்சி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. விபத்திற்கு காரணமான சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது
-
Jan 23, 2025 11:27 IST
வர்சினி பிரியா - கனகராஜ் ஆணவக் கொலை வழக்கு; குற்றவாளி வினோத்குமாருக்கு மரண தண்டனை
மேட்டுப்பாளையம் வர்சினி பிரியா - கனகராஜ் ஆணவக் கொலை (இரட்டைக் கொலை) வழக்கில் குற்றவாளி வினோத்குமாருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது
-
Jan 23, 2025 11:01 IST
வர்சினி பிரியா - கனகராஜ் ஆணவக் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த, வர்சினி பிரியா - கனகராஜ் ஆணவக் கொலை (இரட்டைக் கொலை) வழக்கில் இன்று தீர்ப்பு. கனகராஜன் சகோதரர் வினோத்குமார் தனது கூட்டாளிகளின் உதவியோடு கணகராஜ் மற்றும் வர்சினி பிரியா இருவரையும் வெட்டி படுகொலை செய்தார்.
இந்த வழக்கில் வினோத்குமார் A1 குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில், ஐயப்பன், கந்தவேலு, சின்ராஜ் உள்ளிட்ட வரும் வழக்கில் தொடர்புடையவர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியான விவேகானந்தன் அவர்கள் தீர்ப்பு வழங்க உள்ளார்.
-
Jan 23, 2025 10:27 IST
வாக்கு சாவடி அலுவலர்கள் நேரில் சென்று தபால் வாக்குகள் பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த், பணிகளை தொடங்கி வைத்தார். 85வயது மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு இன்று முதல் 27ம் தேதி வரை வாக்கு சாவடி அலுவலர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் வாக்குகளை பதிவு செய்கின்றனர்
-
Jan 23, 2025 09:32 IST
இன்று முதல் தபால் வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்று முதல் தபால் வாக்குப்பதிவு தொடங்குகிறது.
இன்று முதல் 27ம் தேதி வரை வாக்கு சாவடி அலுவலர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் வாக்குகளை பதிவு செய்கின்றனர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.