/indian-express-tamil/media/media_files/2025/01/19/CYHZeMkocRECRy8HrgTu.jpg)
தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (19-01-2025) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 55 பேர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நாளை (திங்கட்கிழமை) வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Jan 19, 2025 17:21 IST
இன்ஸ்டாகிராம் வீடியோவால் ஏற்பட்ட சிக்கல்
கோவை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவர் புலிநகம் அணிந்திருப்பதாக கூறிய நிலையில், அவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. இதில் அவர் வீட்டில் இருந்து மான் கொம்புகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
-
Jan 19, 2025 16:52 IST
வேலூர் பா.ஜ.க நிர்வாகிகள் விலகல்
வேலூர் மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். மாநில தலைமையின் முடிவில் உடன்பாடு இல்லாததால், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
-
Jan 19, 2025 16:26 IST
தேர்தலில் போட்டி - அ.தி.மு.க நிர்வாகி நீக்கம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அ.தி.மு.க நிர்வாகி செந்தில் முருகன் என்பவரை, கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
Jan 19, 2025 15:11 IST
4 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணங்கள் பறிமுதல்
திருச்சி விமானநிலையத்தில் இருந்து நேற்று வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற 4 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
-
Jan 19, 2025 14:35 IST
பட்டியலின சிறுவன் மீது சிறுநீர் கழிப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பட்டியலின சிறுவன் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை சம்பவம் நடைபெற்றுள்ளது. முன்பகை காரணமாக கடத்தி சென்று சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்ததாக உசிலம்பட்டி டி.எஸ்.பி அலுவலகத்தில் சிறுவன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
-
Jan 19, 2025 14:12 IST
தை மாதத்தின் முதல் முகூர்த்தம் - திருச்செந்தூர் கோயிலில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள்
மார்கழி முடிந்து தை மாதத்தின் முதல் முகூர்த்தம் இன்று மட்டுமே என்பதால் திருச்செந்தூர் கோயிலில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது. மேலும் பொங்கல் விடுமுறையின் கடைசி நாள் என்பதால் பக்தர்களும் அதிகளவில் குவிந்தனர்
-
Jan 19, 2025 13:39 IST
பட்டியலின சிறுவனுக்கு கொடுமை - வழக்குப் பதிவு
மதுரை உசிலம்பட்டியில் 17 வயது சிறுவனை கொடுமைப்படுத்தியதாக 6 பேர் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயது சிறுவனை அடித்து 6 வயது சிறுவனின் காலில் விழ வைத்து கொடுமை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
Jan 19, 2025 13:33 IST
நெல்லை மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
நெல்லை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Jan 19, 2025 12:28 IST
வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அமைச்சர்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து வீடுவீடாக சென்று அமைச்சர் முத்துசாமி வாக்கு சேகரித்தார்.
-
Jan 19, 2025 11:44 IST
குடமுழுக்கு திராளான பக்தர்கள் பங்கேற்பு
உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு கிராமத்தில் உள்ள பழமையான திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
-
Jan 19, 2025 11:43 IST
திருத்தணியில் மழை
திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. திருத்தணி முருகன் கோயில் படிக்கட்டுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பச்சரிசி மலையில் இருந்து ஆறுபோல் ஓடிவந்த மழைநீர் கனமழையால், முருகனை தரிசிக்க சென்ற பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். சரவணப்பொய்கை குளம் அருகே மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின.
-
Jan 19, 2025 11:27 IST
கல்லூரி மாணவன் கைது
கொடைக்கானல், பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில், கஞ்சா செடியை வளர்த்து, விற்க முயன்ற கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மாணவன் மீது போதை பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jan 19, 2025 10:14 IST
இந்த தேர்தல் ஒரு வாய்ப்பு - அமைச்சர் முத்துசாமி
“தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பதை விட மக்களுக்கு உள்ள பிரச்னைகளைக் கேட்டறிந்து தீர்ப்பதற்கான நடவடிக்கையை எடுக்கச் சொல்லி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த அடிப்படையில் இந்த தேர்தலை ஒரு வாய்ப்பாகக் கருதி தொகுதியில் மக்களை நேரடியாகச் சந்தித்து வருகின்றோம்.." என ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டியளித்தார்.
-
Jan 19, 2025 09:35 IST
ஈரோடு கிழக்கு- நாளை இறுதி வேட்பாளர் பட்டியல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வேட்பு மனுக்கனை வாபஸ் பெற நாளை கடைசி நாள் என்பதால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வெளியிடப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.