/indian-express-tamil/media/media_files/2025/02/02/m1fqPLLNKewJV3QxMyDQ.jpg)
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடைபெறும் சாரணர் இயக்க வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி மாநாடு நிறைவு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கால்நடைகளை பலியிட தடை கோரிய மனு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
-
Feb 02, 2025 20:44 IST
அ.தி.மு.க-வில் போலி உறுப்பினர் சேர்க்கை - மதுரை அ.தி.மு.க நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு
மதுரை மாநகராட்சி அ.தி.மு.க 15வது வார்டு வட்டச் செயலாளர் உதயகுமார், அ.தி.மு.க தலைமையின் நெருக்கடி காரணமாக மதுரையில் போலி உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ளார். கட்டுக்கட்டாக உறுப்பினர் அட்டைகளை வைத்துக்கொண்டு ஆதாரங்களுடன் உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
-
Feb 02, 2025 18:24 IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நா.த.க வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 51 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உரிய அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
Feb 02, 2025 17:35 IST
சாரண, சாரணியர் இயக்க வைர விழா - ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
திருச்சியில், பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழாவின் நிறைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
Feb 02, 2025 16:45 IST
திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபத்தில் ஸ்டாலின் மரியாதை
திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர், ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதர் மணிமண்டபங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மணிமண்டபங்களின் உட்புறப் பகுதிகளில் அவர்களது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்படங்கள், ஓவியங்களை வைக்கவும், வெளியே உள்ள புதர்களை நீக்கி அங்கே பூச்செடிகளை நட்டு உரிய முறையில் பராமரித்திடவும் மாவட்ட ஆட்சியருக்கு ஸ்டாலின் உத்தரவிட்டார்.
-
Feb 02, 2025 15:21 IST
அதிக விளையாட்டு வீரர்களை கொண்டது ராமநாதபுரம் - உதயநிதி ஸ்டாலின்
ராமநாதபுரத்தில் கபடி வீரர்களுக்கான காப்பீடு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "மற்ற மாவட்டங்களை விட ராமநாதபுரம் முன்னோடியான மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. ராமநாதபுரம் அதிகமான விளையாட்டு வீரர்களை கொண்ட மாவட்டம்; அதிகப்படியான கபடி வீரர்களை உருவாக்கும் மாவட்டம் இது" எனக் கூறினார்.
-
Feb 02, 2025 14:52 IST
ஜெராக்ஸ் கடை நடத்திவரும் மாற்றுத்திறனாளி முதல்வரிடம் மனு
திருச்சி மாவட்டம் துறையூரில் ஜெராக்ஸ் கடை நடத்திவரும் மாற்றுத்திறனாளியான செல்வம் என்பவர் தன்னுடைய தொழில் வளர்ச்சிக்காக இன்வெர்ட்டர் உள்ளிட்ட பொருட்களை அரசு சார்பில் வழங்க வேண்டும் என கோரி இன்று திருச்சி விமான நிலையம் வந்த முதலமைச்சரை சந்தித்து மனு அளித்தார்.
-
Feb 02, 2025 14:04 IST
கோவை மெட்ரோ ரயில்; நிலம் கையகப்படுத்த முதற்கட்டமாக ரூ.154 கோடி ஒதுக்கீடு
கோவை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளில் நிலம் கையகப்படுத்த முதற்கட்டமாக ரூ.154 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
-
Feb 02, 2025 13:19 IST
மாட்டு வண்டியில் பயணித்த ராதிகா சரத்குமார்
பா.ஜ.க சார்பில் நடைபெற்ற "மோடி ரேக்ளா 2025" போட்டியில் நடிகை ராதிகாவை விழா ஏற்பாட்டாளர்கள் மாட்டு வண்டியில் அழைத்து வந்தனர்
-
Feb 02, 2025 12:48 IST
தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க என்ற பெயரை தவிர்க்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்
பட்ஜெட்டில் மத்திய அரசு எப்படி தமிழ்நாட்டின் பெயரை தவிர்த்ததோ, அதுபோல தமிழ்நாட்டு மக்கள் பாஜக என்ற பெயரை தவிர்க்க வேண்டும் என ராமநாதபுரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்
-
Feb 02, 2025 12:41 IST
ராமநாதபுரத்தில் 2 பறவைகள் சரணாலயங்கள் ராம்சர் தளங்களாக அறிவிப்பு - மு.க.ஸ்டாலின்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்கரக்கோட்டை மற்றும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயங்கள் ராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
-
Feb 02, 2025 12:08 IST
தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் – நா.த.க.,வினர் இடையே மோதல்
சீமானை பா.ஜ.க வடிவில் சித்தரித்து துண்டு பிரசுரம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தந்தை பெரியார் திராவிட கழகத்தினருடன் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது
-
Feb 02, 2025 10:20 IST
ராமநாதபுரத்தில் விளையாட்டு வீரர்களை வாழ்த்தி நலத்திட்ட உதவிகள்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடைபெறும் விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு வீரர்களை வாழ்த்தி நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
-
Feb 02, 2025 10:11 IST
ஈரோடு தேர்தல்- தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள். மக்களை சந்திக்கும் வலிமையற்ற அதிமுக, பா.ஜ.க வழக்கம்போல் அவதூறுகளை கூறுகின்றன. தமிழகத்திற்கு பாடுபடும் தி.மு.க அரசையும் வஞ்சிக்கும் மத்திய அரசையும் மக்கள் அறிந்துள்ளனர்.
-
Feb 02, 2025 09:37 IST
அஜீத்குமாருக்கு பாராட்டு விழா வேண்டும் - யோகி பாபு
"பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும். அஜித்குமார் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார், அனைவரும் பாராட்ட வேண்டும்"- நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
-
Feb 02, 2025 09:35 IST
காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்
கன்னியாகுமரி - கேரள எல்லை சோதனைச் சாவடிகளில், கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை பரிசோதிப்பதில் அலட்சியம் காட்டிய புகாரில், அருமனை காவல் ஆய்வாளர் கங்கைநாத பாண்டியனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
Feb 02, 2025 09:35 IST
கோவை: மகன் கைது - காவல்நிலையம் முன் தந்தை தீக்குளிப்பு
கோயம்புத்தூரில் பொய் வழக்கில் மகனை கைது செய்ததாக காவல்நிலையம் முன் முன் தந்தை தீக்குளித்து உயிரிழப்பு. கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக மகன் மணிபரத்தி கைது செய்ததை கண்டித்து தந்தை சேகர் காவல் நிலையத்தில் தீக்குளித்துள்ளார்.
-
Feb 02, 2025 09:32 IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 479 கன அடியில் இருந்து 491 கன அடியாக உயர்ந்தது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி வெளியேற்றம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.