Advertisment

Coimbatore, Madurai, Trichy News: ஆன்லைன் ரம்மி காரணமாக ஆண்டிபட்டி இளைஞர் தற்கொலை

Coimbatore, Madurai, Trichy News Live Updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rummy suicide

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில், சி.பி.சி.ஐ.டி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், சி.பி.ஐ விசாரணை வேண்டும் என வி.சி.க தலைவர் திருமாவளவன் கோரியுள்ளார்.

Advertisment

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை பொய்யாவயல் உயர்நிலைப்பள்ளி சக்தி சோமையா (14) என்ற 9 ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

  • Jan 25, 2025 18:15 IST

    ஆன்லைன் ரம்மி காரணமாக ஆண்டிபட்டி இளைஞர் தற்கொலை

    ஆண்டிபட்டியைச் சேர்ந்த கணபதி என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்பட்ட கடனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



  • Jan 25, 2025 17:08 IST

    தமிழில் மந்திரங்கள் - நீதிமன்றம் உத்தரவு

    கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓத அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், இந்து சமய அறநிலையத்துறை பரிசீலித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Advertisment
    Advertisement
  • Jan 25, 2025 16:45 IST

    ராமநாதபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மூடல்

    ராமநாதபுரம் மாவட்டம், பெருமானேந்தல் பகுதியில் நேற்று புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை இன்று மூடப்பட்டது. டாஸ்மாக்கை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், தாசில்தார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் டாஸ்மாக் மூடப்பட்டது.



  • Jan 25, 2025 16:03 IST

    நெல்லை அரசு மருத்துவமனையின் மனிதநேயமற்ற செயல் - அன்புமணி கண்டனம்

    இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் வைத்து 18 கி.மீ மகன் கொண்டு சென்ற விவகாரத்தில், இது நெல்லை அரசு மருத்துவமனையின் மனிதநேயமற்ற செயல் என விமர்சித்துள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மருத்துவமனை மீது விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளார்



  • Jan 25, 2025 15:35 IST

    முதல்வர் நாளை மேலூருக்கு வருவது நாடகத்திற்காக தான் – செல்லூர் ராஜூ

    டங்ஸ்டன் சுரங்கம் குறித்து 10 மாத காலமாக இந்த அரசு சும்மா இருந்துவிட்டு, ரத்து செய்யப்பட்ட பின் முதல்வர் நாளை மேலூருக்கு வருவது நாடகத்திற்காக தான் என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்



  • Jan 25, 2025 15:04 IST

    அமைச்சர் ரகுபதிக்கு உடல் நலக்குறைவு; திருச்சி மருத்துவ மனையில் அனுமதி

    சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உடல் நலக்குறைவு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற போது தலைச்சுற்றல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்



  • Jan 25, 2025 14:41 IST

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; சீமான் பரப்புரைக்கு எதிர்ப்பு!

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி, தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சீமானுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்



  • Jan 25, 2025 14:37 IST

    வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக மீண்டும் முதல்வரை சந்தித்து வலியுறுத்துவேன் - திருமாவளவன்

    வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக மீண்டும் முதல்வரை சந்தித்து வலியுறுத்துவேன். இந்த விவகாரம் தொடர்பாக வரும் 27ம் தேதி சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்



  • Jan 25, 2025 14:11 IST

    வேங்கைவயல் குறித்து விஜய் பேசவில்லை - திருமாவளவன்

    வேங்கைவயலுக்கு த.வெ.க தலைவர் விஜய் நேரில் செல்வதாக தகவல் வந்தது, அதற்கு நான் ஆதரவு தெரிவித்தேன். ஆனால் வேங்கைவயல் குறித்து தவெக தலைவர் விஜய் எதுவும் பேசவில்லை என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்



  • Jan 25, 2025 13:55 IST

    மாணவர் மரணம் - தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

    கொய்யவயல் அரசுப்பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் மற்றும் வகுப்பு ஆசிரியர் பாண்டி முருகன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். 



  • Jan 25, 2025 13:46 IST

    வேங்கைவயல் வழக்கை, சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும் - அண்ணாமலை கோரிக்கை

    வேங்கைவயல் வழக்கில் 3 பேர் மீது குற்றப்பத்திரிக்க்கை தாக்கல் செய்திருந்தது சிபிசிஐடி. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்று உத்தரவிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். 



  • Jan 25, 2025 13:39 IST

    வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்- டி.டி.வி தினகரன் பேட்டி

    காவல்துறை எந்தவித அழுத்தமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடப்பாடி மீதான  அதிருப்தியில் திமுக வை நம்பிய மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று டி.டி.வி தினகரன் பேட்டியளித்துள்ளார். 



  • Jan 25, 2025 13:36 IST

    வேங்கைவயலுக்கு தடையை மீறி செல்ல முயன்ற இருவர் கைது!

    வேங்கைவயல் கிராமத்திற்கு தடையை மீறி செல்ல முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிவா உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  



  • Jan 25, 2025 13:17 IST

    மதுரை ஆதீனத்தை கைது செய்துள்ளனர்

    திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதாக இருந்த மதுரை ஆதீனத்தை கைது செய்து மடத்திலேயே தங்க வைத்திருக்கிறார்கள். நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 



  • Jan 25, 2025 13:05 IST

    வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் -தமிழ்நாடு அரசு

    வேங்கைவயல் சம்பவத்தில், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அது தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. 



  • Jan 25, 2025 12:55 IST

    கடல் அரிப்பால் சேதமடைந்த சீரமைக்க ஆய்வு கூட்டம்.

    திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பால் சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நடைபெற்றுது. 



  • Jan 25, 2025 12:42 IST

    கல்விக் கடன் பற்றி அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

    கல்விக் கடனில் 18 வயது நிரம்பியவர்களுக்கு உத்தரவாத கையொப்பமிடும் முறையை ரத்து செய்வது தொடர்பாக, முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாமில் பங்கேற்று பேசியபோது, அவர் இவ்வாறு கூறினார். இந்திய அளவில் உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். 



  • Jan 25, 2025 12:29 IST

    40 டன் ராட்சத பாறை அகற்றம்

    திருவண்ணாமலை தீபமலையில் ஆபத்தாக இருந்த 40 டன் ராட்சத பாறை, முழுமையாக உடைக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது. பிரேக்கர் இயந்திரம் மூலம் பாறைகள் துண்டு துண்டாக உடைக்கப்பட்டு டிராக்டர் மூலமாக கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. 



  • Jan 25, 2025 12:10 IST

    தென் மாநில அணிகளுக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன - தமிழக கபடி அணி மேலாளர்

    தமிழக அரசு கேட்டுக்கொண்டதால்  பஞ்சாப் அரசு உரிய பாதுகாப்புகளை வழங்கியது. வீராங்கனைகளுக்கு அணைத்து உதவிகளையும் அணைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கியது. தமிழக துணை முதல்வர், அதிகாரிகள் நேரடியாக தொடர்பு கொண்டு வழிகாட்டினார். வாடா மாநிலங்களில் தென் மாநில அணிகளுக்கு பிரெச்சனைகள் ஏற்படுகின்றன என்று தமிழக கபடி அணி மேலாளர் கூறியுள்ளார். 



  • Jan 25, 2025 11:37 IST

    விடுதலை சிறுத்தைகள் போராட்டம் அறிவிப்பு

    விடுதலை சிறுத்தைகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்ததால்  வேங்கைவயலில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ள. கிராமத்திற்குள் நுழையும் பகுதியான வெள்ளனூரில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



  • Jan 25, 2025 11:20 IST

    திருப்பூர்: புத்தகக் கண்காட்சியில் அடிதடி

    மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் என கருபழனியப்பன் கூறிய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. அதற்கு கண்டனம் தெரிவித்த ஆர்.எஸ்.எஸ் மாவட்ட தலைவர் மோகனசுந்தரத்தை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி இந்து முன்னணி பாஜக நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



  • Jan 25, 2025 10:54 IST

    வேங்கைவயல் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்

    வேங்கைவயல் வழக்கில் காவல்துறை குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்க கூடாது. வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என திருமாவளவன் வலியிறுத்தியுள்ளார்.



  • Jan 25, 2025 09:48 IST

    டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து: முதலமைச்சருக்கு நாளை பாராட்டு விழா

    மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டப்பட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை செல்கிறார். பாராட்டு விழாவில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போராட்டக் குழுவினர் இன்று அழைப்பு விடுக்க உள்ளனர். தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை அடுத்து டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டது.



  • Jan 25, 2025 09:45 IST

    பக்தர்களுக்கு பிரியாணி அன்னதானம்..!

    மதுரை வடக்கம்பட்டி முனியாண்டி கோயிலில் பிரியாணு தயாரான நிலையில் விடிய விடிய பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.



  • Jan 25, 2025 09:38 IST

    நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைப்பேசி அழைப்பை அடுத்து, நெல்லை ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.



Madurai Coimbatore Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment