Advertisment

Coimbatore, Madurai, Trichy News: மயிலாடுதுறை புத்தகத் திருவிழா ஜன. 31-ல் தொடக்கம் - கலெக்டர் அறிவிப்பு

Coimbatore, Madurai, Trichy News Updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mayiladuthurai collector

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.

  • Jan 24, 2025 21:56 IST

    வேங்கைவயல் சி.பி.ஐ விசாரணை வேண்டும் - அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

    “வேங்கைவயல் வழக்கை சி.பி. விசாரிக்க வேண்டும்; தி.மு.க-வின் கூட்டணி கட்சிகளே சி.பி.ஐ விசாரணை கேட்டுள்ளது வரவேற்கத்தக்கது. வேங்கைவயல் பிரச்னையில் தமிழகக் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.



  • Jan 24, 2025 21:44 IST

    மயிலாடுதுறை புத்தகத் திருவிழா ஜன. 31-ல் தொடக்கம் - கலெக்டர் அறிவிப்பு

    மயிலாடுதுறை புத்தகத் திருவிழா ஜனவரி 31 முதல் பிப்ரவரி 10 வரை நடைபெற உள்ளது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கல்லூரி வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.



  • Advertisment
  • Jan 24, 2025 18:35 IST

    "வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை தேவை": திருமாவளவன்

    வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை தேவை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். காவல்துறையின் குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது எனக் கூறிய அவர், பட்டியலினத்தவர்கள் மூன்று பேரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது போன்று தோன்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



  • Jan 24, 2025 17:10 IST

    ஐ.ஐ.டி இயக்குனருக்கு தபாலில் மாட்டு கோமியம்... கோவையில் நூதன போராட்டம்

    மாட்டு கோமியத்தில் மருத்துவ பயன்கள் இருப்பதாக ஐ.ஐ.டி இயக்குனர் கூறிய நிலையில், கோவையில் திராவிட தமிழர் கட்சியின் சார்பில் ஐ.ஐ.டி இயக்குனர் காமக்கோடிக்கு தபாலில் மாட்டு கோமியம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. 



  • Advertisment
    Advertisement
  • Jan 24, 2025 16:26 IST

    உடலில் தீப்பிடித்தவாறு சாலையில் ஓடிய மாணவன்

    நாமக்கல் ராசிபுரத்தில் படிக்கட்டு என நினைத்து டிரான்ஸ்பார்மரில்  கல்லூரி மாணவன் ஏறியுள்ளார். மின் கம்பியை பிடித்த போது சம்பவ இடத்திலிருந்து வீசப்பட்டு தீக்காயங்களுடன் சாலையில் ஓடியுள்ளார்; படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். 

     



  • Jan 24, 2025 16:19 IST

    ராமதாஸ் மனு - மதுரை ஐகோர்ட் உத்தரவு 

    மதுரையில் 2004 தேர்தல் பரப்புரையின் போது ரஜினி ரசிகர்கள் - பா.ம.க-வினர் இடையே நடந்த மோதலில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பா.ம.க தலைவர் ராமதாஸ் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், மதுரை விளக்குத்தூண் போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. 



  • Jan 24, 2025 16:18 IST

    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - பெண் படுகாயம் 

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து, ஒரு பெண் படுகாயம் அடைந்தார். நதிக்குடியில் காரனேசன் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.



  • Jan 24, 2025 15:21 IST

    விருதுநகரில் இன்றளவும் குழந்தை திருமணம்

    விருதுநகர் மாவட்டத்தில் இன்றளவும் ஆண்டுக்கு 500 முதல் 700 குழந்தை திருமணம் நடைபெறுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். குழந்தை திருமணம் தொடர்பாக விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் மாணவிகளிடையே பேசினார். அப்போது, குழந்தை திருமணத்தை தடுக்க 1098 என்ற உதவி எண் பேருதவியாக இருக்கிறது என்று அவர் கூறினர். 



  • Jan 24, 2025 12:46 IST

    வேங்கைவயல் வழக்கில் விசாரணை நிறைவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது

    முத்துக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குற்றம் நடந்துள்ளது. முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்று உயர் நீதிமன்றத்தில் அரசு கூறியுள்ளது.  அறிக்கையை மனுவாக தாக்கல் செய்ய அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவளித்துள்ளார்கள். வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 



  • Jan 24, 2025 12:14 IST

    மங்களூரு கூட்டுறவு வங்கி கொள்ளை வழக்கில் முருகாண்டி உள்பட 3 பேர் கைது

    கடந்த 17ஆம் தேதி மங்களூரு வங்கிக்குள் புகுந்த முகமூடி கும்பல் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நகையை கொள்ளையடித்தது. குற்றப்பிரிவு போலீஸ் ஆய்வாளர் மகேஷ்பிரசாத் தலைமையிலான குழு நடவடிக்கை எடுத்து நெல்லை மாவட்டம் பத்மநேரியிலுள்ள முருகாண்டி இல்லத்தில் இருந்து நகைகளை கைப்பற்றியது காவல்துறை. அந்த வழக்கில் முருகாண்டி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 



  • Jan 24, 2025 12:12 IST

    சீமான் செய்தியாளர்கள் சந்திப்பு

    "நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை. போதுமா, இதை நம்புகிறீர்களா..” என்று  கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது சீமான் கூறியுள்ளார். 



  • Jan 24, 2025 11:43 IST

    மதுரை மாவட்ட ஆட்சியருக்கு இனிப்பு வழங்கி விவசாயிகள் மகிழ்ச்சி!

    டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை விவசாயிகள் வெளிப்படுத்தினர். 



  • Jan 24, 2025 11:18 IST

    15 ஆண்டுகளாக நகைத் திருட்டில் ஈடுபட்ட பெண் கைது

    ஜாதகத்தில் தோஷம் கழிப்பதாக கூறி கடந்த 15 ஆண்டுகளாக நகைத்திருட்டில் ஈடுபட்ட கவலகுளம் பகுதியை சேர்ந்த கிரிஜா (54) கைது செய்தார்கள் குமாரி மாவட்ட காவல்துறையினர்.  சுசீந்திரம், அஞ்சு கிராமம், ஆரல்வாய்மொழி, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிரிஜா மீது வழக்குகள் உள்ளன. இவரிடம் இருந்து இதுவரை 33 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. 



  • Jan 24, 2025 10:40 IST

    40 டன் பாறையை உடைக்கும் பணி தீவிரம்

    திருவண்ணாமலையில் 40 டன் பாறையை உடைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. 3வது நாளாக பாறைகளை அகற்றும் பணியில் குழுவினர்  ஈடுபட்டுள்ளனர். பாறை துளைகளில் திரவ எரிபொருளை ஊற்றிய குழுவினர். இன்று மாலைக்குள் பாறை வெடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 



  • Jan 24, 2025 09:37 IST

    திருச்செந்தூரில் கட்டபொம்மன் காலத்து கோபுர மணி

    திருச்செந்தூர் முருகன் கோயில் ராஜகோபுரத்தில் வீரபாண்டி கட்டபொம்மன் காலத்து கோபுர மணி பொருத்தப்பட்டுள்ளது. கோபுரத்தில் 7வது நிலையில் மீண்டும் ஒலிக்க இருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

     



  • Jan 24, 2025 09:36 IST

    பணத்தை இரட்டிப்பாக்குவதாக மோசடி - சேலத்தில் பா.ஜ.க பெண் பிரமுகர் கைது 


    சேலத்தில் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து கோடி கணக்கில் பணம் வசூலித்த பா.ஜ.க பெண் பிரமுகர் உள்பட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். 

    சேலத்தில் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் ரூ10-க்கு உணவு வழங்கப்பட்டுள்ளது .தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரிக்கவும்  பணம் முதலீடு செய்தால் 7 மாதங்களில் இரட்டிப்பாக திரும்ப கிடைக்கும் என விளம்பரம் செய்துள்ளனர். 

    விளம்பரத்தில் வீழ்ந்த பலரும் ரூ. 50,000 முதல் ரூ. 5 லட்சம் வரை பணத்தை போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்துள்ளனர். நேற்று, ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் இரண்டு நாட்களில் ரூ. 2 லட்சம் கிடைக்கும் என இக்கும்பல் விளம்பரம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது.  இதனால், போலீசார் அங்கு வந்து விசாரிக்க அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மாநகர போலீசார் குவிக்கப்பட்டு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உள்ளே சென்று விசாரணை நடத்தியதில் எந்த ரசீதும் கொடுக்காமல் ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் அறக்கட்டளையை நடத்தும் விஜயா பானு மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மூவரை கைது செய்த போலீசார் பணம், தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். 



Madurai Coimbatore Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment