Coimbatore, Madurai, Trichy News: தமிழ்ப் பண்பாட்டில் சிவனுக்கு தனி இடம் -  அமித்ஷா

Coimbatore, Madurai, Trichy News Updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
amit shah

கோவை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தை திறந்து வைக்கிறார். பின்னர், இன்று இரவு ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி சிறப்பு நிகழ்வில் பங்கேற்கிறார். இதனையொட்டி கோவையில் 5000 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisment

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Feb 26, 2025 21:54 IST

    தமிழ்ப் பண்பாட்டில் சிவனுக்கு தனி இடம் -  அமித்ஷா

    ஈஷா சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு: “பாரதநாட்டின் ஆன்மீகம் என்பது தமிழ்ப் பண்பாட்டை குறிப்பிடாமல் நிறைவு பெறாது. தமிழ் பண்பாட்டில் சிவபெருமானுக்கு என்று தனி இடமும் வழிபாடும் உள்ளது.” என்று கூறினார்.



  • Feb 26, 2025 19:02 IST

    தீபாராதனை காட்டிய அமித் ஷா

    கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பிரமாண்ட நாகர் சிலைக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா தீபாராதனை காட்டி வழிபட்டார்.  



  • Advertisment
    Advertisements
  • Feb 26, 2025 18:53 IST

    கல்விக்காக 1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய தம்பதி

    மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கீழையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுமார் ஒரு கோடி மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை கோபாலகிருஷ்ணன் - தமிழ்ச்செல்வி தம்பியினர் தானமாக வழங்கியுள்ளனர். அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.  



  • Feb 26, 2025 16:46 IST

    கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

    கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க, இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியது. மைதானத்திற்கான வடிவமைப்பை ஒரு வாரத்தில் இறுதி செய்ய விளையாட்டு துறை முடிவு செய்துள்ளது.



  • Feb 26, 2025 15:32 IST

    மதுரையில் வி.சி.க புல்லட் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி

    சாதிய தீண்டாமை வன்கொடுமையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 28-ஆம் தேதி மதுரையில் புல்லட் பேரணி நடத்த அனுமதி அளித்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.



  • Feb 26, 2025 15:00 IST

    செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

    சிவகங்கை மாவட்டத்தில் விதிகளுக்கு எதிராக நிறுவப்பட்டுள்ள செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை அகற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது



  • Feb 26, 2025 14:10 IST

    மதுரை விமான நிலையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 700 பயணிகள் வருகை

    மதுரை விமான நிலையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 700 பயணிகள் வருகை தருவதாகவும் வாரத்திற்கு 140 விமானங்கள் வந்து செல்வதாகவும், ஒரு வருடத்திற்கு 1.50 மில்லியன் பயணிகளை கையாளுவதாகவும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.



  • Feb 26, 2025 13:50 IST

    தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் தொகுதி தான் கிடைக்கும், குறைய வாய்ப்பு இல்லை – அமித் ஷா

    தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் தொகுதி தான் கிடைக்கும், தொகுதி குறைய வாய்ப்பு இல்லை. நான் இங்கு உண்மையை கூறி உள்ளேன், நீங்கள் கட்டாயம் எனக்கு பதில் அளிக்க வேண்டும் .பிரதமர் மோடி நிதி வழங்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யான தகவலை கூறி வருகிறார். மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பது பொய்யான தகவல். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெறும் 1.52 லட்சம் கோடி தான் வழங்கப்பட்டது என கோவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்



  • Feb 26, 2025 12:27 IST

    கோவையில் பாஜக அலுவலகம்

    கோவையில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
     



  • Feb 26, 2025 12:16 IST

    45,000 பேருக்கு வேலை

    ரூ.5,000 கோடி முதலீட்டில் கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகளை அமைப்பது தொடர்பாக, முதலமைச்சர் முன்னிலையில் பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து செய்ய்யப்பட்டுள்ளது. 



  • Feb 26, 2025 11:22 IST

    ராமேஸ்வரத்தில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. தங்கச்சிமடம், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தலா 3 செ.மீ., மண்டபத்தில் 2 செ.மீ. மழை பதிவாகியது.



  • Feb 26, 2025 11:19 IST

    மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1200க்கு விற்பனை

    மகா சிவராத்திரி பண்டிகையையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பிச்சி பூ ரூ.800க்கும், முல்லைப் பூ ரூ.1000க்கும் விற்பனையாகிறது.



  • Feb 26, 2025 11:08 IST

    நாகை - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து ரத்து

    மோசமான வானிலை காரணமாக நாகை - இலங்கை இடையிலான கப்பல் சேவை பிப். 28 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கப்பல் சேவை தொடங்கிய 4 நாட்களிலேயே மீண்டும் ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 



  • Feb 26, 2025 10:23 IST

    மகா சிவராத்திரி- மலர் விலை உயர்வு

    மகா சிவராத்திரி பண்டிகையையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1200க்கு விற்பனை. ஒரு கிலோ பிச்சி பூ ரூ..800க்கும், முல்லைப் பூ ரூ. 1000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 



  • Feb 26, 2025 10:23 IST

    கடலில் மூழ்கிய விசைப்படகு

    கன்னியாகுமரியில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகில் விழுந்த விரிசலால் கடலில் விசைப்படகு மூழ்கியது. படகிலிருந்த 20க்கும் மேற்பட்ட மீனவர்களை அருகிலிருந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். 



  • Feb 26, 2025 09:56 IST

    புகாரை சரியாக விசாரணை செய்ய கோரி காவல் நிலையத்தின் முன்பு அமர்ந்து, பெண் தர்ணா

    குமரி மாவட்டம் பூதப்பாண்டியைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் அளித்த புகாரை சரியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோரி நேற்று நள்ளிரவு குமரி மாவட்டம் காவல் நிலையத்தின் முன்பு அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு.



  • Feb 26, 2025 09:32 IST

    தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பசுமாடு

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியில் நேற்று நள்ளிரவு தண்ணீர் தொட்டிக்குள் பசுமாடு  விழுந்தது. ஒரு மணி நேரம் போராடி பசுமாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்.



  • Feb 26, 2025 09:32 IST

    அண்ணாமலையார் கோயிலில் சிவராத்திரி சிறப்பு பூஜை

    திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சிவராத்திரியை ஒட்டி அண்ணாமலையாருக்கு பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு, லட்சார்ச்சனை வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 3 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். 



  • Feb 26, 2025 09:29 IST

    கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

    குளித்தலை அருகே கார் மீது அரசு பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். விபத்தில் செல்வராஜ், மனைவி கலையரசி, மகள் அகல்யா,மகன் அருண் ஆகியோர் உயிரிழந்தனர். 



Madurai Trichy kovai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: