Coimbatore, Madurai, Trichy News: முண்டந்துறையில் புலிகள் கணக்கெடுப்பு: பாபநாசம் சோதனைச் சாவடி மூடப்படுவதாக அறிவிப்பு

Coimbatore, Madurai, Trichy News Live Updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
melanistic tiger 1

தமிழகத்தின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த சுரேஷ் என்பவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ4 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

  • Feb 20, 2025 20:32 IST

    தெருநாய்களால் தாக்கப்படும் கால்நடைகள்: இழப்பீடு வழங்க கோரிக்கை

    திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தெருநாய்களால் கால்நடைகள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருவதால், தலைமைச் செயலாளருக்கு அமைச்சர் சாமிநாதன் கடிதம் எழுதியுள்ளார். இதவரை 826 கால்நடைகள் உயிரிழந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், மழை வெள்ளத்தில் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு பேரிடர் மேலாண்மையின் கீழ் இழப்பீடு வழங்குவது போல, இதற்கும் இழப்பீடு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



  • Feb 20, 2025 20:29 IST

    முண்டந்துறையில் புலிகள் கணக்கெடுப்பு: பாபநாசம் சோதனைச் சாவடி மூடப்படுவதாக அறிவிப்பு

    நெல்லை முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வரும் 24ம் தேதி முதல் மார்ச் 01ம் தேதி புலிகள் கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளதால் அகஸ்தியர் அருவி, சொரிமுத்தையனார் கோவில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு பாபநாசம் சோதனைச் சாவடி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 03ம் தேதி முதல் சோதனைச் சாவடி திறக்கப்பட்டு வழக்கம் போல் மக்கள் அனைவரும் அனுமதிக்கப்படுவர் என வனத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Feb 20, 2025 19:54 IST

    விண்வெளி பூங்காவுக்கு நிலம் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் தமிழ்நாடு அரசு அமைக்க திட்டமிட்டுள்ள விண்வெளி பூங்காவுக்கு நிலம் எடுக்க ஆட்சியர் முன்னிலையில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஒட்டுமொத்த கிராம மக்களும் வெளிநடப்பு  செய்தனர். ஆதியாகுறிச்சி கிராமத்தில் 1200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கணக்கெடுப்பு நடக்கும் நிலையில், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



  • Feb 20, 2025 19:49 IST

    நாமக்கல் நகரில் அஞ்சலை அம்மாளுக்கு த.வெ.க.வினர் மரியாதை

    நாமக்கல் நகரில் தங்கள் கட்சியின் கொள்கைக் தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாளுக்கு த.வெ.க.வினர் மரியாதை செலுத்தினர். 1961ம் ஆண்டு மறைந்த அஞ்சலை அம்மாளுக்கு 135வது நினைவு தினம் என பேனரில் அச்சிடப்பட்டிருந்தது.



  • Feb 20, 2025 19:21 IST

    நெல்லை மாவட்டத்துக்கு மார்ச் 4-ல் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

    அய்யா வைகுண்டரின் அவதார நாளையொட்டி திருநெல்வேலி மாவட்டத்துக்கு மார்ச் 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு அவரது அவதார நாளன்று பெருந்திரளாக மக்கள் வருகை தருவது வழக்கம். இதையொட்டி, கன்னியாகுமரி மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதோப்புக்கு வருகை தருவர்.

    இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்துக்கு மார்ச் 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்று(பிப். 20) உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடுசெய்ய மார்ச் 15-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Feb 20, 2025 17:58 IST

    மதுரையில் போலீஸ் வாகனங்கள் பொது ஏலம்!

    மதுரை மாநகர காவல் ஆணையகத்தில் உள்ள 02 கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலத்தில் ஏலமிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. பொது ஏலமானது வரு கின்ற 27.02.2025 அன்று காலை மதுரை மாநகர் ஆயுதப்படையில் நடை பெற உள்ளது. 11.00 மணிக்கு ஏலத்திற்குண்டான கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் மதுரை மாநகர் ஆயுதப்ப டையில் 21.02.2025 அன்று காலை 10.00 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பார்வைக்காக வைக்கப்படும். செய்யப்பட்ட வாகனத்தை கழிவு காவல் பார்வையிட்டு ஏலம் எடுக்க விருப் பமுள்ளவர்கள் 24.02. 2025 அன்று காலை 10.00 மணி முதல் 27.02.2025 அன்று காலை 08.00 மணி வரை (நான்கு சக்கரவாக னங்களுக்கு .2000/(இரண்டாயிரம் மட்டும்) முன் வைப்பு தொகை யினை பணமாக செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டும்.

    கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங் களை ஏலம் எடுத்தவர் கள். ஏலத்தொகையுடன் GST விற்பனை வரியுடன் சேர்த்து 28.02.2025 அன்று உடனே செலுத்திவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

     



  • Feb 20, 2025 17:56 IST

    ஸ்டெர்லைட் ஆலை - போராட்டம் நடத்த அனுமதி இல்லை

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு  ஆதரவு தெரிவித்து எந்த விதமான போராட்டம்  மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்றும், மீறி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை என்றும்  மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. 

     



  • Feb 20, 2025 17:54 IST

    மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு 

    கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே ஆழ்துளை கிணறு மோட்டார் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



  • Feb 20, 2025 17:25 IST

    திருப்பரங்குன்றம் மலை விவகாரம் - பேரணி நடத்த மதுரை ஐகோர்ட் மறுப்பு 

    திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் பேரணி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுத்துள்ளது. சிக்கந்தர் பாதுஷா தர்கா வழிபாடு உரிமையை காக்க வலியுறுத்தி சன்னதி தெருவில் பேரணி நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்தால் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.

     



  • Feb 20, 2025 14:43 IST

    கிருஷ்ணகிரியில் மினி டெம்போவின் டயர் வெடித்து விபத்து - ஓட்டுநர் காயம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து ஆத்தூர் சென்ற மினி டெம்போவின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஓட்டுநர் காயம் அடைந்தார். டெம்போவில் இருந்த 30க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிர் தப்பின



  • Feb 20, 2025 14:09 IST

    சிலைகள், கொடிக்கம்பங்களை பொது இடங்களில் வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - ஐகோர்ட்

    சிலைகள், கொடிக்கம்பங்களை பொது இடங்களில் வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. இயக்கமாக இருந்தாலும் சரி என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு காட்டமாக கூறியுள்ளது. மேலும், தலைவர்களின் சிலைகள், கட்சி கொடிக்கம்பங்களை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்



  • Feb 20, 2025 12:59 IST

    எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி விடுதலை

    மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்கு இருந்தது. திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி இன்று விடுதலை ஆகியுள்ளார். திருப்போரூர் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட 6 பேர் விடுதலை. சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 



  • Feb 20, 2025 12:14 IST

    ரசிகர்களை பல ஆண்டுகளாக மகிழ்வித்து வந்த பிரபல தியேட்டர் மூடல் - ரசிகர்கள் வேதனை!

    மதுரையில் அண்ணா நகரில் உள்ள பிரபல அம்பிகா சினிமா தியேட்டர் இடிக்கப்பட உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அம்பிகா திரையரங்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. மதுரையில் முதன் முறையாக டிடிஎஸ் சவுண்ட் சிஸ்டத்துடன் ரட்சகன் படம் மற்றும் 2மு, 3மு, 4மு முறையில் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாட்ஷா, வாலி, கில்லி, கஜினி, ஆளவந்தான், தூள், ரன், அலைபாயுதே உள்ளிட்ட பல படங்கள் நூறு நாட்களுக்கும் மேலாக ஓடி ரசிகர்களை மகிழ்வித்தது. 



  • Feb 20, 2025 11:51 IST

    பொது மக்களுக்காக தானே பேருந்து இயக்கப்படுகிறது? - மாவட்ட ஆட்சியர் கேள்வி

    ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாத அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு ரூ.60,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் நடவடிக்கை எடுத்துள்ளார். 



  • Feb 20, 2025 11:14 IST

    மீன் கடைகள் அகற்றம் - கதறி அழுத வியாபாரிகள்

    ராமநாதபுரம் சின்னக்கடை தெருவில் உள்ள மீன் கடைகளை அப்புறப்படுத்தி குப்பை வண்டியில் ஏற்றியது நகராட்சி அலுவலர்கள். சாலையில் அமர்ந்து கதறி அழுதனர் மீன் வியாபாரிகள். நகராட்சி வாகனத்தை சிறைபிடித்து மீன் வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மறியலில் ஈடுபட்டவர்களில் இருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 



  • Feb 20, 2025 10:39 IST

    காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு

    கோவை மாநகராட்சி சார்பில் ரூ.3.67 கோடியில் கட்டப்பட்ட காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். 



  • Feb 20, 2025 09:46 IST

    நடந்து சென்றவரை தாக்கி செல்போன் பறிப்பு

    கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்து சென்றவரை கொடூரமாக தாக்கி செல்போன் பறிப்பு. தனது நண்பரை சந்திக்க காஞ்சிபுரத்தை சேர்ந்த டேவிட் ராஜன் வந்தபோது 3 சிறுவர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டனர்.  போலீஸ் பிடியில் சிக்கிய 3 சிறுவர்களும் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



  • Feb 20, 2025 09:44 IST

    கவுன்சிலர் முகத்தில் காரி துப்பிய து.தலைவர்

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகர்மன்ற கூட்டத்தில் துணை தலைவர் , கவுன்சிலர் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. கவுன்சிலர் முகத்தில் திமுக நகர்மன்ற துணைத் தலைவர் காரி துப்பியதால் அதிர்ச்சி அடைந்தனர்.



  • Feb 20, 2025 09:42 IST

    ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

    எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.



Tamilnadu Madurai Coimbatore Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: