/indian-express-tamil/media/media_files/2025/02/19/YpIYUjj0zfYXqhx6LG3M.jpg)
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. அதிகபட்சமாக செவ்வாய்க்கிழமை ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
கோவையில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே மாடுகள் வெட்டப்படுவதாக வெளியான வீடியோ, தவறானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
Feb 19, 2025 21:50 IST
2 குழந்தைகளை கொலை செய்த தந்தை கைது
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை வெட்டிக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார். குடும்ப பிரச்சனையில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை அசோக் குமார் என்பவர் வெட்டிய நிலையில், மனைவி மற்றும் மற்றொரு பிள்ளைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
Feb 19, 2025 20:02 IST
ஆசிரியர்கள் இருவர் பணி நீக்கம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் 2 அங்கன்வாடி குழந்தைகள் கண்மாயில் இறங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்த ஆசிரியர்கள் 2 பேரை உடனடியாக பணி நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
-
Feb 19, 2025 18:48 IST
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆனையூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். பட்டாசுகள் இருப்பு வைக்கும் அறையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளனர்.
-
Feb 19, 2025 18:47 IST
சிவகங்கை: கண்மாயில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுமிகள் குடும்பத்துக்கு ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
சிவகங்கை அருகே ஆழிமதுரையில் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுமிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிறுமிகள் சோபியா, கிருஷ்மிகாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை முதல்வர் தெரிவித்துள்ளார்.
-
Feb 19, 2025 15:29 IST
திருப்பரங்குன்றம் வழக்குகள் தள்ளுபடி: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் வழிபாட்டு தளம் குறித்த வழக்குகளை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டுத்தலங்கள் வழக்குகளை உயர்நீதிமன்றங்களில் விசாரணை செய்யக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
-
Feb 19, 2025 14:29 IST
என்னுடைய கைகளால் குடமுழுக்கு செய்தது ரொம்ப மகிழ்ச்சி - அர்ச்சகர் பேட்டி
'அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்' திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்று திருச்சி வயலூர் முருகன் கோயிலின் குடமுழுக்கை செய்த அர்ச்சகர்கள் நெகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த திட்டத்தை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமகிழ்ந்து நன்றி தெரிவித்தனர்.
-
Feb 19, 2025 14:27 IST
போக்ஸோ குற்றச்சாட்டு: அரசுப் பள்ளி ஆசிரியர் விபரீத முடிவு
ராமநாதபுரம் மாவட்டம், அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அதுபற்றிய விசாரணைக்கு இடையே ஆசிரியர் தற்கொலை செய்துகொண்டார். காவல்துறையினர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை செய்துவந்த நிலையில், இன்று காலை ஆசிரியர் விபரீத முடிவு எடுத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவில் இறப்புக்கான காரணம் தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
Feb 19, 2025 13:32 IST
தன்னை முன்னிறுத்துபவர்கள் விலகுகிறார்கள்; நா.த.க நிர்வாகி தமிழரசன் விலகல் குறித்து சீமான் பேட்டி
நா.த.க கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன் விலகல் குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “தன்னை முன்னிறுத்திக் கொள்பவர்கள் கட்சியில் இருந்து விலகிச் செல்கிறார்கள். நா.த.க-வில், கட்சிக்காக நான் என செயல்பட வேண்டும். சீமானுக்கு பின் யார் தலைவர் எனும் போட்டியால் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். நேர்மையாக கட்சி நடத்த வேண்டுமானால் சர்வாதிகாரியாக செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
-
Feb 19, 2025 12:11 IST
6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
கோவையில் 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஓவிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஓவிய வகுப்பு, யோகா எடுக்கும்போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு அளித்துள்ளார். ஸ்டாலினின் திமுக அரசு கும்ப கர்ண தூக்கத்தில் இருப்பதால் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக மக்கள் வேதனை அடைந்துள்ளார்.
-
Feb 19, 2025 11:08 IST
நாமக்கல் மேற்கு திமுக நிர்வாகி விடுவிப்பு
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த மதுரா செந்தில் விடுவிப்பு மற்றும் புதிய மாவட்ட பொறுப்பாளராக கே.எஸ்.மூர்த்தி நியமனம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
-
Feb 19, 2025 10:32 IST
வயலூர் முருகன் கோயில் குடமுழுக்கு
‘அரோகரா’ முழக்கம் விண்ணை பிளக்க வெகு விமர்சையாக நடந்த வயலூர் முருகன் கோயில் குடமுழுக்கு. 19 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு செய்தனர்.
-
Feb 19, 2025 09:33 IST
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் 3 பேருக்கு சம்மன்
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் 3 பேருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. 3 பேரையும் மார்ச் 11 ஆம் தேதி ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Feb 19, 2025 09:30 IST
பாலியல் அத்துமீறல் - தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
புதுக்கோட்டை அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் அரசுப் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாணவிகள் அளித்த புகாரில் பொறுப்பு தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
-
Feb 19, 2025 09:29 IST
ஆத்தூர் அருகே இரு குழந்தைகள் வெட்டிக்கொலை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மனைவு உட்பட 3 குழந்தைகளை அரிவாளால் வெட்டிய கணவர் அசோக் குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரிவாளால் வெட்டியதில் குழந்தைகள் பலியான நிலையில் படுகாயமடைந்த மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Feb 19, 2025 09:19 IST
திருப்பூரில் வடமாநில பெண் பாலியல் வன்கொடுமை; 3 பேர் கைது
திருப்பூரில் கணவர் முன்பு வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் தனது கணவர், குழந்தையுடன் வேலை தேடி வந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. சொந்த ஊருக்கு செல்ல திருப்பூர் ரயில் நிலையம் வந்த போது வேலை வாங்கி தருவதாக கூறி பீகாரை சேர்ந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இந்தநிலையில் பீகாரை சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.