Coimbatore, Madurai, Trichy News Live: கன்னியாகுமரியில் மூன்று நாட்கள் உள்ளூர் விடுமுறை அளித்து அறிவிப்பு

Coimbatore, Madurai, Trichy News Live Updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
School Students

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கவும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் கடலூருக்கு செல்கிறார். கடலூரில் உள்ள மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று மாலை 5 மணியளவில் பிரம்மாண்டமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

Advertisment

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு தினமும் 2 முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் ஜாப்னா விமான நிலையத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகிற மார்ச் மாதம் முதல் புதிய விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்க உள்ளது. இதனால் வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் மிக எளிதாக, குறைந்த கட்டணத்தில் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Feb 21, 2025 22:38 IST

    கன்னியாகுமரியில் மூன்று நாட்கள் உள்ளூர் விடுமுறை 

    கன்னியாகுமரியில் மூன்று நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 26-ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4-ஆம் தேதி, அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போல், மார்ச் 11-ஆம் தேதி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பத்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.



  • Feb 21, 2025 21:21 IST

    கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை

    கன்னியாகுமரி, மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடை விழாவை முன்னிட்டு வரும் மார்ச் 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Feb 21, 2025 19:33 IST

    விபத்தில் இருவர் உயிரிழப்பு

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே கிழக்கு கடற்கரை சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ட்ராக்டரில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, சடலங்களை மீட்ட போலீசார் உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.



  • Feb 21, 2025 17:54 IST

    'ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் நெய் தயாரிக்க தடை தொடரும்' - மதுரை ஐகோர்ட் உத்தரவு 

    திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் நெய் தயாரிப்பதற்கான தடை தொடருகிறது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 'ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் நெய் தயாரிக்க வழங்கப்பட்ட உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்த உணவு பாதுகாப்பு அலுவலரின் உத்தரவு தொடர்கிறது.அதே நேரத்தில் பால் பதப்படுத்துதல், விற்பனை செய்வதை தொடரலாம்.இது குறித்து ஒன்றிய அரசின் உணவு பாதுகாப்பு தர நிலைய அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம்' என்று தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.



  • Feb 21, 2025 17:20 IST

    லஞ்சம் வாங்கியதாக புகார் - பழனி கோவில் செயற்பொறியாளர் கைது

    பழனி கோவில் செயற்பொறியாளர் பிரேம் குமார் கைது. பழனி கோவில் சார்பில் திருமண மண்டபம் கட்டிய பணிக்கு  கொடுக்க வேண்டிய ரூ.21 லட்சத்திற்கு ரூ.18,000 லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டார்



  • Feb 21, 2025 13:18 IST

    கிருஷ்ணகிரியில் போலீசாரை தாக்கி விட்டுத் தப்ப முயன்ற குற்றவாளி: சுட்டு பிடித்த போலீஸ்

    கிருஷ்ணகிரியில் போலீசாரை தாக்கி விட்டுத் தப்ப முயன்ற சுரேஷ் என்ற குற்றவாளியைத் துப்பாக்கிச் சூடு நடத்தி போலீசார் மடக்கி பிடித்தனர்.  போலீசார் சுட்டதில் சுரேஷ்க்குக் காலில் காயம் ஏற்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 இளைஞர்களில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,



  • Feb 21, 2025 12:41 IST

    பொன்முடி மீது சேறுவீச்சு: பாஜக பிரமுகர் கைது

    விழுப்புரம்: அரசூர் பகுதியில் ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய கடந்த டிசம்பர் மாதம் சென்றபோது, அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது தொடர்பான வழக்கில் பாஜக உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவேல்பட்டு கிராமத்தை சார்ந்த ராமகிருஷ்ணன் என்பவரை திருவெண்னைய்நல்லூர் போலீசார் கைது செய்து இன்று சிறையிலடைத்தனர்.



  • Feb 21, 2025 12:04 IST

    விதிகளுக்கு உட்பட்டு ஈஷா மைய சிவராத்திரி நடத்தப்படுகிறதா?

    ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறதா? ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர், காற்று, ஒலி மாசு விதிகளை மீறி சிவராத்திரி நடக்க அனுமதிக்கக் கூடாது என சிவஞானம் என்பவர் மனு அளித்துள்ளார். 



  • Feb 21, 2025 11:22 IST

    கோவையில் உவகை பெருவிழா கொண்டாட்டம்

    உலக தாய்மொழி நாளையொட்டி, கோவையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் உவகை பெருவிழா கொண்டாட்டம் நடைபெறுகிறது. கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் நடைபெறும் இவ்விழாவை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்துள்ளார். பாட்டரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.



  • Feb 21, 2025 11:10 IST

    பெண் ஆசிரியருக்கு பாலியல் தொல்லை ஒருவர் கைது!

    நெல்லை: தனியார் பள்ளி ஆசிரியையை காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கட்டாரங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜு (38) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியையை ஒருதலைபட்சமாக ராஜு காதலித்து வந்ததாகவும் அதற்கு மறுத்ததால் காரில் கடத்தியதாகவும் காவல்துறை விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 



  • Feb 21, 2025 11:07 IST

    புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு

    ரூ.3.68 கோடி மதிப்பில் கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. 35 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் வசதி இருப்பதால் பொதுமக்கள் தங்களது சந்தோஷத்தை தெரிவித்து வருகின்றனர். 



  • Feb 21, 2025 10:29 IST

    கொடைக்கானல் ஜெரோனியம் வனப்பகுதியில் சில தினங்களுக்கு முன் தீ ஏற்பட காரணமானவர் கைது

    கொடைக்கானல் ஜெரோனியம் வனப்பகுதியில் சில தினங்களுக்கு முன் தீ ஏற்பட காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்பட காரணமாக இருந்த சந்திரன் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். அனுமதியின்றி தனியார் தோட்டங்களில் தீ வைத்து வனப்பகுதியில் பரவினால் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



  • Feb 21, 2025 10:07 IST

    சர்ச்சை போஸ்டரால் பரபரப்பு

    ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் புரட்சி மகான் ஸ்ரீ ராமானுஜரையே ஏமாற்றும் நயவஞ்சகர்களே என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள். ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நடைபெறும் முறைகேடுகளை சுட்டிக்காட்டி போஸ்டர்கள்.



Madurai Coimbatore Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: