/indian-express-tamil/media/media_files/2025/04/12/SpeFhxhmelDGeSan04hH.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சி.என்.ஜி எரிபொருள் ஒரு கிலோ ரூ. 90.50-க்கு விற்பனை ஆகிறது.
-
Apr 12, 2025 20:12 IST
வட்டிக்கடையில் குட்கா போதை பொருள் விற்பனை செய்தவர் குண்டு சட்டத்தில் கைது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தீவனூர் கிராமத்தில் வட்டிக்கடையில் குட்கா போதை பொருள் விற்பனை செய்த மணிகண்டன் என்பவரை இன்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
வட்டி கடையில் குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்த வழக்கில் கைது செய்து நீதிமன்ற காவலில் இருந்த நிலையில் இன்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்.
-
Apr 12, 2025 19:38 IST
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய எ.வ.வேலு.
திருவண்ணமலையில் பங்குனி மாத பவுர்ணமியை ஒட்டி கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அன்னதானம் வழங்கினார்.
-
Apr 12, 2025 19:34 IST
ஏப்.16 முதல் வேலை நிறுத்த போராட்டம் - தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்கான வரியை தமிழ்நாடு அரசு உயர்த்தி உள்ளதை கண்டித்து, அந்த விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வரும் 16 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என திருச்சியில் நடைபெற்ற அச்சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் சின்னச்சாமி அறிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
-
Apr 12, 2025 17:13 IST
'பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி; இ.பி.எஸ் முடிவில் தவறு இருக்காது': நடிகை கௌதமி
கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கௌதமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி நல்ல விஷயம் தான். எடப்பாடி பழனிசாமி ஒரு முடிவு எடுத்தால் அதில் தவறு இருக்காது" என்று தெரிவித்துள்ளார்.
-
Apr 12, 2025 14:55 IST
கீர்த்திகாவின் உடலை வாங்க மறுத்து போராட்டம்
தஞ்சாவூர் நடுக்காவேரி காவல் நிலையத்தில் சகோதரர் மீது பொய் வழக்கு போட்டதாக விஷமருந்தி உயிரிழந்த கீர்த்திகாவின் உடலை வாங்க மறுத்து 4-ஆவது நாளாக உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இளைஞர் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெற அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
Apr 12, 2025 14:21 IST
தென்காசி: லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது
தென்காசி மாவட்டம் கடையத்தில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தல் வழக்கு தொடர்பாக ரூ.30 ஆயிரம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளது.
-
Apr 12, 2025 14:08 IST
நீலகிரி, கோவை, திண்டுக்கல் மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
நீலகிரி, கோவை மற்றும் திண்டுக்கல் மலைப்பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் நாளை ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
Apr 12, 2025 12:29 IST
கோவை கோட்டத்தில் 22 பெண் நடத்துனர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர் சிவசங்கர்
கோவை கோட்டத்தில் 22 பெண்கள் உட்பட 44 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர் சிவசங்கர். கோவை கோட்டத்திற்கு 2024-25 நிதியாண்டில் 321 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக கோவை, உதகை, திருப்பூர் செல்லும் 13 புதிய பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். கோவை கோட்டம் அரசு போக்குவரத்து கழகத்தில் புதிதாக 22 பெண் நடத்துநர்கள் பணியில் சேர உள்ளனர்.
-
Apr 12, 2025 10:58 IST
திருத்துறைப்பூண்டி: கனமழையில் சுவர் இடிந்து ஒருவர் பலி
திருத்துறைப்பூண்டி அருகே பெய்த கனமழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மடப்புரம் ஆட்டூர் சாலையில் கூரை வீட்டில் வசித்து வந்தவர் கட்டிட தொழிலாளி ஆனந்தராஜ். இவரது வீட்டின் சுவர் கனமழையில் இடிந்து விழுந்தது. இதில் உடல் நசுங்கி ஆனந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
-
Apr 12, 2025 10:45 IST
ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் பங்குனி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பெருமாள் சாமிக்கு சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டு வீதி உலாவாக வந்து தேரில் அமர்ந்தார். இதனை தொடர்ந்து இன்று காலை 9 மணி அளவில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் பங்கு கொண்ட பக்தர்கள் அனைவரும் கோவிந்தா... கோவிந்தா... ரங்கா... ரங்கா... என கோஷங்களுடன் ஆரவாரமாக தேரை வடம் பிடித்து வீதி உலாவாக இழுத்துச் சென்றனர்.
-
Apr 12, 2025 10:33 IST
கழிவறையில் பெயிண்ட் அடிக்கும் பணியில் பயிற்சி மாணவர்
கோவையில், தொழில்நுட்ப பயிற்சிக்கு வந்த மாணவரை கழிவறையில் பெயிண்ட் அடிக்க வைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கழிவறையில் வெள்ளை அடித்தல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
Apr 12, 2025 10:29 IST
கோவை: ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
கோவையில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி பறிமுதல், 2 கார்கள், 2 பைக் ,12 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
Apr 12, 2025 10:08 IST
கடலூர்: திடீர் சோதனையில் சிக்கிய நகைகள்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள வள்ளி விலாஸ் நகைக் கடையில் இந்திய தரக் கட்டுப்பாட்டு நிர்ணய அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். போலி ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்ட சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
Apr 12, 2025 09:33 IST
கோவை - வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் பலி
கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஏறிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்(42) என்ற பக்தர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கோயில் நிர்வாகத்தினர், வனத் துறையினர் இணைந்து அவரது உடலை கீழே இறக்கினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.