Advertisment

Coimbatore, Madurai, Trichy News Live: சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்

Coimbatore, Madurai, Trichy News Live Updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jagafar ali

தேர்தல் அதிகாரி மாற்றம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த மணீஷை தேர்தல் ஆணையம் மாற்றியது. ஓசூர் மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் ஓட்டு உள்ள பத்மாவதி என்ற சுயேட்சை வேட்பாளரின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. முதலில் 47 வேட்பாளர்கள் போட்டி என அறிவிக்கப்பட்டு, பிறகு பத்மாவதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. 

  • Jan 22, 2025 20:15 IST

    சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் 

    சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கை விசாரித்து வந்த புதுக்கோட்டை போலீசார் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி டிஜிபிக்கு பரிந்துரை செய்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை : சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • Jan 22, 2025 19:09 IST

    ஜெகபர் அலி கொலை - சி.பி.சி.ஐ.டி-க்கு பரிந்துரை

    சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற புதுக்கோட்டை போலீசார் டி.ஜி.பி-க்கு பரிந்துரை செய்துள்ளனர் 



  • Advertisment
  • Jan 22, 2025 19:05 IST

    முட்டை விலை உயர்வு 

    நாமக்கல் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 5 காசுகள் உயர்ந்து ரூ. 4.85 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நாளை காலை முதல் அமலுக்கு வர உள்ளது



  • Jan 22, 2025 18:59 IST

    திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.46.8 கோடி - அரசாணை வெளியீடு 

    திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.46.8 கோடியில் புதிய அலுவலகம் கட்ட நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. சுமார் 3.32 ஏக்கர் பரப்பளவில் ரூ.46.8 கோடியில் திருப்பூர் மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது. 

     



  • Advertisment
    Advertisement
  • Jan 22, 2025 17:39 IST

    திருத்தணி முருகன் கோயிலுக்கு மாற்று மலைப்பாதை திட்டம் - அமைச்சர்கள் ஆய்வு

    திருத்தணி முருகன் கோயிலுக்கு மாற்று மலைப்பாதை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் இன்று காலை ஆய்வு மேற்கொண்டனர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு தமிழ்நாடு மற்றும் பிறமாநிலங்களில் இருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் வந்து சரவணப்பொய்கை திருக்குளத்தில் இருந்து படிகள் வழியாகவும், மலைப்பாதையில் வாகனங்களில் மலைக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.



  • Jan 22, 2025 16:51 IST

    நெல் ஈரப்பதம் குறித்து மத்திய குழு ஆய்வு

    தஞ்சை மாவட்டம், கக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.



  • Jan 22, 2025 16:30 IST

    "டங்ஸ்டன் சுரங்கம் வராது": கிஷன் ரெட்டி 

    மதுரைக்கு டங்ஸ்டன் சுரங்கம் வராது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதியளித்துள்ளார். டெல்லியில் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்புக் குழுவினருடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



  • Jan 22, 2025 15:19 IST

    சிறுமிக்கு பாலியல் தொல்லை -  முதியவர் கைது

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சண்முகம் என்ற முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.



  • Jan 22, 2025 14:40 IST

    பக்தர்களுக்கு அன்னதானம் - உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

    பழனிக்கு பாதையாத்திரை செல்லும் நபர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும் இல்லையெனில் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்று திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை கூறியுள்ளனர்.  



  • Jan 22, 2025 13:49 IST

    ஈஷா யோகா மையத்தில் பாலியல் வன்முறைகள் - 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    கோவை ஈஷா யோகா மையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பாக வந்த புகாரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது என்று  உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் காவல்துறை பதிலளித்துள்ளது. வழக்கின் நிலை குறித்து அரசு அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது



  • Jan 22, 2025 13:31 IST

    திருச்செந்தூர் கடல் அரிப்பு குறித்து தேசிய ஆராய்ச்சி மைய குழுவினர் நேரில் ஆய்வு

    கடல் சீற்றத்தின் காரணமாக கடற்கரையில் அதிக அளவில் அரிப்பு ஏற்பட்டு பக்தர்கள் கடலுக்குள் இறங்க முடியாத நிலையம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து தேசிய ஆராய்ச்சி மைய குழுவினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். 



  • Jan 22, 2025 13:21 IST

    களவாட முயற்சிப்பதே திமுக கூட்டம்தான் - வானதி சீனிவாசன்

    எப்போதும் திருநீறு அணிந்து காணப்படும் வள்ளலாரையே திருநீறு இல்லாத படத்துடன் வெளியிட்டு அவரின் அடையாளத்தை மறைப்பவர்கள், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவரின் அடையாளத்தை மறைப்பதில் வியப்பில்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். 



  • Jan 22, 2025 13:11 IST

    22% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் - மத்திய குழு இன்று ஆய்வு.

    22% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்யலாமா என டெல்டா மாவட்டங்களில் இன்று பிற்பகல் முதல் மத்தியக் குழு ஆய்வு செய்துள்ளனர். முதல் மூன்று நாட்கள் டெல்ட்டாவில் உள்ள 5 மாவட்டடங்களில் நேரடியாக ஆய்வு நடைபெற உள்ளது. மழையால் 17% வரை உள்ளதற்கு பதில் 22% உள்ள நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 



  • Jan 22, 2025 13:05 IST

    மதுரை - பழனி இடையே சிறப்பு ரயில்கள்

    பழனியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரை - பழனி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். பிப்ரவரி 11, 12 ஆகிய தேதிகளில் மதுரை - பழனிக்கு காலை 8.45 மணிக்கும், மறுமார்க்கத்தில் மாலை 3 மணிக்கும் சிறப்பு ரயில் புறப்படும் என்று தென்னக ரயில்வே கூறியுள்ளது.  



  • Jan 22, 2025 12:50 IST

    சமச்சீரான வளர்ச்சிக்கு வணிகர் சங்கங்களின் ஆதரவு முக்கியம்- ஸ்டாலின்

    சமச்சீரான வளர்ச்சிக்கு வணிகர் சங்கங்களின் ஆதரவு மிக முக்கியம். வணிகர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது.

    வணிகர்களின் வளர்ச்சிக்கு திமுக அரசு எப்போதும் துணை நிற்கும். நாங்கள் சொன்னதை தான் செய்வோம், செய்வதை தான் சொல்வோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 



  • Jan 22, 2025 11:56 IST

    திருப்பத்தூரில் புதிய புறவழிச்சாலை

    சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்படும். திருப்பத்தூரில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும். காரைக்குடியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில்  புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அளிவித்தார்.  



  • Jan 22, 2025 10:37 IST

    மருது சகோதரர்கள் கவிஞர் முடியரசன் சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

     சிவகங்கையில் இன்று மருது சகோதரர்கள் கவிஞர் முடியரசன் சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.



  • Jan 22, 2025 10:29 IST

    4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

    தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், குமரி ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Jan 22, 2025 10:01 IST

    கள்ளக்குறிச்சி விவகாரம்

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான கண்ணன் மற்றும் அய்யாசாமி ஆகிய இரண்டு பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Jan 22, 2025 09:19 IST

    சாலையில் சுற்றி திரியும் புலி

    ஊட்டியில் சாலையில் சுற்றி திரிந்த புலியால் அப்பகுதியினர் அச்சப்பட்டுள்ளனர் . வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.



  • Jan 22, 2025 09:16 IST

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தேர்தல் அதிகாரி மாற்றம்

    வேட்புமனு பரிசீலனையில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி மனீஷை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment