Advertisment

Coimbatore, Madurai, Trichy News Updates: தஞ்சை தமிழ் பல்கலை. முன்னாள் பதிவாளர் சஸ்பெண்ட்.. பொறுப்பு துணைவேந்தர் நடவடிக்கை

கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்தின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thanjai Tamil uni

கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்தின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment

கண்ணாடி பாலம் திறப்பு: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி இந்தியாவிலேயே முதல் முறையாக கடலுக்கு நடுவே கண்ணாடி பாலம் இன்று திறந்து வைப்பதாக முதலமைச்சார் மு.க.ஸ்டாலின்  பெருமிதம் என்று கூறியுள்ளார்.

  • Dec 30, 2024 20:17 IST
    தஞ்சை தமிழ் பல்கலை. முன்னாள் பதிவாளர் சஸ்பெண்ட்.. பொறுப்பு துணைவேந்தர் சங்கர் அதிரடி நடவடிக்கை

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தியாகராஜனை பணியிடை நீக்கம் செய்து பொறுப்பு துணைவேந்தர் சங்கர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். 



  • Dec 30, 2024 19:59 IST
    திருச்சியில் ஜனவரி 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியை ஒட்டி ஜனவரி 10-ம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜனவரி 25-ம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.



  • Advertisment
    Advertisement
  • Dec 30, 2024 18:21 IST
    சீமான் மீதான வழக்கு; நேரில் விளக்கம் அளித்த வருண்குமார் ஐ.பி.எஸ்; விசாரணை ஒத்திவைப்பு

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக திருச்சி எஸ்.பி வருண்குமார் தாக்கல் செய்த வழக்கில், எஸ்.பி.,யின் விளக்கத்தை கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்



  • Dec 30, 2024 17:44 IST
    திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடிப் பாலத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்

    திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.



  • Dec 30, 2024 17:19 IST
    சீமான் மீதான வழக்கு; திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் ஐ.பி.எஸ் ஆஜர்

    சீமான் மீதான வழக்கு தொடர்பாக திருச்சி எஸ்.பி வருண்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவதூறான கருத்துக்களை கூறியதாக சீமான் மீது எஸ்.பி.வருண்குமாரின் வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார்



  • Dec 30, 2024 16:14 IST
    தாணுமாலயன் கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு

    நாகர்கோவில் அருகே உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் வழிபாடு செய்தார்.



  • Dec 30, 2024 14:54 IST
    மதுரை: 32 சவரன், ரூ.2 லட்சம் பணம் கொள்ளை

    திருமங்கலம் அருகே ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன், ரூ.2 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி நகரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.



  • Dec 30, 2024 14:52 IST
    திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் - அ.தி.மு.க-வினர் கைது 

    சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டத்துக்கு எதிராக தமிழக முழுவதும் அதிமுக சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது‌. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் முல்லை சுரேஷ், சசிகுமார், ஜெயராமன் உள்ளிட்ட 300க்கு மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டுஅண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். மேலும் அவர் கூறிய சார் யாரு என கேட்டு யாரு அந்த SIR? என கோசங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    புறநகர் சார்பில் மணப்பாறையில் திருச்சி முன்னாள் எம்.பி.யும், திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    தமிழகம் முழுவதும் தடையை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுகவினர் பங்கேற்று கைது ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தி:க.சண்முகவடிவேல்.



  • Dec 30, 2024 12:26 IST
    தஞ்சை தமிழ் பல்கலை.யில் பரபரப்பு

    தஞ்சை தமிழ் பல்கலை.யில் பொறுப்பு துணைவேந்தர் சங்கர் மற்றும் பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

    இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டி, ஒருவரையொருவர் பதவியில் இருந்து நீக்கிய நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    புதிய பதிவாளராக துணைவேந்தர் சங்கரால் அறிவிக்கப்பட்ட வெற்றிச்செல்வன் பதவியேற்க உள்ள நிலையில் பதிவாளர் அறை பூட்டப்பட்டுள்ளது. பழைய பதிவாளர் தியாகராஜன், அறைக்கு வெளியே காத்திருக்கிறார். 

    துணைவேந்தர் அறையில் புதிய பதிவாளராக பொறுப்பேற்க கூடிய வெற்றிச்செல்வன் உள்ளார்

    அசம்பாவிதங்களை தவிர்க்க வல்லம் டிஎஸ்பி அன்பரசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறை உதவியுடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.



  • Dec 30, 2024 11:21 IST
    செல்லூர் கே.ராஜூ தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

    தி.மு.க., அரசைக் கண்டித்து மதுரையில் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திமுக அரசை கண்டித்து திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 



  • Dec 30, 2024 11:05 IST
    சாதி, மத உணர்வுகளை தூண்டும் வன்மம் பிடித்த ஸ்டாக் - தூத்துக்குடியில் ஸ்டாலின் அதிரடி பேச்சு 

    தூத்துக்குடியில் புதுமை பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'இத்தனை மாணவர்களை பார்ப்பதில் திராவிடியன் ஸ்டாக்-ஆக பெருமை கொள்கிறேன். இதற்கு மாறக ஒரு ஸ்டாக் உள்ளது. சாதி, மத உணர்வுகளை தூண்டும் வன்மம் பிடித்த ஸ்டாக். மதிப்பெண்கள் பெறுவதில் தமிழ்நாட்டு பெண்கள் டாப்' என்று கூறினார். 



  • Dec 30, 2024 11:04 IST
    புதுமைப்பெண் விரிவாக்க திட்டம்: தூத்துக்குடியில் ஸ்டாலின் 

    தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் தொடக்க விழா, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு மதியம் 1.05 மணிக்கு வந்தார்.

    விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது கட்சியினரை பார்த்து கையசைத்தபடி சென்றார். கட்சி நிர்வாகிகள் உற்சாக குரல் எழுப்பினர். சால்வை, புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கி வரவேற்றனர். கட்சி நிர்வாகிகளுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.

    அதனை தொடர்ந்து தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் ரூ.32 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து இந்த டைடல் பூங்காவில் அமைய உள்ள 2 நிறுவனங்களுக்கு இடஒதுக்கீட்டுக்கான ஆணைகளையும் வழங்கினார்.

    இந்த நிலையில், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

    இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவிகளுக்கு வங்கி கணக்கு அட்டைகளை வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75 ஆயிரத்து 28 மாணவிகள் பயன்பெறும் வகையில் மாதம் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது. மேலும் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பில் மோட்டார் சைக்கிள் வாகனங்களை முதல்-அமைச்சர் வழங்கினார்.

     

     



  • Dec 30, 2024 10:04 IST
    திருப்பூர் கார் விபத்து ஒருவர் பலி; 5 பேர் படுகாயம் 

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பழனி முருகன் கோயிலுக்குப் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில்  ராமன் (54) என்பவர் பலியாகினர். 5 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



  • Dec 30, 2024 09:49 IST
     ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு 

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 300-க்கும் குறைவான விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இவ்வாறு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.

    ராமேசுவரம் மீனவர்களை பார்த்ததும் அங்கு விரைந்து சென்ற இலங்கை கடற்படையினர் அவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை அவசர, அவசரமாக வெட்டி எடுத்து கொண்டு கரை திரும்பினர். இலங்கை கடற்படையினரின் இந்த அட்டூழியத்தால் ராமேசுவரம் மீனவர்கள் நேற்று காலை குறைந்த அளவிலான மீன்களுடன் கரை திரும்பினர்.இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    700-க்கும் அதிகமான படகுகள் உள்ள ராமேசுவரத்தில் இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கைக்கு பயந்து குறைந்த அளவிலான படகுகள் மட்டுமே மீன்பிடிக்க கடலுக்கு சென்றது 

     



  • Dec 30, 2024 09:22 IST
    கண்ணாடி பாலம் திறப்பு விழா - ஸ்டாலின் குமரி வருகை!

    திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிலையில், இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குமரி வருகை தருகிறார். குமரிக்கு வருகை தரும் அவர் திருவள்ளுவர் சிலையில் இருந்து விவேகானந்தர் பாறைக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கின்றார்.



  • Dec 30, 2024 09:22 IST
    தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்திற்கு  அன்புடன்  வரவேற்கிறோம்

    கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்தின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



Coimbatore Trichy Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment