பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.48 காசுக்கும் விற்பனையாகிறது.
சட்டசபை: தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார்.
-
Jan 06, 2025 22:33 ISTதென்காசியில் தீ விபத்து
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் தனியார் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிலிண்டர்கள் இல்லாதபோது விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
-
Jan 06, 2025 20:54 ISTத.வெ.க-வில் இருந்து வெளியேறிய வக்கீல்கள்
காரைக்காலில் த.வெ.க கட்சி வழக்கறிஞர்கள் உறுப்பினராக சேர்ந்த படிவத்தை கிழித்து எரிந்து வெளியேறினார்கள். கட்சி வளர்ச்சிக்கு முக்கிய நிர்வாகிகள் பாடுபடவில்லை. உரிய அங்கீகாரம் இல்லை என புகார் தெரிவித்துள்ளனர். அதிருப்தியில் அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகள் வெளியேற உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
-
Jan 06, 2025 19:54 ISTகும்பகோணம் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் கல் கருட சேவை
கும்பகோணம் அருகே சீனிவாச பெருமாள் ஆலயத்தில் கல் கருட சேவை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
-
Jan 06, 2025 19:25 ISTசர்ச்சை பேச்சு - சீமான் விளக்கம்
இப்படி நடக்கவேண்டுமென்று தெரிந்துதான் அந்த நிகழ்ச்சி நடந்திருக்கு.. இல்லையென்றால் என்னை ஏன் அவர்கள் கூப்பிடவேண்டும்? என சென்னை புத்தக காட்சியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் விமர்சனத்திற்கு உள்ளான தனது பேச்சு குறித்து நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்
-
Jan 06, 2025 18:38 ISTமக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கே அதிகாரம் - சீமான்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம். அவரவர் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அவசியம் என சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்
-
Jan 06, 2025 17:46 ISTமதுரை ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பதிவு தொடக்கம்
மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது. மதுரை, அவனியாபுரத்தில் விறுவிறுப்பாக ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது
-
Jan 06, 2025 16:20 ISTபுகார் மனுக்களுக்கு 15 நாட்களில் தீர்வு - கன்னியாகுமரி புதிய எஸ்.பி. ஸ்டாலின் உறுதி
பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களுக்கு 15 நாட்களில் தீர்வு காணப்படும்; கந்துவட்டி, போதைப் பொருட்கள் சம்பந்தப்பட்ட புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் கொண்டு வரும் வாகனங்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கன்னியாகுமரி மாவட்டத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Jan 06, 2025 14:58 ISTரூ.2.50 லட்சம் போதைப்பொருள் - ராக்கெட் ராஜா கூட்டாளி கைது
கோவை ரத்தினபுரி போலீசார் நேற்று ரோந்து சென்றபோது லட்சுமிபுரம் டெக்ஸ்டூல் பாலம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 2.5 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் கத்தி இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போதைபொருள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: கைது செய்யப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம், நாடார் தெருவை சேர்ந்த ராஜ்குமார் என்கிற தம்பி ராஜா (60). பிரபல ரவுடியான இவர் மீது 8 கொலை வழக்குகள் உள்ளன.
-
Jan 06, 2025 14:50 ISTதிருவண்ணாமலையில் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் கோஷ்டி மோதல்
திருவண்ணாமலையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. சேத்துப்பட்டு திருமண மண்டபத்தில் தி.மலை பாஜக வடக்கு மாவட்ட தலைவரை தேர்வு செய்ய கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது. குறிப்பிட்ட 5 பேர் போட்டியிடக்கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் அவதூறாக பேசியதுடன் அடிதடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Jan 06, 2025 14:15 ISTநீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு
நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் உறைபனிக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 12ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Jan 06, 2025 13:48 ISTமுதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
தனியார் பள்ளியில் 4 வயது குழந்தை கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
-
Jan 06, 2025 13:37 ISTஜல்லிக்கட்டு - காளைகளுக்கு மருத்துவமனைகளில் பரிசோதனை
ஜல்லிக்கட்டு - காளைகளுக்கு மருத்துவமனைகளில் பரிசோதனை நடைபெற்று வருகிறது. "மாடுகளின் உயரம் 120 செ.மீ. இருக்க வேண்டும், கொம்பு கூர்மையாக இருக்க கூடாது. கண்பார்வை, கொம்பு இடைவெளி, உடற்தகுதி போன்றவை பரிசோதனை" என்று கூறப்பட்டுள்ளது. இதனால், மதுரை அவனியாபுரத்தில் கால்நடை மருத்துவமனைகளில் காளை உரிமையாளர்கள் குவிந்து வருகிறார்கள்.
-
Jan 06, 2025 13:01 IST11 கிராம ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
11 கிராம ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்ப்ட்டது. சோமரசன்பேட்டையில் உள்ள வயலூர் சாலையில் திடீரென மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
Jan 06, 2025 12:40 ISTகைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண சம்பவத்தில் கைதான 18 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது
கைதானவர்கள் 6 மாதங்களுக்கு மேல் சிறையில் இருக்கும் நிலையில், இதற்கு மேலும் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் வைத்திருப்பதில் என்ன தேவை உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
-
Jan 06, 2025 12:35 ISTகங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி
இயக்குநர், இசையமைப்பாளர் கங்கை அமரன் உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை அருகே படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது.
-
Jan 06, 2025 10:53 ISTதேமுதிக பொதுக்கூட்டம்.. மேடையில் போட்ட குத்தாட்டம்.!
திருவண்ணாமலையில் நடந்த தேமுதிக பொதுக்கூட்டம் முடிவடைந்த நிலையில் மேடையில் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
-
Jan 06, 2025 10:06 ISTகளரி போட்டி
கன்னியாகுமரியில் தேசிய அளவிலான களரி போட்டி நடைபெற்றது. இதில் 300 பேர் பங்கேற்றனர்.
-
Jan 06, 2025 09:46 ISTதிண்டுக்கல் பா.ஜ.க மேற்கு மாவட்ட தலைவருக்கு ஜாமீன்
பழனியில் நேற்று கைது செய்யபட்ட திண்டுக்கல் பா.ஜ.க மேற்கு மாவட்ட தலைவர் பழனி கனகராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட இருவரையும் பழனி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
‘சட்டவிரோதமாக மதுபானக்கடை செய்லபடுகிறது’ என வீடியோ வெளியிட்டதற்காக நேற்று மாலை கைது செய்யப்பட்டிருந்த திண்டுக்கல் பா.ஜ.க மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜுக்கு, இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பழனி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜாமீன் அளித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.