/indian-express-tamil/media/media_files/2025/08/23/thiruchendur-aavani-therottam-2025-08-23-12-24-47.jpg)
Today Latest News Live Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Aug 23, 2025 12:44 IST
காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம் ரத்து
நெல்லை பத்தமடை காவல் உதவி ஆய்வாளருக்கு விதித்த ரூ.2 லட்சம் அபராதத்தை ரத்து செய்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. எஸ்.ஐ. ராஜரத்தினத்துக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பிறப்பித்த உத்தாவும் ரத்து செய்யப்பட்டது. மாமியாரை அடித்தது தொடர்பான புகாரில் மருமகளை காவல் நிலையத்தில் தாக்கியதாக எஸ்.ஐ. மீது வழக்கு தொடரப்பட்டது.
- Aug 23, 2025 12:26 IST
திருச்செந்தூரில் ஆவணி திருவிழா தேரோட்டம் - பக்திப் பரவசத்தில் பக்தர்கள்
திருச்செந்தூரில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது, பக்தர்களின் "அரோகரா" முழக்கம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விண்ணை எட்டும் அளவுக்கு ஒலித்து வருகிறது. மேலும் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகிறார்கள்.
- Aug 23, 2025 10:10 IST
12 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் - இன்று முதல் கடலுக்குச் செல்லும் ராமேஸ்வரம் மீனவர்கள்
12 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்குப் பின் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் சார்பில் கடந்த 11 நாட்களாக, தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வந்தது. இதனால் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதனிடையே ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் கடந்த 19 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று வாபஸ் பெற்றனர். மீன்வளத் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் 12 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்குப் பின் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.