/indian-express-tamil/media/media_files/2025/01/26/IU0ffFrTV2Gz9ZBf1ZHJ.jpg)
குடியரசு தின விழா:
நாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் அனைத்து மாவட்டங்களிலும் விமரிசையான கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
-
Jan 26, 2025 19:21 IST
பதவியை பற்றி எனக்கு கவலை இல்லை - ஸ்டாலின்
டெல்லி விவசாயிகள் போராட்டம் 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது, ஆனால் டங்ஸ்டன் போராட்டம் 3 மாதத்தில் முடிவுக்கு வந்துள்ளது. இதை நான் அரசியல் பிரச்சினையாக பார்க்கவில்லை, நமது பிரச்சினையாக பார்க்கிறேன். பதவியை பற்றி எனக்கு கவலை இல்லை, மக்களை பற்றி தான் எனக்கு கவலை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்
-
Jan 26, 2025 18:33 IST
தேசிய அளவிலான 'பைக் ரேஸ்'
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 'பைக் ரேஸ்' போட்டியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்போட்டியில் பங்கேற்று பைக்கில் சீறிப்பாய்ந்ததை பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.
-
Jan 26, 2025 16:51 IST
டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: 11,608 நபர்கள் மீதான வழக்கு வாபஸ்!
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 11,608 நபர்கள் மீது 3 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட 4 குற்ற வழக்குகளும்
இன்று வாபஸ் பெறப்பட்டன -
Jan 26, 2025 16:14 IST
கூலித் தொழிலாளி மரணம்
தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளத்தில் தாழ்வாக சென்ற மின்கம்பியில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
Jan 26, 2025 15:58 IST
பிரபல நிறுவனத்தின் ஸ்நாக்ஸில் புழு
புதுக்கோட்டை அருகே குழந்தைகள் உண்ணக்கூடிய பிரபல நிறுவனத்தின் தின்பண்டத்தில் புழுக்கள் இருந்ததாக புகார் எழுந்துள்ளது. பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க கோரி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது
-
Jan 26, 2025 15:23 IST
கும்பக்கரை அருவியில் குளிக்க இன்று ஒருநாள் மட்டும் அனுமதி இலவசம்
குடியரசு தினத்தை ஒட்டி, தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் குளிக்க இன்று ஒருநாள் (ஜனவரி 26) மட்டும் அனுமதி இலவசம் என வனத்துறை அறிவித்துள்ளது. சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
-
Jan 26, 2025 15:17 IST
வேங்கை வயல் விவகாரம்; உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் – த.வெ.க தலைவர் விஜய்
வேங்கை வயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லை. குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்
-
Jan 26, 2025 14:52 IST
வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை தேவையில்லை - சீமான்
வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை தேவையில்லை. மறுவிசாரணை போதும். சி.பி.ஐ விசாரணை கோரினால் மாநில தன்னாட்சி பறிபோகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
-
Jan 26, 2025 14:47 IST
பெருமாள் கோயிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம்
ராமநாதபுரத்தில் உள்ள ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார்!
-
Jan 26, 2025 13:00 IST
திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகரன் சஸ்பெண்ட்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் கல்குவாரிக்கு எதிராக புகாரளித்த அ.தி.மு.க நிர்வாகி ஜாஃபர் அலி கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாகக் கூறி, காவல் ஆய்வாளர் குணசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-
Jan 26, 2025 12:14 IST
தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை உள்ளது - செல்வப்பெருந்தகை
வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணை மீது நம்பிக்கை இருக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும், தாங்கள் சி.பி.ஐ விசாரணை கோரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jan 26, 2025 11:33 IST
திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரனை, பணியிடை நீக்கம்
புதுக்கோட்டை: ஜெகபர் அலி கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரனை, பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
Jan 26, 2025 09:18 IST
திருப்பரங்குன்றத்தில் யோகி பாபு தரிசனம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார்.
-
Jan 26, 2025 08:58 IST
33 மீனவர்கள் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ஒரே இரவில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். நேற்று இரவு 18 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அதிகாலை மீண்டும் 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.