Coimbatore, Madurai, Trichy News: த.வெ.க. மாநாடு: மதுரையில் 14 டாஸ்மாக் கடைகள் மூட கலெக்டர் உத்தரவு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tvk tasmac 2

Today Latest News Update: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Aug 19, 2025 21:14 IST

    த.வெ.க. மாநாடு: மதுரையில் 14 டாஸ்மாக் கடைகள் மூட கலெக்டர் உத்தரவு

    நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு, கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, திருமங்கலம் வட்டத்தில் உள்ள 10 டாஸ்மாக் கடைகள் மற்றும் 4 மதுபான விடுதிகளை மூட மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார்.



  • Aug 19, 2025 18:58 IST

    மதுரை த.வெ.க மாநாட்டு மேடையில் அண்ணா, எம்.ஜி.ஆர் படங்கள்

    அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் உடன் விஜய் இருப்பது போலவும் ‘வரலாறு திரும்புகிறது' என்ற வாசகத்துடனும், மதுரை த.வெ.க மாநாட்டு மேடையில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது



  • Advertisment
  • Aug 19, 2025 17:49 IST

    காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    காவேரி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1.35 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது



  • Aug 19, 2025 17:21 IST

    6 வழி உயர்மட்ட மேம்பால சாலை: டெண்டர் கோரிய என்.ஹெச்.ஏ.ஐ

    மதுரவாயல்-சென்னை வெளிவட்ட சாலை வரை 6 வழி உயர்மட்ட மேம்பால சாலைக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் டெண்டர் கோரி உள்ளது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது. சுமார் 8.13 கி.மீ. நீளத்துக்கு ரூ.1241 கோடி செலவில் கட்டுமான பணைகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது.



  • Advertisment
    Advertisements
  • Aug 19, 2025 17:00 IST

    தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்

    தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனே விடுவிக்க கோரி, காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவது என ராமேஸ்வரத்தில் மீனவ சங்கங்கள் முடிவு செய்தன. மீனவர்கள் ரயிலை மறித்ததால் ராமேஸ்வரம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் தங்கச்சிமடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.



  • Aug 19, 2025 16:53 IST

    மகன், மகளைக் கொலை செய்து தந்தை தற்கொலை

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மகன், மகளைக் கொலை செய்து தந்தை தற்கொலை செய்துகொண்டது குறித்து உடல்களைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்னையால் மனைவி பிரிந்து சென்றதால் ராஜா (40) என்பவர் தனது 12 வயது மகன் மற்றும் 7 வயது மகள் இருவரையும் தூக்கிட்டு கொலை செய்து, தற்கொலை செய்துள்ளார்.



  • Aug 19, 2025 16:36 IST

    ”நோயாளிகளின் உடல் உறுப்புகளை விற்பது கொடூரம்”

    சிறுநீரக விற்பனை விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் “மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உடல் உறுப்புகளை மருத்துவர் எடுத்து விற்பனை செய்வது கொடூரமானது, அபாயகரமானது. மனித உடலுறுப்புகளை பிற பொருட்களைப் போல விற்பனை செய்வது ஏற்கத்தக்கதல்ல. கிட்னி விற்பனை விவகாரத்தில் இதுவரை ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?. ஏழை மக்களின் வறுமை நிலையை பயன்படுத்தி அவர்களிடமிருந்து உடல் உறுப்புகளை சிலர் வாங்குவது தெரியவந்துள்ளது. உடல் உறுப்பு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.



  • Aug 19, 2025 16:31 IST

    மதுரை மாநகராட்சி வரி முறைகேடு-கோர்ட் உத்தரவு

    சொத்து வரி சரியாக நிர்ணயம் செய்திருப்பதை உறுதிப்படுத்த தேவையான சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் கட்டடங்களுக்கு சொத்து வரி சரியாக நிர்ணயம் செய்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது.



  • Aug 19, 2025 16:29 IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.01 லட்சம் கனஅடி

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1.01 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. வெளியேற்றப்படும் நீரின் அளவு 50,500 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 118.37 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 90.895 டி.எம்.சி. ஆக உள்ளது.



  • Aug 19, 2025 16:07 IST

    மதுரை சென்றடைந்தார் த.வெ.க. தலைவர் விஜய்

    நாளை மறுநாள் தவெக மாநாடு நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தற்போது மதுரை சென்றடைந்துள்ளார். மாநாட்டு பணிகள் குறித்து இன்று மாலையில் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் இன்று முதல் மாநாடு நிறைவு பெறும் வரை விஜய் மதுரையில் தான் இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.



  • Aug 19, 2025 15:41 IST

    மதுரை: தவெக மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரம்

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை மறுநாள்(ஆக. 21) நடைபெறவுள்ள நிலையில், மதுரை சென்றடைந்தார் தவெக தலைவர் விஜய். மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரப்பத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிறுவன தலைவர் விஜய் தலைமையில் அந்தக் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.



  • Aug 19, 2025 15:40 IST

    பழனியில் நாளை முதல் மீண்டும் ரோப் கார் சேவை

    பழனியில் முருகன் கோயிலில் நாளை(ஆக. 20) முதல் மீண்டும் ரோப் கார் சேவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக, ஜூலை 15 ஆம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோப் கார் சேவை, நாளை(ஆக. 20) முதல் மீண்டும் பயன்பாட்டு கொண்டுவரப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 35 நாள்களுக்குப் பிறகு நாளை காலை 9 மணிக்கு ரோப் கார் சேவை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

     



  • Aug 19, 2025 15:39 IST

    மீனவர்கள் ரயில் மறியல் அறிவிப்பு: போலீஸ் குவிப்பு

     ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை அரசு கைது செய்யும் நடவடிக்கையை கண்டித்து மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்திருப்பதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். தங்கச்சிமடம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கபட்டுள்ளனர். தடுப்பு பேரிகாட்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



  • Aug 19, 2025 15:37 IST

    பாம்பன் மீனவர்களுக்கு தலா ரூ.3.5 லட்சம் அபராதம்

    ஜூலை 29ல் கைதான பாம்பன் மீனவர்கள் 9 பேருக்கு தலா ரூ.3.5 லட்சம் அபராதம் விதித்தது இலங்கை நீதிமன்றம். 9 மீனவர்களும் தலா ரூ.3.5 லட்சம் அபராதம் செலுத்தினால் விடுதலை என்றும் தவறினால் 3 மாத சிறை என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.



  • Aug 19, 2025 15:08 IST

    உதகையில் மரம் விழுந்ததில் படகு இல்லம் சேதம்

    உதகையில் சூறாவளி காற்றால் 2 ராட்சத மரங்கள் விழுந்ததில் படகு இல்லம் பலத்த சேதம் அடைந்துள்ளது. படகு இல்லத்தின் கூரை பலத்த சேதம் அடைந்ததால் படகு இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

     



  • Aug 19, 2025 15:05 IST

    ஒகேனக்கல் நீர்வரத்து 1.25 லட்சம் கனஅடியாக உயர்வு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 6 மணிக்கு 6,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, மாலை 6 மணி நிலவரப்படி 43,000 கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரியில் பரிசல் சவாரிக்கும் தடை விதித்து, கலெக்டர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார். 



  • Aug 19, 2025 14:23 IST

    கிட்னி விற்பனை விவகாரம்: மக்களின் உரிமையை பாதுகாக்க அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்

    சட்டவிரோத கிட்னி விற்பனை விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாணையில்,கிட்னி மற்றும் உடல் உறுப்புகள் விற்பனை செய்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், ஏழை, எளிய மக்கள் உயிர் வாழும் உரிமையை பாதுகாப்பது அரசின் கடமை என அறிவுறுத்தியுள்ளனர்.

     



  • Aug 19, 2025 12:51 IST

    தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50,000 அபராதம்

    தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதுகுளத்தூரைச் சேர்ந்த மனுதாரர் அமல்ராஜுக்கு ரூ.50,000 அபராதம் விதித்து ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார் அமல்ராஜ்.



  • Aug 19, 2025 12:42 IST

    நெல்லை ஆணவக் கொலை வழக்கு: கவினுடன் பேசியவர்களிடம் விசாரணை

    நெல்லை ஆணவக் கொலை வழக்கில் ஜூலை 27ல் கவினுடன் செல்போனில் பேசியவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூலை 27ல் கவின் கொலை செய்யப்படுவதற்கு முன் அவருடன் பேசியவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர். கவின் ஆணவக்கொலை வழக்கில் ஏற்கெனவே சுர்ஜித், சரவணன், ஜெயபாலன் கைது செய்யப்பட்டனர்.



  • Aug 19, 2025 12:19 IST

    விருத்தாசலத்தில் பேருந்து படிகட்டில் தொங்கிய மாணவர்களுக்கு நீதிமன்ற நீதிபதி அறிவுரை!!

    விருத்தாசலத்தில் பேருந்து படிகட்டில் தொங்கிய மாணவர்களுக்கு நீதிமன்ற நீதிபதி அறிவுரை வழங்கினார். அதிக பயணிகளை பேருந்தில் ஏற்றக் கூடாது என அரசு பேருந்து ஒட்டுநர். நடத்துநருக்கும் நீதிபதி அறிவுரை வழங்கி உள்ளார். படியில் தொங்குபவர்களை கண்டுகொள்ளாவிடில் உங்கள் மீது புகார் கூற வேண்டியிருக்கும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.



  • Aug 19, 2025 11:19 IST

    ரயில் மறிப்பு போராட்டம் 

    ராமேஸ்வரம் தங்கச்சிமடம் மீனவர்கள் இன்று மாலை ரயில் மறிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். அண்மையில் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், இன்று போராட்டம் அறிவித்துள்ளனர். 



  • Aug 19, 2025 11:12 IST

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 6 மணிக்கு 6,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, மாலை 6 மணி நிலவரப்படி 43,000 கனஅடியாக அதிகரித்தது.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரியில் பரிசல் சவாரிக்கும் தடை விதித்து, கலெக்டர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியை தாண்டியது. கே.ஆர்.எஸ். அணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



  • Aug 19, 2025 10:20 IST

    பதக்கங்கள் வென்றவர்களை நேரில் அழைத்து பாராட்டிய திருச்சி எஸ். பி

    காவல் துறையினருக்கான திறனாய்வுப் போட்டியில் வெற்றிபெற்ற காவலா்களை திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் நேரில் அழைத்து பாராட்டினாா். 

    தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் காவலா்களுக்கான 69-ஆம் ஆண்டு காவல் துறை திறனாய்வுப் போட்டி கடந்த ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது.
    இதில், திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலைய தனிப்பிரிவு காவலா் விஜயகுமாா், தடய அறிவியல் புலனாய்வுப் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றாா். வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்தல் பிரிவில் மண்ணச்சநல்லூா் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலா் ராம்கி இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், சிறுகனூா் காவல் நிலைய தலைமைக் காவலா் முருகானந்தம் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றனா்.

    இந்நிலையில், பதக்கம் வென்ற காவலா்களை தமது அலுவலகத்துக்கு வரவழைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்  செ.செல்வநாகரத்தினம் பாராட்டினாா். பிரபலங்களும் தத்தம் மடல்களை காண்பித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    செய்தி: க.சண்முகவடிவேல்



  • Aug 19, 2025 10:19 IST

    திருவண்ணாமலை  - அண்ணாமலையாரை தரிசித்த இளையராஜா

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்துள்ளார். அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் மாலை அணிவித்து, பிரசாதம் வழங்கியுள்ளனர். 



Trichy Madurai Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: