Coimbatore, Madurai, Trichy News: அஜித் குமார் கொலை வழக்கு - சி.பி.இ குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sivagangai  Madapuram Ajith Kumar Custodial Death Case court permit CBI to question 5 police arrested Tamil News

Sivagangai Madapuram Ajith Kumar Custodial Death Case:

Today Latest Live News Update in Tamil 20 August 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Aug 20, 2025 12:52 IST

    அர்ச்சகர் வீட்டில் நகை கொள்ளை - 8 பேர் கைது

    குலசை முத்தாரம்மன் கோயில் அர்ச்சகர் வீட்டில் 107 சவரன் கொள்ளையில்  பெண் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 80 சவரன் நகைகள் மீட்க்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்தபோது திட்டம் தீட்டி கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமமாகியுள்ளது. 



  • Aug 20, 2025 12:51 IST

    த.வெ.க இரண்டாம் மாநில மாநாடு - மதுரை வந்த விஜயின் பெற்றோர்

    த.வெ.க இரண்டாம் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விஜயின் பெற்றோர் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். 

     



  • Advertisment
  • Aug 20, 2025 12:26 IST

    த.வெ.க மதுரை மாநாட்டிற்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

    த.வெ.க மதுரை மாநாட்டிற்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி காளீஸ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கல்லூரி 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.



  • Aug 20, 2025 11:45 IST

    5 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

    கோவை, நீலகிரி, தர்மபுரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 



  • Advertisment
    Advertisements
  • Aug 20, 2025 11:36 IST

    தவெக மதுரை மாநாட்டிற்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

    தவெக மதுரை மாநாட்டிற்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி காளீஸ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கல்லூரி 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.



  • Aug 20, 2025 11:03 IST

    கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் பயிற்சி விமானம் வட்டமிட்டதில் பயங்கர சத்தம்; மக்கள் பீதி

    கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் பகுதியில் இன்று காலையில் பயிற்சி விமானம் வானத்தில் வட்டமிட்டு சென்று வருகிறது. இந்நிலையில் வினைதீர்த்தாபுரம் , பங்காரம், நாககுப்பம் உள்ளிட்ட கிராம பகுதியில் பயிற்சி விமானம் வட்டம் மிட்டு சென்றபோது திடீரென குண்டு மழை பொழிந்தது போல் பயங்கர சத்தம் ஏற்பட்டதால் வீடுகளில் இருந்த மக்கள் அச்சத்துடன் வெளியேறினார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



  • Aug 20, 2025 09:36 IST

    த.வெ.க மாநாட்டு திடலுக்கு இன்று இரவு விஜய் வருகை

    மதுரையில் நாளை தவெக 2ம் மாநில மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இன்று இரவு மாநாட்டு திடலுக்கு தவெக தலைவர் விஜய் வருகிறார். நாளை நடைபெறும் மாநாட்டிற்கு விஜய்யின் தாய், தந்தை வருகை தர உள்ளனர்.



  • Aug 20, 2025 09:35 IST

    டிராக்டர் கவிழ்ந்து விபத்து

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தேங்காய் ஏற்றி வந்த டிராக்டர் திடீரென டயர் கழன்று ஓடியதால் விபத்து ஏற்பட்டது. தேங்காய் மீது அமர்ந்து பயணித்த 5 பெண்கள் காயமடைந்ததில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Aug 20, 2025 09:06 IST

    கார் மரத்தில் மோதிய விபத்தில் 3 பேர் பலி

    கடலூர், விருத்தாசலம் அருகே மரத்தில் கார் மோதிய கோர விபத்தில் 3 பேர் பலி; படுகாயம் அடைந்த 4 பேர் மீட்கப்பட்டுள்ளார். 



  • Aug 20, 2025 09:05 IST

    காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்தியவர்கள் கைது

    ஈரோடு அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கடத்திச் சென்ற உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்துக்கு கடத்திச் சென்றபோது வழியில் நாடகமாடி உறவினர்களிடம் இருந்து தப்பிய பெண் மீட்கப்பட்டது. பெண்ணின் மனதை மாற்ற மாந்திரீக பூஜைக்காக உறவினர்கள் கடத்திச் சென்றதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இளம்பெண்ணை கடத்திச் சென்ற பெற்றோர், உறவினர்கள் என 5 பேரை போலீசார் கைது செய்தனர்.



  • Aug 20, 2025 09:05 IST

    ராமலிங்கம் கொலை வழக்கு - 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

    ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானலில் 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை. திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்ளிட்ட 8 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகிறது. 



Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: