Coimbatore, Madurai, Trichy News Highlights: தஞ்சை அருகே விபத்து - 4 பேர் உயிரிழப்பு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tnj accident death
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கலுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியது. மேலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. 
  • May 21, 2025 21:30 IST

    தஞ்சை அருகே விபத்து - 4 பேர் உயிரிழப்பு

    தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அரசுப் பேருந்தும், டெம்போ டிராவலர் வேனும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தவிர சுமார் 20 பேர் படுகாயங்களுடன் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • May 21, 2025 21:05 IST

    மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். வீட்டில் மின்சாரம் இல்லாததால், மின் கம்பத்தில் ஏறிய போது இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Advertisment
  • May 21, 2025 19:25 IST

    இளைஞர் கொலை வழக்கில் 4 பேருக்கு சிறை

    ராமநாதபுரத்தில் இளைஞரை அடித்து கொலை செய்து கடலில் வீசிய சம்பவம்.  குற்றவாளிகளை ஜூன் 6ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு முக்கிய குற்றவாளிகளான நான்கு பேருக்கு சிறைக்காவல் விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவு 2 நாட்களுக்கு முன்பு அப்துல்லாவை காரில் கடத்தி கொலை செய்து கடலில் வீசினர். கொலை செய்த 3 பேர் நேற்று முன்தினம் போலீசாரிடம் சரணடைந்தனர். முகமது அனஸ், முகமது ஷாருக்கான், சிவப்பிரசாத், முதியவர் லியக்கத் அலி ஆகியோருக்கு சிறைக்காவல் விடுக்கப்பட்டுள்ளது. 



  • May 21, 2025 19:16 IST

    கல்குவாரி உரிமம் ரத்து

    சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டையில் மேகா மெட்டல் கல்குவாரியில் பாறைகள் உருண்டு 5 பேர் பலியான நிலையில் உரிமம் ரத்து செய்யப்பட்டது.



  • Advertisment
    Advertisements
  • May 21, 2025 19:07 IST

    டாஸ்மாக் அதிகாரிகளிடம் ED நடத்திய விசாரணை நிறைவு

    டாஸ்மாக் அதிகாரிகளிடம், சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணை நிறைவு. டாஸ்மாக் அதிகாரிகள் ஜோதி சங்கர், சங்கீதா இருவரிடமும் 6 மணி நேரமாக தனித்தனியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் துரைராஜ் செல்வராஜ் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • May 21, 2025 19:06 IST

    சூட்கேஸில் இளம்பெண் உடல் - கர்நாடகாவில் அதிர்ச்சி

    கர்நாடக மாநிலம் சந்தாபுரம் பகுதியில் சூட்கேஸில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ரயில்வே மேம்பாலத்திற்கு அருகே சூட்கேஸில் இருந்த இளம்பெண் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • May 21, 2025 18:33 IST

    கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து மோப்பநாயுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 



  • May 21, 2025 18:07 IST

    புதிய கற்காலத்தின் தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிப்பு

    விழுப்புரம் அருகே தென்னமாதேவி பகுதியில் சங்க காலம், புதிய கற்காலத்தின் தொல்பொருள் எச்சங்கள் கண்டறியப்பட்ட நிலையில், அங்கு அகழாய்வு நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி, தொல்லியல்துறை இணை இயக்குநர் தலைமையிலான குழு அங்கு ஆய்வு. 2 மாதங்களில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 



  • May 21, 2025 17:41 IST

    ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் ஆட்சியர் அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரித்துள்ளது. தொலைபேசி வாயிலாக வந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலத்த சோதனைக்கு பிறகே சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.



  • May 21, 2025 17:40 IST

    பாரம்பரிய நடனம் ஆடிய பழங்குடியினர்

    கொடைக்கானல் ரோஸ் கார்டன் பகுதியில் கோடை விடுமுறைக்காக வந்துள்ள சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக பழங்குடியினரின் பாரம்பரிய நடனம் ஆடினர். பாரம்பரிய உடை அணிந்து வேப்பிலை உள்ளிட்ட இலை தலைகளை தங்கள் உடம்புகளில் கட்டிக் கொண்டு நடனமாடி சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்தனர்.



  • May 21, 2025 17:39 IST

    மின் கம்பியை மிதித்து உயிரிழந்த தாத்தா - காப்பாற்றும் முயற்சியில் பேரனும் உயிரிழப்பு

    ஆரணி அருகே எஸ்.காட்டேரி என்ற கிராமத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் அறுந்து கீழே கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் மீது மின்சாரம் பாய்ந்தது. தாத்தா வலிப்பு வந்து துடிப்பதாக நினைத்து காப்பாற்ற முயன்ற பேரனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.



  • May 21, 2025 16:59 IST

    ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் ஆட்சியர் அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு. தொலைபேசி வாயிலாக வந்த  வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலத்த சோதனைக்கு பிறகே சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். 



  • May 21, 2025 15:59 IST

    "தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்"

    "நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்" என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 



  • May 21, 2025 15:40 IST

    கோவை- இறந்த யானையின் வயிற்றில் பிளாஸ்டிக்

    கோவை: உயிரிழந்த யானையின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அலுமினியம் இருந்ததாக தகவல்; நுண்ணுயிர் தொற்று ஏற்பட்டு நச்சுத்தன்மை அதிகமாகி உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு யானை இறந்தது.  “கர்ப்பப்பையில் இருந்த 12-14 மாத யானையின் குட்டி ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது" என்று வன அலுவலர் தெரிவித்துள்ளார். 



  • May 21, 2025 15:03 IST

    கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை

    ஈரோடு, பெருந்துறையில் கடந்த 2013ல் நடைபெற்ற கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை செய்யப்பட்டார். குறிப்பாக, கடந்த 2013ல் ஹேமலதா - பாலாஜி ஆகியோர் கடத்தப்பட்ட வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது யுவராஜ் உள்ளிட்ட 3 பேருக்கும் எதிரான சாட்சிகள் அனைத்தும் பிறழ் சாட்சியாக மாறியதால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், மீண்டும் கோவை மத்திய சிறைக்கு யுவராஜை அழைத்துச் சென்றனர்.



  • May 21, 2025 13:01 IST

    கோவை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

    கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் தாக்கியதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்



  • May 21, 2025 11:57 IST

    உயிரிழந்த யானையின் வயிற்றில் குட்டி ஆண் யானை

    கோவை, மருதமலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்த பெண் காட்டுயானையின் வயிற்றில் கிலோ கணக்கில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள். பிரேத பரிசோதனையில் யானையின் வயிற்றில் இறந்த நிலையில் ஆண் குட்டி யானை கண்டெடுப்பு 



  • May 21, 2025 11:44 IST

    விஷவாயு தாக்கி 3 பேர் பலி - இருவர் கைது

    திருப்பூர், கரைப்புதூர் பகுதியில் தனியார் சாய ஆலையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சாய ஆலையின் மேலாளர் தனபால், மேற்பார்வையாளர் ஜெயா அரவிந்த் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைப்பு



  • May 21, 2025 10:33 IST

    ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்த கரடி

    உதகை அருகே தும்மனட்டி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் கரடி உலவியதால், செவிலியர்கள், நோயாளிகள் வெளியே நடமாட அச்சம்



  • May 21, 2025 09:28 IST

    திருவாரூர், ஈரோட்டில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

    திருவாரூர், ஈரோட்டில் நாளை (22.05.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    திருவாரூர்: உபயவேதாந்தபுரம், கொல்லபுரம், பூங்காவூர், நெடுஞ்சேரி, ஆண்டாள் தெரு, பனகல் சாலை, குமாரகோவில் தெரு, திருவிழிமிழலை, செருகுடி, பகசாலி, தூளர், கட்டிமேடு, அதிரெங்கம், பழையகோட்டை, பாபாஜிகோட்டை, கன்னியக்குருச்சி, எலவனூர்.

    ஈரோடு: சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம்காலனி, உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரெயில்நகர், கே.கே.நகர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 21, 2025 09:26 IST

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

    ராமநாதபுரம் கீழக்கரை ஏர்வாடி தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு நாளை (மே 22) ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.



  • May 21, 2025 09:24 IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமைவினாடிக்கு 9,683 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா்மட்டம் 1.21 அடி உயா்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 109.33 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 110.03 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 78.45 டிஎம்சியாக உள்ளது. கடந்த இரண்டு நாள்களில் அணை நீர்மட்டம் 1.21 அடி உயர்ந்துள்ளது. மேட்டூரில் மழை அளவு 4 மி.மீ.



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: