/indian-express-tamil/media/media_files/2025/06/24/madurai-high-court-2025-06-24-22-10-02.jpg)
கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் நினைவு தினம்: கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம். உயிரிழந்த 94 குழந்தைகளின் உருவப் படத்திற்கு அவர்களுக்குப் பிடித்த உணவுப் பொருட்களை படைத்து பெற்றோர், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
-
Jul 16, 2025 20:48 IST
கள ஆய்வு முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் மு.க.ஸ்டாலின்
கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகள், கள ஆய்வு முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சோழன் விரைவு ரயிலில் வந்திறங்கிய முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள்
-
Jul 16, 2025 20:00 IST
தண்டவாளத்தில் புகைமூட்டம் – ஸ்டாலின் வரும் ரயில் நிறுத்தம்
கடலூர், மயிலாடுதுறை நிகழ்ச்சிகளை முடித்து முதல்வர் ஸ்டாலின் ரயிலில் சென்னை திரும்புகிறார். இந்நிலையில், மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ரயில் மதுராந்தகம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் கடும் புகைமூட்டம் இருந்ததால் சோழன் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டுள்ளது.
வயல்வெளியில் தீப்பற்றி எரிவதால் தண்டவாளம் இருக்கும் பகுதியை புகைமூட்டம் சூழ்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு கருதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வரும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
-
Jul 16, 2025 19:46 IST
குடிநீர் பிடிப்பதில் சாதிய பாகுபாடு காட்ட கூடாது - மதுரை ஐகோர்ட் உத்தரவு
தென்காசி தலைவன்கோட்டையில் குடிநீர் பிடிப்பதில் ஜாதிய பாகுபாடு காட்டக் கூடாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. தென்காசியைச் சேர்ந்த திருமலைசாமி என்பவரது மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார். தண்ணீர் போன்ற பொதுவான வளங்களை பகிர்ந்து கொள்வதில் கூட ஒடுக்குமுறையா?, குடிநீர் பிடிப்பதில் ஜாதிய பாகுபாடு காட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து தெருக்களிலும் போதுமான அளவு குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் தென்காசி ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
-
Jul 16, 2025 19:13 IST
தரையில் கிடக்கும் குழந்தைகள்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தொட்டில் வசதி இல்லாததால் பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் வீடியோ கவலையளிக்கிறது என நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
Jul 16, 2025 18:30 IST
கிட்னி திருட்டில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனை
திருச்சியை சேர்ந்த சீத்தர் மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி ஆசை வார்த்தை கூறி கிட்னி திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போதிய வருமானமின்றி கடன் தொல்லையால் அவதிப்படும் மக்களை குறிவைத்து ஒரு கிட்னி ரூ.10 லட்சம் கொடுப்பதாக கூறி அழைத்து சென்று கிட்னி திருடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Jul 16, 2025 17:58 IST
மாற்றுத்திறனாளி வேட்புமனு தாக்கல்
பட்டுக்கோட்டையில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினருக்கான வேட்புமனுவை மாற்றுத்திறனாளி ஆனந்தகிருஷ்ணன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
-
Jul 16, 2025 17:25 IST
அஜித்குமார் இறப்புச் சான்றிதழ் - விளக்கம் அளித்த காவல்துறை
அஜித்குமாரின் இறப்பு அறிக்கை சுகாதார துறையிடம் வழங்கப்பட்டதாக திருப்புவனம் காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். மேலும், அஜித்குமார் தொடர்பான ரசீது திருப்புவனம் காவல் நிலையம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், இறப்பு சான்றிதழ் பெறுவதில் சிக்கல் எழுந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்களை சமர்ப்பித்து இறப்பு சான்றிதழ் பெறலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
Jul 16, 2025 17:08 IST
டெய்லர் ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார்
கோவையில், 1998-ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாவை, போலீசார் கடந்த 10-ஆம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், இன்று டெய்லர் ராஜாவை கோவை 5-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், அவரை விசாரணை காவலில் எடுக்க போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
-
Jul 16, 2025 16:36 IST
அரசு பணி பெற மாற்றுத்திறன் தடையில்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
அரசு பணி பெறுவதற்கு மாற்றுத்திறன் தடையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பாதுகாப்பு படைக்கு தேர்வான நபருக்கு கூடுதல் விரல் இருப்பதாகக் கூறி, பணி வழங்க மறுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில், அரசு வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், அரசுப் பணிக்கு மாற்றுத்திறன் தடையில்லை என்றும் உத்தரவிடப்பட்டது.
-
Jul 16, 2025 14:56 IST
நெல்லையில் அல்வாவில் தேள்: பிரபல கடைக்கு நோட்டீஸ்
நெல்லையில் அல்வாவில் தேள் இருந்த புகாரில் பிரபல கடை விளக்கம் தரக் கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அல்வாவில் தேள் இருந்த வீடியோ வைரலான நிலையில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அல்வா கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
-
Jul 16, 2025 14:56 IST
மதுரை ஆதீனத்திற்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது :காவல்துறை எதிர்ப்பு
மதுரை ஆதீனத்தின் பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் சைபர் கிரைம் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது, காவல்துறை தரப்பில், கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதால் மதுரை ஆதீனத்திற்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது, என்று தெரிவிக்கப்பட்டது.
-
Jul 16, 2025 14:40 IST
உத்தராகண்ட் பள்ளிகளில் தினமும் பகவத் கீதை உபதேசம் கட்டாயம்
உத்தராகண்ட் அரசு பள்ளிகளில் காலை பிரார்த்தனையில் தினமும் பகவத் கீதை வாசகங்களை கூறுவது கட்டாயம் என்று உத்தராகண்ட் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பகவத் கீதையில் இருந்து ஒரு வாசகம் கண்டிப்பாக கூற வேண்டும்; வார இறுதியில் பகவத் கீதை தொடர்பாக வகுப்பறைகளில் மாணவர்கள் விவாதிக்க வேண்டும் என்றும் உத்தராகண்ட் அரசு அறிவித்துள்ளது.
-
Jul 16, 2025 12:55 IST
வரும் தேர்தலில் உங்களுக்கு நிரந்தரமாக Good Bye சொல்லப் போகிறார்கள் - எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் பதிலடி
மயிலாடுதுறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு: “எனக்கு எட்டிபாடி பழனிசாமி டாடா Bye Bye சொல்கிறார். 10 தோல்வி பழனிசாமி அவர்களே, கடந்த 10 தேர்தல்களில் மக்கள் உங்களுக்குத்தான் Bye Bye சொன்னார்கள். வரும் தேர்தலில் உங்களுக்கு நிரந்தரமாக Good Bye சொல்லப் போகிறார்கள்” என்று கூறினார்.
-
Jul 16, 2025 12:47 IST
கச்சத்தீவை மீட்க பா.ஜ.க அரசு நடவடிக்கை எடுத்ததா? - ஸ்டாலின் கேள்வி
மயிலாடுதுறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு: “தமிழக மீனவர்களின் நலனில் ஒன்றிய அரசுக்கு அக்கறை இல்லை; 10 ஆண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்ததா? கச்சத்தீவை தாரைவார்த்த விவகாரத்தில் பா.ஜ.க அரசு அரசியல் செய்கிறது” விமர்சித்துள்ளார்.
-
Jul 16, 2025 12:32 IST
அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையின் நகலை தருவதில் தாமதம்; சகோதரர் புகார்
மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையின் நகலை தருவதில் தாமதம் என தம்பி நவீன் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
-
Jul 16, 2025 12:17 IST
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூலை 24 உள்ளூர் விடுமுறை - கலெக்டர் உத்தரவு
ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூலை 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
-
Jul 16, 2025 11:17 IST
மேட்டூர் அணை நீர் வரத்து
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 17,235 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 119.56 அடியாகவும், நீர் இருப்பு 92.772 டி.எம்.சி. ஆகவும் உள்ளது
டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் வழியே விநாடிக்கு 18,500 கன அடி நீர் வெளியேற்றம்
-
Jul 16, 2025 10:50 IST
கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறப்பு. அணையின் வலது மற்றும் இடது கால்வாயில் இருந்து வரும் நவம்பர் 2ம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
16 ஊர்களில் உள்ள 9012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது
-
Jul 16, 2025 10:49 IST
பாமகவின் 37ம் ஆண்டு தொடக்க விழா
தைலாபுரத்தில் பாமகவின் 37ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து அம்பேத்கர், பெரியார், காரல் மார்க்ஸ் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராமதாஸ் உடன் அவரது பேரன் முகுந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு. -
Jul 16, 2025 10:45 IST
நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல்
கடலூர்: நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், சுற்றுச் சூழல் பாசறை மாநில செயலாளர் முகமது அலி ஜின்னா, ஐ.டி. விங் மாநில ஒருங்கிணைப்பாளர் வினோத் குமார் ஆகியோர் விலகுவதாக அறிவிப்பு
-
Jul 16, 2025 10:27 IST
பயன்பாட்டுக்கு வந்த திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம்
பன்னாட்டு விமான நிலையத்திற்கு நிகராக மெளிரும் திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய ஒருங்கிணைந்த முனையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. பேருந்து சேவைகளை அமைச்சர் கே என்.நேரு துவக்கி வைத்தார்.
மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்க படாது. சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் இரண்டும் பயன்பாட்டில் தான் இருக்கும். நகரப் பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படும் எனவும் தெரிவித்தார். -
Jul 16, 2025 10:18 IST
கோயில் சிலை உடைப்பு- தீக்குளிக்க முயன்ற மக்கள்
விருதுநகர் மாவட்டம், அர்ச்சுனாபுரத்தில் உள்ள நல்லதங்காள் கோயிலில் சிலை உடைப்பு;அறநிலையத்துறை சார்பில் பாலாலயம் நடத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் கோயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோயிலுக்குள் பொதுமக்கள் செல்லவிடாமல் போலீசார் தடுத்ததால் வாக்குவாதம், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கிராம மக்கள் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு நிலவியது.
-
Jul 16, 2025 09:46 IST
த.வெ.க. 2-வது மாநில மாநாட்டுக்கு மதுரையில் பூமிபூஜை
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை திரைக்கு பின்னும், முன்னும் தொடங்கி உள்ளன. அதைபோல தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, மாநாட்டுக்கான பூமிபூஜை இன்று (புதன்கிழமை) அதிகாலை நடைபெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 16, 2025 09:37 IST
ரயில் விபத்துக்கு காரணமான கேட் கீப்பர் பணிநீக்கம்
கடலூர் ரயில் விபத்துக்கு காரணமான கேட் கீப்பர் பங்கஜ்குமார் விசாரணை அறிக்கையின்படி பணிநீக்கம் செய்யப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.
-
Jul 16, 2025 09:35 IST
கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் தினம் இன்று அனுசரிப்பு
கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 19 குழந்தைகள் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் ஜூலை 16-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 21 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி குழந்தைகளை இழந்த பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து , புத்தாடைகள் வைத்து கண்ணீரை காணிக்கையாக செலுத்தினர்.
-
Jul 16, 2025 09:15 IST
கோவை, நீலகிரியில் 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி மாவட்டங்களில், அடுத்த 6 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், நாளை கனமழை பெய்யும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி மாவட்டங்களில், நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
Jul 16, 2025 09:15 IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,235 கன அடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,485 கனஅடியில் இருந்து 17,235 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.56 அடி; மேட்டூர் அணையின் நீர் இருப்பு 92.77 டி.எம்.சி., மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 18,000 கனஅடி நீர் வெளியேற்றம். மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
-
Jul 16, 2025 09:15 IST
தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த 6 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த 6 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஜூலை 17, 18, 19, 20, 21, 22 ஆகிய 6 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.