/indian-express-tamil/media/media_files/2025/05/19/6Uh7L6KbGX0fwEMUPJZp.jpg)
-
May 19, 2025 18:55 IST
'இலை எப்போதுமே கீழேதான் இருக்கும். பூ மேலே இருக்கும்' - பா.ஜ.க கே.பி.ராமலிங்கம் பேட்டி
"தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தேசிய ஜனநாயக் கூட்டணி உள்ளது. இலை எப்போதுமே கீழேதான் இருக்கும். பூ மேலே இருக்கும்" என்று நாமக்கல்லில் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
-
May 19, 2025 18:34 IST
விருதுநகரில் அரசு மருத்துவருக்கு ரூ.40 லட்சம் அபராதம்
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தவரை வற்புறுத்தி, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி பணம் பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அரசு மருத்துவருக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதித்துள்ளது மாநில மனித உரிமை ஆணையம்.
-
May 19, 2025 18:20 IST
இரவு 7 மணிக்குள் சென்னை உட்பட 26 மாவட்டங்களில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் சென்னை உட்பட 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, மதுரை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம், நாகை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
May 19, 2025 18:07 IST
திண்டுக்கலில் கல்லூரி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 10 பேர் காயம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கல்லூரி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். முன்னால் சென்ற வாகனம் திடீரென திரும்பியதால், அதன் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை ஓட்டுநர் திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்துள்ளது.
-
May 19, 2025 17:24 IST
காஞ்சிபுரத்தில் வெளுத்து வாங்கும் கோடை மழை..!
காஞ்சிபுரத்தில் செவிலிமேடு, பெரியார் நகர், ஓரிக்கை, பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
-
May 19, 2025 16:27 IST
கனமழை எதிரொலி - ஆரஞ்சு அலர்ட்
இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
May 19, 2025 15:47 IST
பரளிக்காட்டுக்கு அதிகம் வரும் மக்கள்
பரிசல் பயணம், இயற்கை சூழல், குழந்தைகளுக்கு விளையாட்டு, கம கம மதிய உணவு என குடும்பத்தோட ஒருநாள் சுற்றுலாவுக்கு சிறந்த இடமாகவும் பழங்குடியின மக்களின் பொருளாதார வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இயங்கும் பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு மக்கள் வரவேற்பு அதிகரித்துள்ளது.
-
May 19, 2025 15:32 IST
நில அளவீடுக்கு எதிர்ப்பு - கடும் வாக்குவாதம்
பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்யும் பணி. நில அளவீடுக்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு கடும் வாக்குவாதத்தால் கச்சைகட்டி கிராமத்தில் பரபரப்பு
-
May 19, 2025 15:18 IST
குப்பையில் கிடந்த தங்கச் செயின்.. காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்
சேலத்தில் தூய்மை பணியின் போது குப்பையில் கண்டெடுத்த 12 சவரன் தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளரின் செயல் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
-
May 19, 2025 15:05 IST
வானிலை ஆய்வு மையத்தின் தற்போதைய அலெர்ட்
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
-
May 19, 2025 14:35 IST
ரோந்து காவலர்கள் மதுபானம் கடத்த உதவி
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் ரோந்து காவலர்களான முருகன் மற்றும் கார்த்திக் இருவரும் புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வருபவர்களுக்கு உதவி செய்த புகாரில், விசாரணை நடத்தி இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
-
May 19, 2025 14:31 IST
லாரிகளை குறிவைத்து டீசல் திருட்டு
தேசிய நெடுஞ்சாலையோரம் நிற்கும் லாரிகளை குறிவைத்து டீசல் திருட்டு. திருட்டில் ஈடுபட்டு தப்பிச் சென்ற வடமாநில இளைஞரை சுமார் 50 கி.மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்த லாரி உரிமையாளர் வாலாஜாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
May 19, 2025 12:53 IST
போதையை விரட்ட, விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும் - கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த்
அதிகரித்து வரும் போதைப் பழக்கத்திலிருந்து இளைஞர்கள் விடுபட, விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும். தங்கள் உடல் நலத்தையும் பாதுகாக்க வேண்டும் என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியுள்ளார்
-
May 19, 2025 12:03 IST
திருச்சி என்ஐடி விடுதியில் மாணவன் தற்கொலை
திருச்சி என்ஐடி விடுதியில் தங்கி பி.டெக் இறுதியாண்டு படிக்கும் ராஜஸ்தானை சேர்ந்த மாணவன் குல்திப் மீனா (21) தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
May 19, 2025 10:51 IST
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் புதுக்கோட்டை மாவட்டங்களில் நண்பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்யும்
- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
-
May 19, 2025 10:29 IST
ஈரோடு சிவகிரி கொலை வழக்கு- ஐஜி செந்தில்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு
ஈரோடு சிவகிரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களையும் நகையையும் பறிமுதல் செய்துள்ளோம். இறந்து போனவரின் செல்போனையும் கைப்பற்றியுள்ளோம். இந்த வழக்கில் முதல் குற்றவாளி ஐயப்பன் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் அடுத்த 2 பேரை விசாரித்தோம். மரக்கட்டையை கொண்டு இவர்கள் தாக்கி கொலை செய்துள்ளனர், கையுறையை பயன்படுத்தி உள்ளனர். குற்றம் நடந்த இடத்தில் இருந்த கால் பாத தடங்களை இவர்களின் பாதங்களுடன் ஒப்பீடு செய்துள்ளோம்.
கொள்ளையடித்த நகைகளை ஞானசேகரன் என்பவரிடம் கொடுத்து அதனை உருக்கி விற்பனை செய்ய முயன்றனர். உருக்கப்பட்ட 82 கிராம் நகையை ஆட்சியப்பன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்துள்ளோம். நகையை உருக்கி கொடுத்து ஞானசேகரன் என்பவரையும் கைது செய்துள்ளோம். பல்லடம் கொலை வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
மேலும் கூடுதல் தகவல்களுக்காக கைதானவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தப்படும்
- ஈரோடு சிவசிரி கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு
-
May 19, 2025 09:40 IST
ஈரோடு முதிய தம்பதி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஈரோடு சிவகிரி அருகே முதிய தம்பதி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அரச்சலூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்துள்ளனர். ஈரோடு தம்பதி கொலை வழக்கில் ஏற்கனவே நேற்று 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு இரட்டை கொலை வழக்கில் ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஷ் ஆகியோர் நேற்று கைது செய்தனர்.
-
May 19, 2025 09:15 IST
நாமக்கல் பகுதிகளில் விடியவிடிய கொட்டி தீர்த்த கனமழை
தமிழ்நாட்டின் கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மற்றும் ராதமிழ்நாட்டின் கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மற்றும் ராசிபுரத்தில் 12 செ.மீ மழை பெய்துள்ளது. மேட்டூரில் 10 செ.மீ, கெலவரப்பள்ளி அணையில் 9 செ.மீ, நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் 8 செ.மீ மழை பெய்துள்ளது.சிபுரத்தில் 12 செ.மீ மழை பெய்துள்ளது. மேட்டூரில் 10 செ.மீ, கெலவரப்பள்ளி அணையில் 9 செ.மீ, நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் 8 செ.மீ மழை பெய்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.