Coimbatore, Madurai, Trichy News Highlights: ரெட் அலர்ட் எச்சரிக்கை - கோவை, நீலகிரிக்கு விரைந்த 3 பேரிடர் மீட்புக் குழுக்கள்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
What is Red alert for Tamilnadu Tamil News
  • May 23, 2025 21:39 IST

    முத்திரையரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்

    பேரரசர் பெரும்பிடுகு முத்திரையரின் 1,350-வது சதய விழாவை முன்னிட்டு, திருச்சியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர். 



  • May 23, 2025 20:08 IST

    திருப்பூரில் போலி மருத்துவர் கைது

    திருப்பூரில் மருந்து கடைக்குள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே, இதே குற்றத்திற்காக இந்நபரை போலீசார் 2 முறை கைது செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



  • Advertisment
  • May 23, 2025 18:49 IST

    மினி வேனில் ஆபத்தான முறையில் பயணித்த மாணவிகள்

    சேலத்தில் மினி வேனில் இடம் இல்லாத காரணத்தினால் கதவில் அமர்ந்து மாணவிகள் பயணம் செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். 



  • May 23, 2025 18:20 IST

    ரெட் அலர்ட் எச்சரிக்கை - கோவை, நீலகிரிக்கு விரைந்த 3 பேரிடர் மீட்புக் குழுக்கள் 

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மற்றும் நீலகிரிக்கு 3 பேரிடர் மீட்புக் குழுக்கள் விரைந்தன. அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து உதகை, வால்பாறைக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்தது. கோவை, நீலகிரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை. தீயணைப்புத் துறை, மின்சாரம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தபட்டுள்ளது. கண்காணிப்பு அலுவலர்களான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • May 23, 2025 17:38 IST

    நீலகிரிக்கு ரெட் அலர்ட் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

    நீலகிரிக்கு மே 25, 26ல் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 400 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மழை பாதிப்புகளை கண்டறிய 42 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். மேலும் 80 பேர் கொண்ட மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளதாகவும், உதவி தேவைப்பட்டால் 1077 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



  • May 23, 2025 16:18 IST

    கோவை- ராட்சத குழாய் உடைந்து வெளியேறும் குடிநீர்

    கோவை: மேட்டுபாளையம்- திருப்பூர் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேற்றம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூருக்கான குழாயில் நடூர் என்ற இடத்தில் ராட்சத குழாயில் உடைப்பு ராட்சத குழாயில் இருந்து 50 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடிக்கும் நீரால் அப்பகுதி வெள்ளக்காடானது



  • May 23, 2025 15:04 IST

    மலைப்பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை

    கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழை நாளை (24.05.25) பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து ஆரஞ்சு எச்சரிக்கை கொடுத்துள்ளது. 



  • May 23, 2025 14:15 IST

    மழை நிலவரம்

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு இன்று(மே 23) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்  தெரிவித்துள்ளது. 



  • May 23, 2025 13:40 IST

    பேருந்து விபத்தில் ஓட்டுநர் பலி

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிச் சென்ற டேங்கர் லாரியின் மீது அரசுப் பேருந்து மோதியதில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



  • May 23, 2025 13:17 IST

    மாணவர்களுக்கு விஜய் பரிசு

    10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஜூன் மாதம் முதல் வாரத்தில் விஜய் பரிசு வழங்க உள்ளார்.



  • May 23, 2025 13:16 IST

    நெஞ்சுவலியால் இருக்கையிலேயே சரிந்த பேருந்து ஓட்டுநர் - சற்றும் தாமதிக்காமல் செயல்பட்டு விபத்தை தடுத்த நடத்துநர்

    பழனி அருகே தனியார் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மாரடைப்பால் சரிந்து விழ அடுத்த நொடியே சுதாரித்துக் கொண்டு கையால் பிரேக்கை அழுத்தி பேருந்தை நிறுத்தி விபத்தை நடத்துனர் தடுத்துள்ளார். 



  • May 23, 2025 11:54 IST

    எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் - கோவை காவல் ஆணையரிடம் புகார்

    அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. ஜூலை 30 ஆம் தேதி குண்டு வெடிப்பு நடத்தி கொலை செய்யப் போவதாகவும், ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியும் கோவை காளப்பட்டி பகுதியில் இருந்து கடிதம் வந்து உள்ளது. இது தொடர்பாக கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தாமோதரன் தலைமையில் மாவட்ட காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.



  • May 23, 2025 11:39 IST

    திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து விவசாயி மரணம்

    கிருஷ்ணகிரி மாவட்டம், பெரிய புளியம்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து விவசாயி மரணமடைந்தார். டிராக்டரில் கொண்டு செல்லப்பட்ட சாமி சிலை தீப்பிடித்த போது தீயை அணைக்க முற்பட்ட விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மின் வாரிய அதிகாரிகளின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்



  • May 23, 2025 11:22 IST

    சிவகங்கை குவாரி விபத்தில் 6 பேர் மரணம்; இருவர் கைது

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கல்குவாரி விபத்தில் 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் குவாரி உரிமையாளரின் தம்பி உள்ளிட்ட இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள குவாரி உரிமையாளர் மேகவர்ணனை போலீசார் தேடி வருகின்றனர் 



  • May 23, 2025 11:02 IST

    தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் இன்று (மே 23) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • May 23, 2025 10:36 IST

    சிம்ஸ் பூங்காவில் 65வது பழ கண்காட்சி தொடங்கியது

    Credit: Sun News



  • May 23, 2025 09:58 IST

    சாமித் தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் வைகாசி திருவிழா

    கன்னியாகுமரி மாவட்டம் சாமித் தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபாடு. திருவிழாவின் 11வது நாளான வரும் ஜூன் 2ம் தேதி தேரோட்டம் நடக்க உள்ளது



  • May 23, 2025 09:19 IST

    மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 9,347 கன அடி நீர்வரத்து

    மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 9,347 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 111.25 அடியாகவும், நீர் இருப்பு 80.197 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

    குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றம்



  • May 23, 2025 09:19 IST

    3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு



  • May 23, 2025 09:18 IST

    சீனிவாசன் பேத்தி உயிரிழப்பு

    மேட்டுப்பாளையம் கல்லார் அருகே நடந்த கார் விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி திவ்ய பிரியா உயிரிழப்பு



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: