சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு
புதுக்கோட்டையில் நேற்று அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உட்பட 503 அ.தி.மு.கவினர் மீது திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
Dec 31, 2024 22:09 IST
ராமநாதபுரத்தில் ஆண் நண்பருடன் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; போலீஸ் விசாரனை
ராமநாதபுரத்தில் ஆண் நண்பருடன் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. பெண்ணின் ஆண் நண்பரை தாக்கி விட்டு, 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த 4 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Dec 31, 2024 21:51 IST
புத்தாண்டு வாழ்த்து பேரில் வரும் லிங்க்களை கிளிக் செய்ய வேண்டாம் - கன்னியாகுமரி போலீஸ் எச்சரிக்கை
புத்தாண்டு வாழ்த்து எனும் பேரில் அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் apk file அல்லது லிங்க்களை கிளிக் செய்ய வேண்டாம் என்று கன்னியாகுமரி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
Dec 31, 2024 20:32 IST
பாளையங்கோட்டையில் தொழிலதிபர் வீட்டில் 2 கிலோ தங்க நாணயம் திருட்டு; போலீஸ் விசாரணை
நெல்லை பாளையங்கோட்டை மகாராஜா நகரை சேர்ந்தவர் ரஞ்சன். இவர் சிவகாசியில் ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்கி அதன் இயக்குனராக உள்ளார். ரஞ்சன் தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்க நாணயங்கள் திருடு போனதாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொழில் நிமித்தமாக வெளியூர் சென்ற நேரத்தில், பீரோவில் வைத்திருந்த 2.220 கிலோ எடையுள்ள தங்க நாணயங்கள் திருடு போய் உள்ளதாகவும், தனது வீட்டில் பணிபுரிந்த ஊழியர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். ரஞ்சன் புகாரின் பேரில் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர் வீட்டில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Dec 31, 2024 19:06 IST
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குடமுழுக்கு
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் ஜூலை 7ம் தேதி குடமுழுக்கு நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்துள்ளார்.
-
Dec 31, 2024 18:09 IST
சாயப்பட்டறை ஆலைகளின் மின்சார இணைப்பு துண்டிப்பு
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே 5 சாயப்பட்டறை ஆலைகளின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சாயக் கழிவுகளை ஆற்றில் கலக்கவிடுவதாக எழுந்த குற்றச்சாட்டில், நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பைப்புகளையும் அதிகாரிகள் அகற்றினர்.
-
Dec 31, 2024 17:16 IST
"உண்மையான எலும்புக்கூடு அல்ல"
நெய்வேலியில் கண்டெடுக்கப்பட்டது உண்மையான எலும்புக்கூடு அல்ல என்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. மருத்துவ பயிற்சி மேற்கொள்வதற்காக வாங்கப்பட்ட செயற்கையான எலும்புக் கூடு எனக் கூறப்படுகிறது.
-
Dec 31, 2024 16:33 IST
அடையாளம் தெரியாத எலும்புக்கூடுகள் மீட்பு
கடலூர், நெய்வேலியில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத எலும்புக்கூடுகள் மீட்க்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் ஆணா, பெண்ணா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
-
Dec 31, 2024 15:37 IST
ராமேஸ்வரம்: உடை மாற்றும் அறைக்கு சீல்
ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கரையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் உடை மாற்றும் அறைக்கும் அதனுடன் செயல்பட்ட டீ கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது
-
Dec 31, 2024 15:08 IST
3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Dec 31, 2024 14:53 IST
நகைக்கடை ஓனருக்கு கடையில் காத்திருந்த அதிர்ச்சி - பரபரப்பு சம்பவம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 50 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகை கொள்ளையடிக்கப்பட்டது. வேதாரண்யம் வட்டம் மணக்குடியில் கடைத்தெருவில் அமைந்துள்ள நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். கடையில் இருந்த 49 கிலோ வெள்ளி, ஆறு சவரன் தங்கம் உள்பட 50 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நகைக்கடை உரிமையாளர் உள்ளே சென்று பார்த்த போது, பொருட்கள் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தலைஞாயிறு போலீசார், கைரேகை நிபுணர்களை வரழைத்து தடயங்களை சேகரித்தனர். நகைக்கடைகொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
-
Dec 31, 2024 14:40 IST
அதிமுக ஆட்சியில் அரசாணை மட்டுமே போடப்பட்டது - அமைச்சர் எ.வ.வேலு
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு அதிமுக ஆட்சியில் அரசாணை மட்டுமே போடப்பட்டது; திட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு, படுத்து உறங்கிவிட்டு எங்களது திட்டம் எனக் கூறினால் அது சரியல்ல என்று அமைச்சர் எ.வ.வேலு கருத்து.
-
Dec 31, 2024 14:25 IST
அடுத்த போராட்டத்தை அறிவித்தார் அண்ணாமலை!
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜாக மகளிரணி ஜன 3 ஆம் தேதி பேரணி. மதுரையில் தொடங்கும் இப்பேரணி சென்னையில் நிறைவுபெறும். பேரணி நிறைவுபெறும் நாளில் ஆளுநரை சந்தித்து மனு வழங்கப்படும் என்று தமிழக பாஜாக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
-
Dec 31, 2024 14:22 IST
ஜல்லிக்கட்டில் புது டெக்னிக்...இம்முறை வீரர்கள் கதிகலங்குவார்கள்.
பொங்கல் திருநாளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக, சிறந்த டாப் டென் காளைகள் தேர்வு செய்யப்பட்டு, நவீன வசதிகளுடன் புதுவித பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும், அமைச்சர், ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார்.
ஜல்லிக்கட்டு மீது ஆர்வம் கொண்ட இவர், தமிழகத்தின் சிறந்த 10 காளைகளை தேர்வு செய்து, சிவகங்கை மாவட்டம் ஆளவிளாம்பட்டி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் தீவிர பயிற்சி அளித்து வருகிறார். ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் எந்த திசையில் இருந்து வருவார்கள் என்பதை அறிந்து கொள்ள, தமிழகத்திலேயே முதல் முறையாக மாடுபிடி வீரரை போன்ற பொம்மை ஒன்றை வைத்து, காளைகளுக்கு குத்து பயிற்சி வழங்கப்படுகிறது.
-
Dec 31, 2024 13:27 IST
கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (டிச.31) இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
-
Dec 31, 2024 13:08 IST
திருச்சி மரக்கடை பகுதியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் பால பணிகள், பாதாள சாக்கடை பணிகள் உள்ளிட்ட பணிகள் சுனக்கமாக நடைபெறுவதை கண்டித்து திருச்சி மரக்கடை பகுதியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பங்கேற்றுள்ளார்.
-
Dec 31, 2024 13:05 IST
நெல்லை - 2 கிலோ தங்க நாணயங்கள் மாயம் என்று புகார்.
நெல்லை பாளைமேட்டுத்திடலில் உள்ள தொழிலதிபர் வீட்டில் 2 கிலோ தங்க நாணயங்களைக் காணவில்லை என புகார். சிறிது சிரிச்சாங்க நாணயங்கள் காணாமல் போனதால் சந்தேகம் ஏற்பட்டு புகாரளித்த தொழிலதிபர். வீட்டில் பனி செய்த பெண் ஊழியர்களிடம் சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடந்து வருகிறது.
-
Dec 31, 2024 12:59 IST
டிசம்பர் மாத கடைசி வாரம் இனி திருக்குறள் வாரம் - ஸ்டாலின் அறிவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத கடைசி வாரம் திருக்குறள் வாரமாக கொண்டாடப்படும் என திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்
-
Dec 31, 2024 12:08 IST
தோரண வாயிலுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி திருவள்ளுவர் சிலை தோரண வாயிலுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
கடற்கரை சாலைக்கு திருவள்ளுவர் சாலை என பெயர் சூட்டல். ஏ.ஆர்.ரகுமான் இசையில், கமல்ஹாசன் வரிகளில் வள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு பாடல் இடம்பெற்றது.
-
Dec 31, 2024 11:29 IST
நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்
கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
-
Dec 31, 2024 11:21 IST
திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 3 புதிய படகுகள்- ஸ்டாலின்
கன்னியாகுமரி அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 3 புதிய படகுகள் வாங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Dec 31, 2024 10:55 IST
அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு
திருவாரூரில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியாக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உள்பட 1100 பேர் திருவாரூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
Dec 31, 2024 10:40 IST
ஒசூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை
ஓசூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானை ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் வனத்துறை விரட்டிய நிலையில் யானை மீண்டும் வராமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-
Dec 31, 2024 09:46 IST
கண்ணாடி பாலத்தை காண குவிந்த பொதுமக்கள்
குமரியில் கண்ணாடி இழை பாலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். நேற்று முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட கண்ணாடி இழை பாலம் மழை பெய்வதால் படகு சேவை நிறுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் குடை பிடித்தபடி பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள் மழை நின்ற பின், படகு போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 31, 2024 09:31 IST
தனியார் மருத்துவமனையில் தீ விபத்து
மதுரை புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.