கோயில்களில் சிறப்பு தரிசனம்:
புத்தாண்டை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களில் உள்ள கோயில்களில் இன்று சிறப்பு தரிசனம் மேற்கொள்ளப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:
சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.03 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.61 காசுக்கும் விற்பனையாகிறது.
-
Jan 01, 2025 11:45 ISTஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வலைதளம் முடங்கியது
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வலைதளம் முடங்கியதால் பக்தர்கள் அவதியடைந்தனர். ஏகாதசி திருவிழா தொடங்கிய நிலையில், இரண்டாவது நாளாக கோயில் வலைதளம் முடங்கியுள்ளது. இதனால், சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெற முடியாமல் பக்தர்கள் அவதியடைந்தனர்.
-
Jan 01, 2025 10:07 ISTகுற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு விடுமுறையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகை தந்துள்ளனர்.
-
Jan 01, 2025 09:11 ISTமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. விநாடிக்கு 2,875 கன அடியில் இருந்து, 1,791 கன அடியாக குறைந்தது. பாசன தேவைக்காக 1,000 கன அடி நீர் வெளியேற்றம்.
-
Jan 01, 2025 08:57 ISTதிருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.