Coimbatore, Madurai, Trichy News Updates: போராடும் பெண்களை ஆட்டு மந்தையுடன் அடைப்பதா?  - வானதி சீனிவாசன் கண்டனம்

கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்தின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்தின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vanathi s

கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் கேஸ் ஏற்றி வந்த லாரியில் இருந்து டேங்கர் மட்டும் கழன்று விழுந்து விபத்துக்குள்ளானதில், கேஸ் வெளியேறி வருவதால் இதனை தடுக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisment
  • Jan 03, 2025 19:05 IST

    'ஆட்டுக் குட்டிகள் இருந்த இடத்தில் அடைத்தனர்' - குஷ்பூ பேட்டி

    தடையை மீறி பேரணி செல்ல முயன்று கைதான குஷ்பு உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அப்போது காரில் இருந்தபடி குஷ்பு செய்தியாளர்களிடம் பேசுகையில்" ஆட்டுக் குட்டிகள் இருந்த இடத்தில் தான் அடைத்து வைத்தார்கள்... அங்கு நிறைய ஆடுகள் இருந்தன.. " என்று கூறினார். 

    பாஜகவினர் அடைத்து வைக்கப்பட்டிருந்த அதே திருமண மண்டபத்தில் ஆடுகளையும் அடைத்ததால் சர்ச்சை ஏற்பட்டது.



  • Jan 03, 2025 18:57 IST

    ‘குழந்தை இறப்புக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்’ - ராமதாஸ்

    பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், "தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு: தனியார் பள்ளிகளில் பாதுகாப்பு தணிக்கை செய்யாத அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்!

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள புனித மேரி தனியார் பள்ளியில் மூடி உடைந்ததால், திறந்த நிலையில் கிடந்த கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. குழந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவுநீர்த் தொட்டியின் இரும்பு மூடி, பல மாதங்களாகவே துருப்பிடித்து உடைந்த நிலையில் கிடப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககமும், பிற அரசு அமைப்புகளும் ஆய்வு செய்து உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அமைப்புகள் அவற்றின் கடமையை செய்யத் தவறியதன் விளைவாகவே மூன்றரை வயது குழந்தை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். 

    தங்களின் வளாகத்திலேயே அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சரியாக செய்யத் தவறிய தனியார் பள்ளிகள் தான், அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி வழங்கப் போவதாக கூறுகின்றன. அதையும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அகமகிழ்ந்து வரவேற்கிறார். அரசுப் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளிடம் இருந்து ஏதேனும் உதவி கிடைக்குமா என்று ஏங்குவதைவிடுத்து, தனியார் பள்ளிகளில் குழந்தைகளை பலி வாங்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படுவதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்யவேண்டும். 

    மூன்றரை வயது குழந்தையின் உயிரிழப்புக் காரணமான தனியார் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்று அவர் கூறியுள்ளார். 



  • Advertisment
    Advertisements
  • Jan 03, 2025 18:54 IST

    போராடும் பெண்களை ஆட்டு மந்தையுடன் அடைப்பதா?  - வானதி சீனிவாசன் கண்டனம் 

    "ஜனநாயக வழியில் போராடும் பெண்களை ஆட்டு மந்தையுடன் அடைப்பதா?. பாசிச ஹிட்லர் செய்ததாக வரலாற்றில் படித்ததை திமுக ஆட்சியில் நேரில் பார்க்கிறோம்." என்று குறிப்பிட்டு கோவை பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 



  • Jan 03, 2025 18:51 IST

    திருச்சியில் உணவு பாதுகாப்புத்துறை மீது  வழக்கு

    திருச்சியில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 



  • Jan 03, 2025 18:30 IST

    கைது செய்யப்பட்ட குஷ்பு விடுவிப்பு

    மதுரையில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்று கைது செய்யப்பட்ட குஷ்பு விடுவிக்கப்பட்டுள்ளார். 



  • Jan 03, 2025 18:24 IST

    சிவகங்கையில் ஸ்டாலின் சுற்றுப்பயணம் 

    ஜனவரி.21, 22இல் சிவகங்கையில் முதல்வர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 

    சிவகங்கையில் சுற்றுப்பயணம் செய்து நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். அழகப்பா பல்கலை. நூலகத்தை ஜனவரி.21-ல் முதல்வர் திறந்து வைக்கிறார். 40,000-க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார் என தெரிவித்தார்.



  • Jan 03, 2025 17:23 IST

    அ.தி.மு.க எம்.எல்.ஏ - தி.மு.க நிர்வாகி வாக்குவாதம்

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன், வெங்கடசமுத்திரம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளார் பாப்பிரெட்டிப்பட்டி அ.தி.மு.க எம்.எல்.ஏ. அவருடன் தி.மு.க நிர்வாகி வாக்குவாதம் செய்துள்ளார். 

     



  • Jan 03, 2025 17:22 IST

    அந்தரத்தில் மயங்கி விழுந்த மின் ஊழியர்

    உளுந்தூர்பேட்டை அருகே டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் ஒருவர்  மயங்கி விழுந்துள்ளார். அந்தரத்தில் தொங்கியவரை சக ஊழியர்கள் மீட்டுள்ளனர். 



  • Jan 03, 2025 17:17 IST

    கோவை கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்த விவகாரம் -  ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

    கோவையில் மேம்பாலத்தில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்த விவகாரம் தொடர்பாக, ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 



  • Jan 03, 2025 16:17 IST

    பள்ளியில் சிறுமி உயிரிழப்பு

    விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்தார். எல்.கே.ஜி மாணவி கழிவறைக்கு செல்லும் போது கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.



  • Jan 03, 2025 15:46 IST

    அ.தி.மு.க எம்.எல்.ஏ - தி.மு.க நிர்வாகி இடையே வாக்குவாதம்

    தர்மபுரியில் அ.தி.மு.க எம்.எல்.ஏ மற்றும் தி.மு.க நிர்வாகி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியுடன், வெங்கடசமுத்திரம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட பாப்பிரெட்டிப்பட்டி அ.தி.மு.க எம்.எல்.ஏ உடன் தி.மு.க நிர்வாகி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



  • Jan 03, 2025 14:24 IST

    ஆடுகள் இருக்கும் மண்டபத்தில் பா.ஜ.கவினர் அடைப்பு: வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

    தடையை மீறி போராட்டம் நடத்திய பா.ஜ.கவின் குஷ்பு உள்ளிட்ட பல பிரமுகர்கள், கைது செய்யப்பட்டு தனியார் மண்டபடத்தில் தங்ககைப்பட்டுள்ள நிலையில, இந்த மண்டபத்தில் ஆடுகள் அடைக்கப்பட்டுள்ளதால், தங்களை வேறு மண்டபத்திற்கு மாற்றக்கோரி பாஜகவினர் கோரிக்கை வத்து வருகின்றனர்.மேலும் கூடுதலாக ஆடுகள் அழைத்து வரப்பட்டதால் அங்கு வாக்குவாதம் அதிகரித்துள்ளது.



  • Jan 03, 2025 14:18 IST

    பத்திரமாக மீட்கப்பட்ட கேஸ் டேங்கர் குடோனுக்கு அனுப்பி வைப்பு

    கோவையில் விபத்துக்குள்ளான கேஸ் ஏற்றிய டேங்கர், பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், கேஸ் டேங்கர் லாரி பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. இந்த கேஸ் டேங்கர் கணபதி பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலியம் குடோனுக்கு எடுத்து செல்லப்பட்டது.



  • Jan 03, 2025 14:15 IST

    நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தல் உறைபனி ஏற்பட வாய்ப்பு

    நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் இரவு நேரத்தில் உறைபனி தாக்கம் இருக்கும் என்று அறிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகத்தின் கடலோர பகுதிகளில், இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமானவது வரை மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.



  • Jan 03, 2025 14:12 IST

    பட்டப்பகலில் நெடுஞ்சாலையை கடந்த 12 அடி நீள மலைப்பாம்பு

    உதகை அருகே பொக்காபுரம் பகுதியில், பட்டப்பகலில் 12 அடி நீள மலைப்பாம்பு நெடுஞ்சாலையை கடந்துள்ளது. வாகனங்கள் அதிகமாக இருந்ததால் சாலை ஓரத்தில் படுத்துள்ளது. இதைக் கண்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். 



  • Jan 03, 2025 13:35 IST

    தஞ்சையில் அரசு நிகழ்ச்சி: உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்!

    தஞ்சையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நிகழ்ச்சியில் தனது உதவியாளரை எருமை மாடா நீ...! பேப்பர் எங்கே? எனக்கேட்டு கடிந்து கொண்டதால், பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.



  • Jan 03, 2025 12:52 IST

    கோவை விபத்து; கியாஸ் டேங்கர் விரைவில் அகற்றப்படும்

    கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் இன்று அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளான கியாஸ் டேங்கர், நிமிர்த்தி வைக்கப்பட்டது. லாரியுடன் இணைக்கும் பணி முடிந்ததும், அங்கிருந்து கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது



  • Jan 03, 2025 12:40 IST

    தனியார் பார் திறப்பு - பா.ஜ.க.வினர் முற்றுகை

    மதுரை பேரணிக்காக பழனியில் இருந்து புறப்பட்ட பாஜகவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்த நிலையில், பா.ஜ.க.வினர் அடைக்கப்பட்ட தனியார் மண்டபத்திற்கு அருகிலேயே தனியார் மதுபான பார் திறக்கப்பட்டதை சுட்டிக்காட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்



  • Jan 03, 2025 12:04 IST

    தடையை மீறி ஆர்ப்பாட்டம் - குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க.,வினர் கைது

    அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தடையை மீறி பா.ஜ.க மகளிரணி ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க.,வினரை காவல்துறை கைது செய்தது. பேரணிக்கு அனுமதி தருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை, பேரணிக்கு அனுமதி தர மாட்டார்கள் என்பது தெரியும் என குஷ்பு தெரிவித்துள்ளார்



  • Jan 03, 2025 11:38 IST

    கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரி 8மணி நேரம் போராடி நேராக நிறுத்தி வைப்பு

    கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரியை 8மணி நேரம் போராடி நேராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மூன்று கிரேன் மூலம் கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரியை மீட்பு துறையினர் மூலம் நேராக நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு வாகனம் மூலம் அந்த டேங்கரை, லாரியில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.



  • Jan 03, 2025 11:13 IST

    அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி பா.ஜ.க மகளிர் அணி பேரணி முயற்சி

    அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டு பா.ஜ.க மகளிர் அணியினர் தீச்சட்டி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி பேரணியாக செல்ல முயற்சிக்கின்றனர். மிளகாய் வற்றலை இடித்து கண்ணகி சிலைக்கு பூசிய பா.ஜ.க மகளிரணியினர், கையில் சிலம்புடன் கண்ணகி வேடமிட்ட பெண் உடன் நீதி வேண்டும் என முழக்கமிட்டு வருகின்றனர்



  • Jan 03, 2025 11:02 IST

    கேஸ் டேங்கர் லாரி விபத்து- 10 பள்ளிகளுக்கு விடுமுறை

    கேஸ் டேங்கர் லாரி விபத்து ஏற்பட்டதையடுத்து அருகில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்களை  பெற்றோர்  அழைத்துச் சென்றனர்.

    கேஸ் டேங்கரை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள 10 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது,



  • Jan 03, 2025 10:11 IST

    விபத்து நடந்தது எப்படி என விசாரணைக்கு பின் தெரியவரும் - ஆட்சியர் கிராந்திகுமார்

    இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே வாயுவை கட்டுப்படுத்தும் என தகவல். மெட்டல் ஷீல்ட் மூலம் தற்காலிகமாக வாயு அடைக்கப்பட்டுள்ளது.

    கேஸ் டேங்கர் கவிழ்ந்த இடத்தில் காவல் உயரதிகாரிகள் நேரில் ஆய்வு, தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கேஸ் டேங்கர் விபத்து - மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் செய்தியாளர் சந்தித்தார். அப்போது, 

    அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. துறை சார்ந்த அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்துள்ளனர். விபத்து நிகழ்ந்தது எப்படி? - விசாரணைக்கு பின் தெரியவரும் என்றார். 



  • Jan 03, 2025 09:49 IST

    காஷ்மீராக மாறிய ஊட்டி: பனிக்கட்டிகளுடன் விளையாடும் சுற்றுலாப் பயணிகள்!

    உதகையில் அவலாஞ்சி, தலைகுந்தா, காந்தள் பகுதிகளில் இன்று காலை முதல் கடும் உறை பனி உருவாகியுள்ளது. இங்கு குறைந்தபட்ச வெப்பநிலையாக 0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ள நிலையில், வாகனங்கள், புல்வெளிகளில் படர்ந்துள்ள பனிகளை சுற்றுலாப் பயணிகள் கையில் எடுத்து விளையாடி வருகின்றனர்.



  • Jan 03, 2025 09:48 IST

    நெல்லையில் இருந்து கேரளாவுக்கு புதிய பேருந்து சேவை தொடக்கம்

    கேரள மாநிலம்,ஆரியங்காவு ஊராட்சியில்,தமிழ்நாடு அரசு திருநெல்வேலி கோட்ட போக்குவரத்து கழகத்தின் சார்பில்,ஆரியகாவிலிருந்து, புளியறை,செங்கோட்டை,தென்காசி,ஆலங்குளம் வழியாக திருநெல்வேலி வரை செல்லும் புதிய வழித்தட பேருந்தினை மாண்புமிகு கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கே.பி.கணேஷ் பாபுவுடன், தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார், புனலூர் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.சுபால், கேரள மாநில போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பிரேம்மோத் சங்கர், தமிழ்நாடு அரசு திருநெல்வேலி கோட்ட போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தசரதன்,அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Coimbatore Tiruchirappalli Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: