Coimbatore, Madurai, Trichy LIVE News: பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bavani Sagar Erode DT

Today Latest Live News Update in Tamil 6 July 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Aug 18, 2025 21:45 IST

    மதுரை மாநகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது

    மதுரை மாநகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். ஊதிய ஊயர்வு குறித்து மாநகராட்சி உடன் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வளாகத்தில் அவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.



  • Aug 18, 2025 21:33 IST

    மதுரை மாநகராட்சி வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்;  வெளியேற்றிய போலீஸ்

    மதுரை மாநகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர். பேச்சவார்த்தை தோல்வியுற்ற நிலையில், போராடிய தொழிலாளர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு வருகின்றனர்.



  • Advertisment
  • Aug 18, 2025 20:43 IST

    மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம்; நா.த.க ஆதரவு

    மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.



  • Aug 18, 2025 19:30 IST

    பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று 18.08.2025 மாலை 5.00 மணியளவில் 101.71 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் விரைவில் 102 அடியை எட்டும். எனவே அணையிலிருந்து உபரி நீர் பவானி ஆற்றில் 5000 கனஅடி முதல் 10000 கன அடி வரை திறந்துவிடப்படலாம் என்றும், திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    எனவே பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Aug 18, 2025 18:38 IST

    மன மகிழ் மன்றங்களில் மது விற்பனை- ஐகோர்ட் உத்தரவு

    மன மகிழ் மன்றங்களில் உள்ள உரிமம் பெற்ற மதுக்கூடங்களில் உறுப்பினர்களுக்கு மட்டுமே மது விற்பனை நடப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி வெளிநபர்களுக்கு மது விற்கும் மன்றங்கள் மீது காவல்துறை மற்றும் பதிவுத்துறை இணைந்து நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளது.



  • Aug 18, 2025 18:35 IST

    பட்டப்பகலில் பெண் படுகொலை - ஈரோட்டில் பயங்கரம்

    ஈரோடு, பவானி அருகே பட்டப்பகலில் பெண் அரிவாள்மனையால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகராஜ் என்பவரது மனைவி விஜயா(38) வீட்டில் இருந்த நிலையில் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சமையலறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு போலீசார் விசாரணை, விஜயா கழுத்தில் இருந்த தங்க நகை மாயமாகி இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 18, 2025 18:33 IST

    நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை கிடுகிடு உயர்வு

    நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.495-லிருந்து ரூ.5 ஆக விலை நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் 5 காசுகள் உயர்ந்துள்ளது.



  • Aug 18, 2025 18:26 IST

    தங்கச்சி மடத்தில் நாளை மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்

    ராமேஸ்வரம் மீனவர்கள் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து தங்கச்சி மடத்தில் நாளை ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். இலங்கையில் உள்ள மீனவர்களையும்,படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக வேலைநிறுத்தம் நடைபெற்றுவருகிறது.



  • Aug 18, 2025 18:10 IST

    மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 50,000 கனஅடி நீர் திறப்பு

    மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 35,000ல் இருந்து 50,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால், 16 கண் மதகுகள் மீண்டும் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 



  • Aug 18, 2025 17:23 IST

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 20-ந்தேதி உள்ளூர் விடுமுறை

    ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த நாளை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 20ம் தேதி அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டார் ஆகிய 3 வட்டங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய அடுத்த மாதம் 13ம் தேதி வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 18, 2025 17:22 IST

    மேட்டூர்: 16 கண் மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றம்

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால், 16 கண் மதகுகள் மீண்டும் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவி 35,000 கன அடியில் இருந்து 50,000 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது.



  • Aug 18, 2025 17:00 IST

    ”மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது”

    மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கார் விபத்து விவகாரத்தை மத ரீதியாக சித்தரித்த விவகாரத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதீனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆதீனத்தின் மனுவுக்கு செப்டம்பர் 15ம் தேதி காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.



  • Aug 18, 2025 16:46 IST

    மேட்டூரில் இருந்து விநாடிக்கு 50,000 கனஅடி நீர் திறக்க வாய்ப்பு

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு இன்று மாலை 6 மணி அளவில் விநாடிக்கு 50,000 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உள்ளதால், காவிரி கரையோரப் பகுதிகளுக்கு தமிழக நீர்வளத் துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • Aug 18, 2025 16:39 IST

    கல்லீரல் விற்பனை குறித்து விசாரணை நடத்த குழு அமைப்பு

    பள்ளிபாளையத்தில் கல்லீரல் விற்பனை குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறுநீரக முறைகேடு விவகாரத்தை விசாரித்த குழுவே கல்லீரல் விற்பனை புகாரையும் விசாரிக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கல்லீரல் கொடுத்த பெண் தற்போது உடல் பலவீனமாகி எந்த வேலையும் செய்ய முடியாமல் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் வினித் ஐஏஎஸ் தலைமையிலான குழு கல்லீரல் திருட்டு பற்றி விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 18, 2025 16:32 IST

    12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 18, 2025 16:20 IST

    கோவை: ரூ.37 லட்ச மதிப்புள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள் கடத்தல்

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து எலெக்ட்ரானிக் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சோதனையின்போது 5 பயணிகள் எலெக்ட்ரானிக் பொருட்களை கடத்தி வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பயணிகளிடமிருந்து 37 லட்ச ரூபாய் மதிப்புள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த சிகிரெட்டுகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், 5 பயணிகளையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Aug 18, 2025 16:19 IST

    தூத்துக்குடி: ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் நகை, பணம் திருட்டு

    தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6-வது தெருவில் வசிப்பவர் கணேசன் (70), ஓய்வு பெற்ற தாசில்தார். கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு ஓசூரில் உள்ள மகன் வீட்டிற்கு சென்று விட்டனர். இதைபார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் கணேசனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வடபாகம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து நகை பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. கணேசன், வீட்டில் பீரோவில் 4 பவுன் நகையும் ரூ.2 லட்சம் பணமும் இருந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     



  • Aug 18, 2025 15:48 IST

    தூத்துக்குடியில் மேலும் ஒரு தொழிற்பூங்கா அமைக்க முடிவு

    தூத்துக்குடியில் மேலும் ஒரு தொழில் பூங்கா அமைக்க சிப்காட் சுற்றுச்சூழல் அனுமதி கோரியது. ரூ.667 கோடியில் அமைய உள்ள தொழில்பூங்கா மூலம் 17,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடும். ராமசாமிபுரம், கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டப்பாறை, உமரிக்கோட்டை, பேரூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி கிராமங்களில் அமைய உள்ளது. 1,967 ஏக்கரில் அமையவுள்ள தொழில் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.



  • Aug 18, 2025 15:10 IST

    ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களுக்கு 24ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

    கடந்த ஜூலை 27ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள், இன்று இலங்கையின் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 24ம் தேதி வரை அவர்களுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது



  • Aug 18, 2025 14:30 IST

    ஒகேனக்கல் அருவி, ஆற்றின் கரையோரம் குளிக்கத் தடை

    கர்நாடக அணைகளில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 20,000 கன அடி நீர் வரும் நிலையில், அருவி மற்றும் ஆற்றின் கரையோரம் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது



  • Aug 18, 2025 13:35 IST

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.



  • Aug 18, 2025 12:59 IST

    சங்கரன்கோவில் நகராட்சியை மீண்டும் கைப்பற்றியது திமுக

    சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் பதவியை மீண்டும் திமுக கைப்பற்றியது. நகர்மன்ற தலைவர் பதவிக்கு கவுசல்யா வெங்கடேஷ் 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கவுசல்யா வெங்கடேஷை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அண்ணாமலை புஷ்பம் 6 வாக்கு மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். பூட்டப்பட்ட நகராட்சி மன்ற அரங்கில் நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கவுசல்யா வெற்றி பெற்றார்.



  • Aug 18, 2025 12:42 IST

    காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

    கே.ஆர்.எஸ். அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 80,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது 14,000 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடியை தாண்டும்.



  • Aug 18, 2025 11:32 IST

    சேலத்தில் 8 பேரை விரட்டி விரட்டி கடித்த நாய்கள் - சுற்றுலாப் பயணிகள் அச்சம் 

    மேட்டூர் அணை பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உள்பட 8 பேரை நாய்கள் கடித்துள்ளது. விரட்டி விரட்டி நாய்கள் கடித்ததால் சுற்றுலாப் பயணிகள் அச்சம். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி. நாய்களை அப்புறப்படுத்த சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

     



  • Aug 18, 2025 11:24 IST

    மதுரை த.வெ.க மாநாடு - தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

    "மனசாட்சி உள்ள மக்களாட்சி என்ற உன்னதமான அரசியல் இலக்கை நோக்கி பயணிக்கிறோம். உங்கள் விஜய் உரிமையுடன் அழைக்கிறேன், தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம். மதுரை மாநாட்டிற்கு வரும்போதும், செல்லும்போதும் தொண்டர்கள் ராணுவ கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும். த.வெ.க தகுதியும் பொறுப்பும் மிக்க ஒரு அரசியல் கட்சி என்பதை நாம் ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டும் 

    கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள், மாற்று திறனாளிகள். மாநாட்டுக்கு வர வேண்டாம். 1967, 1977 தேர்தலில் ஏற்பட்ட வெற்றி விளைவுகளை 2026 சட்டமன்ற தேர்தலிலும் காணப்போகிறோம்" என்று  த.வெ.க தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். 



  • Aug 18, 2025 10:19 IST

    த.வெ.க மதுரை மாநாடு - விஜய் அறிக்கை அறிவுறுத்தல் 

    "கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் த.வெ.க மதுரை மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று த.வெ.க தலைவர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 



  • Aug 18, 2025 10:16 IST

    கூடலூரில் தொடர் கனமழை - மாயாற்றில் வெள்ளப் பெருக்கு 

    கூடலூரில் தொடர் கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள தரைப்பாலம் மூழ்கியது. 



Madurai Coimbatore Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: