Coimbatore, Madurai, Trichy News LIVE: "தி.மு.க கூட்டணிக் கட்சிகளே உஷார்... இல்லையெனில் ஸ்டாலின் உங்களை விழுங்கி விடுவார் - இ.பி.எஸ் எச்சரிக்கை

Coimbatore, Madurai, Trichy News Updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
union govt

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Sep 02, 2025 20:45 IST

    "தி.மு.க கூட்டணிக் கட்சிகளே உஷார்... இல்லையெனில் ஸ்டாலின் உங்களை விழுங்கி விடுவார் - இ.பி.எஸ் எச்சரிக்கை

    மதுரையில் பேசியிஅ அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க கூட்டணிக் கட்சிகளே உஷாராக இருங்க.. இல்லையெனில் ஸ்டாலின் உங்களை விழுங்கி விடுவார்” எச்சரித்துள்ளார்.



  • Sep 02, 2025 19:14 IST

    அ.தி.மு.க ஆட்சி அமைத்த பின் 4,000 அம்மா மினி கிளினிக் அமைக்கப்படும் - இ.பி.எஸ்

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க ரத்து செய்த அம்மா மினி கிளினிக் திட்டம், அ.தி.மு.க ஆட்சி அமைத்த பின் 4,000 அம்மா மினி கிளினிக்குகளுடன் செயல்படும். ஏழைகள் சிறப்பாக வாழ வேண்டும். வாழ்க்கைத் தரம் உயர வேண்டும், அதுதான் எங்கள் லட்சியம்” என்று பேசினார்.



  • Advertisment
  • Sep 02, 2025 18:47 IST

    வடமாநில நபர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு

    சென்னை - ஆவடி பகுதியில் தங்கி தனியார், அரசு நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநில நபர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. வடசென்னை, வல்லூர் அனல் மின் நிலையம் உட்பட காட்டுப்பள்ளி துறைமுகம் பகுதிகளில் பணியாற்றி வரும் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. திருவள்ளூர் - காட்டுப்பள்ளியில் போலீசார் மீது வடமாநில நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • Sep 02, 2025 18:05 IST

    திருச்செந்தூர் கோயிலில் 4-ந்தேதி முதல் மீண்டும் தங்கத்தேர் உலா

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் 4-ந்தேதி (நாளை மறுநாள்) முதல் மீண்டும் தங்கத்தேர் வீதி உலா வர உள்ளது. கோயிலில் பெருந்திட்ட வளாக பணிகளின் ஒரு பகுதியாக தரைத்தள பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக கடந்த 17-7-2024 முதல் தற்காலிகமாக தங்கத்தேர் உலா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, கிரிப்பிரகார தரைத்தள பணிகள் நிறைவு பெற்றுள்ளதையடுத்து, 4-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் மீண்டும் தங்கத்தேர் உலா நடைபெற உள்ளது.

     



  • Advertisment
    Advertisements
  • Sep 02, 2025 17:43 IST

    காவல்துறை மீது கல்வீச்சு - வடமாநிலத்தவர்கள் 50 பேர் கைது

    திருவள்ளூர் - காட்டுப்பள்ளியில் போலீசார் மீது வடமாநில தொழிலாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது சொத்துகளை சேதப்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



  • Sep 02, 2025 17:14 IST

    திருவாரூர் மத்தியப் பல்கலை.,யில் இறுதி கட்ட ஏற்பாடுகள் தீவிரம்

    திருவாரூர் மத்தியப் பல்கலை.,யில் நாளை நடக்க உள்ள பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தலைமையேற்க உள்ள நிலையில் இறுதி கட்ட ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



  • Sep 02, 2025 16:45 IST

    குலசேகரப்பட்டினம் தசரா விழா - சாதிய அடையாளங்களுக்கு தடை

    குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா வரும் 23-ஆம் தேதி தொடங்கும் நிலையில் திருவிழாவுக்கு இரும்பு ஆயுதங்கள் கொண்டு வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாதியை வெளிப்படுத்தும் கொடிகள், ரிப்பன்கள், உடை அணிந்து வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தசரா திருவிழாவிற்கான முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து முடிவு செய்யப்பட்டது



  • Sep 02, 2025 16:26 IST

    தொழிற்துறையினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – இ.பி.எஸ்

    அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், தொழிற்துறையினரின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். மதுரையில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என மதுரை கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் 



  • Sep 02, 2025 15:41 IST

    வடமாநில தொழிலாளி பலி: ரூ.5 லட்சம் நிவாரணம்

    திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர் அமரேஷ் பிரசாத் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாகவும், உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவை ஏற்றுக்கொள்வதாகவும் ஒப்பந்த நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, இழப்பீடு கோரி நடந்த போராட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



  • Sep 02, 2025 14:41 IST

    கஞ்சா செடி வளர்த்தவர் கைது

    உதகை அருகே கடநாடு பகுதியில் தனது வீட்டைச் சுற்றி கஞ்சா செடி வளர்த்த கண்ணன் (64) என்பவரை கைது செய்து போலீசார் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் சோதனையில் கஞ்சா தூள் மற்றும் 2 கிலோ உலர்ந்த மான் இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.



  • Sep 02, 2025 14:39 IST

    திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேச்சு

    மோடியும், அமித்ஷாவும் இந்தியாவை விற்கிறார்கள். அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள். இதன் நீட்சிதான் அமெரிக்கா விதித்த 50% வரி


    திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேச்சு



  • Sep 02, 2025 13:36 IST

    முக்கியமான 10 பேருடன் செங்கோட்டையன் ஆலோசனை

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனக்கு முக்கியமான 10 பேருடன் ஆலோசனை நடத்துகிறார் செங்கோட்டையன். 



  • Sep 02, 2025 13:08 IST

    அம்பானிக்காகவே ரஷ்யாவுடன் மோடி வர்த்தக உறவு: திருமாவளவன் குற்றச்சாட்டு

    அம்பானிக்காகத்தான் பிரதமர் மோடி, ரஷ்யாவுடன் உறவை தொடர்வதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார். கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் அம்பானி நிறுவனம் வாங்க அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு அம்பானி கச்சா எண்ணெய் வாங்கினார். கச்சா எண்ணெயை சுத்திகரித்து அதனை ஐரோப்பிய நாடுகளுக்கு அம்பானி விற்கிறார். இதனால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று டிரம்ப் வலியுறுத்தி கேட்காததால் இந்தியாவுக்கு 50% வரி விதிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.



  • Sep 02, 2025 12:53 IST

    காவல்துறை மரணம்: ஒன்றிய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை

    காவல்துறையின் காவலில் இருக்கும்போது நடக்கும் மரணங்கள் தொடர்பாக விசாரிக்க மாவட்ட அளவில் குழு அமைக்க கோரி திருச்சியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் உள்துறை செயலர் தரப்பில் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்ட நிலையில், வழக்கை செப்.22க்கு ஒத்திவைத்தது.



  • Sep 02, 2025 12:43 IST

    அரசை கண்டித்து திமுக கூட்டணி கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

    அமெரிக்க வரி விதிப்பு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம். திருப்பூர் ரயில் நிலையம் அருகே திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்



  • Sep 02, 2025 12:29 IST

    திருச்சி ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.



  • Sep 02, 2025 12:12 IST

    மன்னார்குடியில் குடும்ப பிரச்சனையால் 8 வயது சிறுவனுக்கு 16 இடத்தில் சூடு வைத்துள்ளார் தந்தை!!

    மன்னார்குடியில் குடும்ப பிரச்சனையால் 8 வயது சிறுவனுக்கு 16 இடத்தில் சூடு வைத்துள்ளார் தந்தை. மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மகனை 16 இடத்தில் சூடு வைத்ததாக தந்தை ராஜ் கண்ணன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.



  • Sep 02, 2025 11:29 IST

    அமெரிக்க வரி விதிப்பு: பா.ஜ.க-வை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம் 

    அமெரிக்க வரி விதிப்புக்கு நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளாத பா.ஜ.க அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக திமுக எம்.பி. ஆ.ராசா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுப்பராயன், சு.வெங்கடேசன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



  • Sep 02, 2025 10:31 IST

    முதுமலை சாலையில் மக்னா யானை உயிரிழப்பு

    நீலகிரி மாவட்டம் மசினகுடி - முதுமலை சாலையில் யானை உயிரிழந்ததால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஜேசிபி உதவியுடன் யானையின் உடல் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது



  • Sep 02, 2025 09:42 IST

    4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் காலை 10 மணி வரை நீலகிரி, கோவை, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • Sep 02, 2025 09:37 IST

    ஒசூரில் தனியார் நிறுவனத்தில் கிரேனில் இருந்து பிளேட் அறுந்து விழுந்து 2 பேர் பலி

    ஒசூர் அருகே தனியார் நிறுவனத்தில் கிரேனில் இருந்து பிளேட் அறுந்து விழுந்து 2 பேர் பலியாக்கினர். பௌகொண்டபள்ளியில் கிரேனில் இருந்து பிளேட் அறுந்து விழுந்ததில் சிவகங்கையைச் சேர்ந்த காளிமுத்து(37), பீகாரைச் சேர்ந்த பிரமோத்குமார் (27) ஆகியோர் உயிரிழந்தனர்.



  • Sep 02, 2025 09:36 IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நடப்பாண்டில் மேட்டூர் அணை 6வது முறையாக முழுகொள்ளளவை எட்டியது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 31,854 கன அடியில் இருந்து 36,985 கன அடியாக அதிகரித்துள்ளது.

    மேட்டூர் அணையில் நீர்மட்டம் 120 அடியை எட்டியது. நீர் இருப்பு 92.645 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக 23,300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. டெல்டா பாசனத்துக்கு 22,500 கனஅடி, மேற்கு கிழக்கு கால்வாய் வழியாக 800 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணை நடப்பாண்டில் 6-வது முறையாக 120 அடியை எட்டியதால், வருவாய் துறை சார்பாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குளிப்பது, துணி துவைப்பது, செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



Trichy Coimbatore Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: