Coimbatore, Madurai, Trichy LIVE News: உளுந்தூர்பேட்டை அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

Coimbatore, Madurai, Trichy News Updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ullundurpet

உளுந்தூர்பேட்டை அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.03-க்கும், டீசல் 92.61 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Sep 04, 2025 17:10 IST

    4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், தென்காசி, தேனி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.



  • Sep 04, 2025 17:07 IST

    போலீஸ் வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்து 3 பேர் காயம்

    உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலம் பிரிவு சாலை பகுதியில் காவல்துறை வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஆய்வாளர் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.



  • Advertisment
  • Sep 04, 2025 16:49 IST

    கோவை குற்றாலம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும்

    கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா நாளை (செப்டம்பர் 05) முதல் மீண்டும் திறக்கப்படும் என மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது 



  • Sep 04, 2025 15:59 IST

    மீனாட்சி அம்மன் கோயில் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்க: உயர் நீதிமன்றம்

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் உபகோயில்களின் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சொத்துக்கள் எங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று சொன்னால்தான் அதிகாரிகளுக்குத் தெரியுமா? அறநிலையத்துறையே கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாமே என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.



  • Advertisment
    Advertisements
  • Sep 04, 2025 15:28 IST

    இருசக்கர வாகனத் திருட்டுகள் அதிகரிப்பு

    சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பூ வியாபாரி ஒருவரின் புதிய புல்லட் பைக், நள்ளிரவில் வீட்டின் முன்பு திருடப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளும் வெளியான நிலையில், தீவட்டிப்பட்டி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Sep 04, 2025 14:28 IST

    வீட்டின் மாடியில் ஏறிய காட்டெருமை

    கொடைக்கானல் பகுதியில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், கான்வென்ட் ரோடு பகுதியில் வீட்டின் மாடியில் ஏறியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

    kar



  • Sep 04, 2025 13:56 IST

    செப். 8, 9 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

    தமிழகத்தில் வரும் 8, 9 ஆகிய தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் இன்று ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • Sep 04, 2025 13:37 IST

    சென்னையில், ரூ15, கோவையில் ரூ20; தேநீர் விலை அதிரடி உயர்வு

    சென்னையில் கடந்த வாரம் தேநீரின் விலை ரூ.15 ஆக உயர்த்தப்பட்ட நிலையில் கோவையிலும் முக்கியமான பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகளில் விலை உயர்த்தி உள்ளனர். டீ - ரூ.20 , காபி - ரூ.26 , பிளாக் டீ - ரூ.17 என விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது



  • Sep 04, 2025 12:37 IST

    உசிலம்பட்டி அருகே தனியார் பள்ளி வேன் மீது பேருந்து மோதி காவலாளி மரணம்

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தனியார் பள்ளியின் முன்பே, பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளியின் காவலாளி மரணமடைந்த நிலையில்,10க்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Sep 04, 2025 11:59 IST

    திடீரென புகைந்த பைக் - ரோட்டில் வைத்து தேங்காய் உடைத்த நபரால் பரபரப்பு 

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சி பகுதியில், சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரெனத் தீப்பற்றிப் புகைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர் ஒருவர், ஆத்திரத்தில் தனது வாகனத்திற்குப் பூமாலை அணிவித்து, தேங்காய் உடைத்து சாமி கும்பிட்ட காட்சி அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. வாகனப் பழுதால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடாகக் கருதப்படும் இந்தச் சம்பவம், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.



  • Sep 04, 2025 10:40 IST

    சிதம்பரம் நகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 4 பேர் கைது

    சிதம்பரம் நகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டு ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரைச் சேர்ந்த நசீர் (56), சரவணன் (45), கிருபாகரன் (35), முருகன் (54) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • Sep 04, 2025 10:32 IST

    அனைத்து கேள்விகளுக்கும் நாளை பதில் அளிக்கிறேன் - கோபியில் செங்கோட்டையன் பேட்டி 

    முன்னாள் அமைச்சர்கள் யாராவது தொடர்பு கொண்டு பேசினார்களா? என்ற கேள்விக்கு, அனைத்து கேள்விகளுக்கும் நாளை பதில் அளிக்கிறேன் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

    கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், தொண்டர்கள் ஒன்றிணைய வாய்ப்பில்லை என டி.டி.வி தினகரன் கூறியது குறித்த கருத்து? என்கிற கேள்விக்கு, டி.டி.வி தினகரன் கூறிய கருத்துக்கு நான் பதில் கூற முடியாது, அவர் மனதில் எதை நினைத்து பேசினார் என்பது எனக்குத் தெரியாது என்று அவர் கூறியுள்ளார். 



  • Sep 04, 2025 09:54 IST

    முதியவரை எஸ்.ஐ தள்ளி விட்ட விவகாரம் - காவல்துறை விளக்கம்

    ராணிப்பேட்டை, சாத்தூரில் நடந்த `உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் வெங்கடாபதி என்ற முதியவரை எஸ்.ஐ பிரபாகரன் தள்ளிவிட்ட விவகாரத்தில் "அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, VAO-வை தாக்கினார், நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவரை கட்டுப்படுத்தவே குறைந்த அளவு பலத்தைக் கொண்டு வெங்கடாபதியை SI அமைதிப்படுத்தினார்"  என ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.



  • Sep 04, 2025 09:30 IST

    ஓணம் பண்டிகை - விமான கட்டணம் அதிகரிப்பு

    சென்னை - திருவனந்தபுரம் விமான கட்டணம் ரூ.4,359ல் இருந்து ரூ.19,903ஆக அதிகரித்துள்ளது. சென்னை - கொச்சி இடையே விமான கட்டணம் ரூ.3,713ல் இருந்து ரூ.11,798ஆக அதிகரித்துள்ளது. சென்னை - கோழிக்கோடு இடையே விமான கட்டணம் ரூ.3,629ல் இருந்து ரூ.10,286ஆக உயர்ந்துள்ளது.



  • Sep 04, 2025 08:28 IST

    விழுப்புரம் அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து - 10 பேர் படுகாயம்

    விழுப்புரம் அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துகுள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விதை பண்ணை என்ற இடத்தில் வாகனங்கள் மோதி விபத்துகுள்ளானது. கார் மற்றும் வேனில் பயணம் செய்த 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Sep 04, 2025 08:28 IST

    தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அ.ம.மு.க வெளியேறுகிறது - டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

    தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அ.ம.மு.க வெளியேறுவதாக டி.டி.வி தினகரன் அறிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து டி.டி.வி தினகரனும், என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறினார். துரோகம் தலைவிரித்தாடுவதாகவும் காட்டுமன்னார்கோவிலில் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 2026 தேர்தல் கூட்டணி தொடர்பான அமமுகவின் நிலைப்பாடு டிசம்பரில் அறிவிக்கப்படும் என டி.டி.வி தினகரன் கூறியிருந்தார். அமமுக தொண்டர்கள் விரும்பும் வகையில் எங்களின் கூட்டணி அமையும் என்றும் டிடிவி தினகரன் கூறியிருந்தார்



Coimbatore Trichy Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: