/indian-express-tamil/media/media_files/2025/09/03/admk-sathyabama-2025-09-03-11-41-39.jpg)
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.41 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Sep 03, 2025 12:25 IST
எடப்பாடி பரப்புரை கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பணியாளர் தாக்கப்பட்டதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
எடப்பாடி பரப்புரை கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பணியாளர் தாக்கப்பட்டதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையில், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்கப்படுவது ஏற்கதக்கது அல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் ஆம்புலன்ஸ் பணியாளர் தாக்கப்பட்டது தொடர்பாக எடுத்த நடவடிக்கை பற்றி டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.
- Sep 03, 2025 12:09 IST
சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து
சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தில் தொழிற்சாலையின் ஒரு அறை மட்டும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.விபத்து நடந்த இடத்துக்கு தீயணைப்புத் துறையினர், வருவாய்த்துறையினர் விரைந்துள்ளனர்.
- Sep 03, 2025 12:01 IST
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இலுப்பூரில் மகரிஷி வித்யாலயா பள்ளிக்கும் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- Sep 03, 2025 11:43 IST
செங்கோட்டையன் நல்ல முடிவு எடுப்பார் - அ.தி.மு.க முன்னாள் எம்.பி சத்தியபாமா பேட்டி
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்.பி-யுமான சத்தியாபாமா, "அ.தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். செப்டம்பர் 5-ஆம் தேதி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பேன். அ.தி.மு.க நலன் கருதி செங்கோட்டையன் நல்ல முடிவு எடுப்பார். 2026ல் அ.தி.மு.க ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் நோக்கம்" என்று கூறியிருக்கிறார்.
- Sep 03, 2025 11:37 IST
அ.தி.மு.க தொண்டர்களின் கருத்தை பிரதிபலிப்பேன் - செங்கோட்டையன் பேச்சு
கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன், "அ.தி.மு.க தொண்டர்களின் கருத்தை பிரதிபலிப்பேன். யாரையும் நான் அழைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
- Sep 03, 2025 10:49 IST
திருச்சியில் இளைஞர் தலை துண்டித்து படுகொலை
திருச்சியை அடுத்த முசிறியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது தலையை துண்டித்து எடுத்து சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி இருக்கிறது. இளைஞரின் உடலை மீட்டு தொட்டியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
- Sep 03, 2025 10:24 IST
திருச்சி - சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு - பயணிகள் அவதி!
திருச்சியில் இருந்து இன்று சார்ஜாவிற்கு கிளம்பிய ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம், புறப்பட்ட சில நொடிகளிலேயே தொழில்நுட்பக் கோளாறால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு 180 பயணிகளுடன் கிளம்பிய ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் புறப்பட்ட தயாரான சில நொடிகளிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக விமானி விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்தினார். பயணிகள் விமானத்திற்குள் அமர்ந்திருந்த நிலையிலேயே, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பழுதுநீக்கும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் பணிகள் முடிவடையாததால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். இதைத் தொடர்ந்து இன்று பகல் 12 மணிக்கு மாற்று விமானம் மூலம் அவர்கள் அனைவரும் சார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- Sep 03, 2025 09:45 IST
தலைமை ஆசிரியருக்கு கை கால்களை பிடித்துவிடும் மாணவர்கள் - வீடியோ வெளியாகி கடும் சர்ச்சை
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே மாவேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்த தலைமை ஆசிரியை கலைவாணி, பள்ளி நேரத்தில் மாணவர்களை வைத்து கை கால்களை பிடித்துவிடும் காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பெற்றோரின் புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், தலைமை ஆசிரியை மாணவர்களை மிரட்டியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
- Sep 03, 2025 09:45 IST
ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று காலை 11 மணி வரை மட்டும் பக்தர்களுக்கு அனுமதி
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தரிசனம் செய்ய உள்ள நிலையில் இன்று காலை 11 மணி வரை மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்குமேல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.