Coimbatore, Madurai, Trichy News Highlights: கல்குவாரி விபத்தில் இறந்தோர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதி - ஸ்டாலின்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஸ்டாலின்

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் நீர்திறப்பு அதிகரிப்பால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு, கிருஷ்ணகிரியில் கனமழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3.208 கன அடியாக உயர்ந்துள்ளது. 52 அடி உயரம் கொண்ட கே.ஆர்.பி.அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கையாக வினாடிக்கு 4.000 கன அடி நீர் வெளியேற்றபட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும் ஆற்றைக் கடக்கவும் வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

  • May 20, 2025 20:16 IST

    தாத்தா, பாட்டியை சம்மட்டியால் அடித்துக் கொன்ற பேரன்

    திருவண்ணாமலை, செஞ்சி அருகே சொத்து பிரச்சினையில் தாத்தா, பாட்டியை சம்மட்டியால் அடித்துக் கொன்ற பேரன் கைது



  • May 20, 2025 20:16 IST

    திருத்தணியில் 56 மி.மீ மழை பதிவு

    தமிழகத்தில் கடந்த 9 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 56 மி.மீ மழை பதிவாகியுள்ளது



  • Advertisment
  • May 20, 2025 18:45 IST

    மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி

    தேனி அருகே டிரான்ஸ்ஃபார்மர் பழுது  பார்க்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடமலைக்குண்டு துணை மின்நிலையத்தில் டிரான்ஸ்ஃபார்மரை பழுது பார்த்த ஒப்பந்த ஊழியர் உயிரிழந்துள்ளார்.  

     

     



  • May 20, 2025 18:35 IST

    கோவை பெண் காட்டு யானை மரணம் 

    கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பெண் காட்டு யானை உயிரிழந்தது. யானைக்கு காதுகள் மூலமாக குளுக்கோஸ், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுத்து குணப்படுத்த வனத்துறையினர் முயன்றும் பலனளிக்கவில்லை.



  • Advertisment
    Advertisements
  • May 20, 2025 17:55 IST

    ஈரோடு சம்பவம் - போலீசாருக்கு ஸ்டாலின் பாராட்டு 

    ஈரோடு சிவகிரி முதிய தம்பதி கொலை வழக்கில் துப்பு துலக்கிய போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த போலீசாரை நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

     



  • May 20, 2025 17:19 IST

    சாத்தனூர் அணை நிலவரம்

    திருவண்ணாமலை சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 5000 கன அடியாக உள்ளது. 119 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது நீர் மட்டம் 89 அடியாக உயர்ந்துள்ளது. 7.321 டி.எம்.சி. கொள்ளளவில் தற்போது 2.342 டி.எம்.சி.க்கு நீர் இருப்பு உள்ளது அணையில் இருந்து நீர் வெளியேற்றம் எதுவும் இல்லை.



  • May 20, 2025 16:30 IST

    கல்குவாரி விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு நிதி

    சிவகங்கை கல்குவாரி விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்து சிகிச்சையில் உள்ளோருக்கு ரூ. 1 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. மண் சரிந்து 5 பேர் இறந்த நிலையில் குடும்பத்தினருக்கு ஸ்டாலின் ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துள்ளார். 



  • May 20, 2025 15:38 IST

    3 ஆவது நாளாக மழை

    செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 3வது நாளாக இடி மின்னலுடன் கன மழை திம்மாவரம், ஆத்தூர், வல்லம், ஆலப்பாக்கம், மேலமையூர், பரனூர், மகேந்திராசிட்டி, வேண்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. 



  • May 20, 2025 14:26 IST

    நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி மாவட்டத்தில் இன்று (மே 20) மிக கனமழைக்கு வாய்ப்பு. தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • May 20, 2025 14:01 IST

    5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

    சிங்கம்புணரி அருகே கல்குவாரியில் நிகழ்ந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மேலும் இருவருக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சிவகங்கை ஆட்சியர் மற்றும் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நேரில் ஆய்வு செய்தார். 



  • May 20, 2025 13:53 IST

    கேரளாவுக்கு தங்கம் கடத்தல் - 3 பேர் கைது

    கோவையில் இருந்து கேரளாவுக்கு ரூ.70 லட்சம் ரொக்கம், 200 கிராம் தங்கம் கடத்த முயற்சி. பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஜாக்கெட்டில் வைத்து பணம் கடத்தி வந்தது கண்டுபிடிப்பு; சாகர், மணிகண்டன்,சந்திப் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • May 20, 2025 13:35 IST

    இப்போதாவது முதல்வர் ஸ்டாலின் உணர்வாரா? - இபிஎஸ்

    “சேலம் அருகே நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் கௌதம் உயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24-வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழப்பு; ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது முதல்வர் ஸ்டாலின் உணர்வாரா?” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்விகளை எழுப்பியுள்ளார். 



  • May 20, 2025 13:27 IST

    கல்குவாரியில் விபத்து - 5 பேர் மரணம்

    சிங்கம்புணரி அருகே கல்குவாரியில் நிகழ்ந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மேலும் இருவருக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது



  • May 20, 2025 13:04 IST

    ஆயுதப்படை காவலரின் துப்பாக்கி வெடித்து விபத்து

    கோவை, கே.என்.ஜி. புதூர் பகுதியில் ஆயுதப்படை காவலரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்து விபத்து ஏற்பட்டது. வீட்டில் துப்பாக்கியை சுத்தம் செய்தபோது தவறுதலாக வெடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்



  • May 20, 2025 12:39 IST

    தேசிய கட்சிகளை தவிர்த்துவிட்டு திராவிட கட்சிகள் அரசியல் செய்ய முடியாது - கோவையில் கார்த்தி சிதம்பரம் பேட்டி

    தேசிய கட்சிகளை தவிர்த்துவிட்டு திராவிட கட்சிகள் அரசியல் செய்ய முடியாது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர்களாக வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது என கோவையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்



  • May 20, 2025 12:09 IST

    30 ஆண்டுகளுக்கு பின் அதிவிரைவு ரயில் சோதனை ஓட்டம்; பொதுமக்கள் மகிழ்ச்சி

    30 ஆண்டுகளுக்கு பின் காரைக்காலில் இருந்து திருநள்ளாறு வழியாக பேரளம் வரை ரயில்வே சேவை விரைவில் மீண்டும் தொடங்க உள்ளது. இதனையடுத்து காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் அதிவிரைவு ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ரயிலைக் கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்



  • May 20, 2025 11:57 IST

    பேருந்து சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

    பாளையங்கோட்டை அருகே தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

    இளைஞரின் உடலை கைப்பற்றி நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • May 20, 2025 11:22 IST

    அம்பேத்கர் சிலைக்கு தீவைப்பு

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மருத்துவமனை அருகில் அமைக்கப்பட்டுள்ள, டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பென்னாகரம் போலீசார் உடனடியாக சிலைக்கு வெள்ளை வேட்டியை சுற்றி சிலையை மறைத்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்



  • May 20, 2025 11:08 IST

    தேர் மீது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

    மதுராந்தகம் அருகே ஒரத்தி கிராமத்தில் நடைபெற்ற திரெளபதி அம்மன் தேரோட்ட திருவிழாவில், தேர் மீது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

    படுகாயம் அடைந்த 4 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி



  • May 20, 2025 10:35 IST

    விஷவாயு தாக்கியதில் மேலும் ஒருவர் பலி

    திருப்பூர் தனியார் சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

    கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலியான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு



  • May 20, 2025 10:16 IST

    மதுரையில் மழை: சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலி

    மதுரை வளையங்குளத்தில் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். சுவர் இடிந்து விழுந்து அம்மா பிள்ளை (65), பேரன் வீரமணி (10), வெங்கட்டி என்ற 55 வயது பெண் உயிரிழந்தனர்.



  • May 20, 2025 09:24 IST

    குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை

    மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடையில்லை.



  • May 20, 2025 09:14 IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,683 கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,683 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக 5-வது நாளாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று(மே 19) காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6,233 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து, இன்று(மே 20) காலை வினாடிக்கு 9,683 கன அடியாக அதிகரித்துள்ளது.



  • May 20, 2025 09:13 IST

    ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து 8,000 கனஅடியாக உயர்வு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8000 கனஅடியாக உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை வினாடிக்கு 5,000 கனஅடி நீர்வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 8000 கனஅடியாக அதிகரித்துள்ளது.



  • May 20, 2025 09:13 IST

    மதுரை: சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உள்பட 3 பேர் பலி

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் கிராமத்தில் பெய்த மழையின் காரணமாக, 3 பேர் இருந்த ஒரு வீட்டின் சுவர் எதிர்பாராதவிதமாக இடிந்து விபத்துக்குள்ளானது. மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததில், மூதாட்டி, அவரது பேரன், அவர்களது பக்கத்து வீட்டுப் பெண் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.



  • May 20, 2025 09:08 IST

    தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு- எச்சரிக்கை

    கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் அணையின் தரைபாலமானது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் அணையில் இருந்து எந்த நேரமும் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்று கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: