/indian-express-tamil/media/media_files/2025/10/02/vijay-karur-stampede-2025-10-02-13-21-40.jpg)
Vijay Karur stampede
திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: இன்று புரட்டாசி மாத பவுர்ணமி என்பதால் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு வசதியாக சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- Oct 06, 2025 23:11 IST
மதுரை வரும் `தல' தோனி
மதுரையில் ரூ.325 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட்
மையத்தை திறக்க அக். 9 ஆம் தேதி மதுரை வருகிறார் தோனி. - Oct 06, 2025 20:07 IST
கரூர் சம்பவத்தில் நீதிபதி குறித்து அவதூறு - மேலும் ஒருவர் கைது
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில், ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஆண்டனி சகாய மைக்கேல் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- Oct 06, 2025 19:56 IST
திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த குப்பைகள்
திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் கழிவுத்துணிகள், குப்பைகள் அதிகமாக தேங்கிக் கிடப்பதால், புனித நீராட வந்த பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குப்பைகளை உடனடியாக அகற்ற பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குப்பைகள் விரைவில் அகற்றப்படும் என கோவில் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
- Oct 06, 2025 19:14 IST
அழகன்குளம் அகழாய்வு தொடர்பான வழக்கு
ராமநாதபுரம் அழகன்குளம் அகழாய்வு தொடர்பாக அழகன்குளம் கிராமத்திலேயே அருங்காட்சியகத்தை அமைக்கக் கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அழகன்குளம் அகழாய்வு தொடர்பான புத்தகங்கள் எப்போது வெளியிடப்படும்? என தமிழக தொல்லியல்துறை இயக்குநர், பதில்மனுவைத் தாக்கல் செய்ய மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
- Oct 06, 2025 19:13 IST
மதுரையில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் நயினார்
'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் அக்.12ல் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
- Oct 06, 2025 19:12 IST
செந்தில்பாலாஜிக்கு நன்றி சொல்ல வேண்டும் - கரூரில் கமல் பேட்டி
நேரத்திற்கு வந்து மேலும் உயிர் சேதம் ஏற்படாமல் காப்பாற்றிய செந்தில்பாலாஜிக்கு நன்றி சொல்ல வேண்டும் என மநீம தலைவர் கமல்ஹாசன் கரூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
- Oct 06, 2025 18:44 IST
வரும் 9 ஆம் தேதி நாமக்கலில் இபிஎஸ் பரப்புரை
பொது இடங்களில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பால், நாமக்கல்லில் வரும் 9ம் தேதி தனியாருக்குச் சொந்தமான இடத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். ஏ.எஸ். பேட்டையில் சில்ட்ரன் பார்க் பள்ளி அருகே உள்ள இடம், இதற்காக சுத்தம் செய்யப்படுகிறது.
- Oct 06, 2025 18:11 IST
கரூர் துயரம்: 41 குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கும் மநீம
கரூர் கூட்ட நெரிசலில் 41 குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை மக்கள் நீதி மய்யம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
- Oct 06, 2025 15:05 IST
நாகை அருகே சுவர் இடிந்து மூதாட்டி உயிரிழப்பு
கீழ்வெண்மணியில் மழையால் குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார். பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் முறிந்து குடிசை வீட்டின் மீது விழுந்ததில் சுவர் இடிந்தது. குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ராசாத்தி(68) உடல் நசுங்கி உயிரிழந்தார்.
- Oct 06, 2025 14:08 IST
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- Oct 06, 2025 12:14 IST
கரூரில் ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் திறப்பு
கரூரில் ரூ. 40 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம், இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. சுமார் 20 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ள இந்த நிலையம், 80 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. இன்று காலை முதல் அனைத்து வெளியூர் பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. மேலும், பழைய மற்றும் புதிய நிலையங்களை இணைக்க 24 மணி நேர நகரப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- Oct 06, 2025 11:47 IST
கனமழையால் அடியோடு சாய்ந்த 10,000 வாழை மரங்கள்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காற்றுடன் கூடிய கனமழையால் 10,000 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன
- Oct 06, 2025 10:59 IST
எம்.ஜி.ஆர் சிலை சேதம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மதுரை அவனியாபுரத்தில் எம்.ஜி.ஆர் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்
- Oct 06, 2025 09:58 IST
திருவள்ளூர்: ஆவடியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருவள்ளூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் அழைப்பில் ஆவடியில் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எண்ணை ஆய்வுசெய்த போது ஆவடியில் மளிகை கடைக்காரர் ஜெயக்குமார் என்ற முதியவரின் எண் என தெரியவந்தது. முதியவர் ஜெயக்குமாரிடம் மர்ம நபர் செல்போனை வாங்கி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை சிசிடிவி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.
- Oct 06, 2025 09:57 IST
திருப்பரங்குன்றத்தில் எம்.ஜி.ஆர் சிலை சேதம்-போலீஸ் விசாரணை
மதுரை அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலையை நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிலை சேதம் அடைந்தது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Oct 06, 2025 09:16 IST
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 11 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும் மீனவர்களை இரும்புகம்பி, கத்தி, கட்டை, பைப், கயிறு உள்ளிட்ட ஆயுதங்களால் கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். இதில் 11 பேர் மீனவர்களும் காயம் அடைந்துள்ளனர். மீனவர்களிடம் இருந்து செல்போன், பைபர் படகில் உள்ள இன்ஜின் ரூ. 4 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரண பொருட்களை பறித்து சென்றுள்ளனர்.
- Oct 06, 2025 09:15 IST
புரட்டாசி பவுர்ணமி: தி.மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இன்று புரட்டாசி மாத பவுர்ணமி என்பதால் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு வசதியாக சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகளைத் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்று அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.