Coimbatore, Madurai, Trichy News: ராஜராஜ சோழன் சதய விழா: நவ.1-ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

Coimbatore, Madurai, Trichy News Live 28 October 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live 28 October 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pasumpon helicopter

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25,500 கன அடியில் இருந்து 15,500 கன அடியாக சரிந்துள்ளது. அணை முழு கொள்ளளவுடன் உள்ள நிலையில் கால்வாய் வழியே விநாடிக்கு 15,500 கன அடி நீர் டெல்டா பாசனத்திற்காக வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

தமிழக துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு: தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றம்; புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

  • Oct 28, 2025 20:20 IST

    ராஜராஜ சோழன் சதய விழா: நவ.1-ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

    ராஜராஜ சோழனின் 1040-ம் ஆண்டு சதய விழாவையொட்டி நவம்பர் 1-ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.



  • Oct 28, 2025 20:15 IST

    தேவர் குருபூஜைக்காக பசும்பொன் வருகை தரும் துணை ஜனாதிபதி; ராணுவ ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம்

    ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடக்கும் தேவர் குருபூஜைக்காக, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வரவுள்ளார். இதற்காக, ராணுவ ஹெலிகாப்டர்களின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.  



  • Advertisment
    Advertisements
  • Oct 28, 2025 18:32 IST

    காட்டு யானை இறந்ததற்கான காரணம் என்ன?- ஐகோர்ட்

    கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் நுழைந்த காட்டு யானை இறந்ததற்கான காரணம் என்ன? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவ.7ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது. யானை இறப்புக்கான காரணத்தை தெரியப்படுத்தாமல் வனத்துறை புதைத்துவிட்டதாக முரளிதரன் என்பவர் முறையீடு செய்திருந்தார்.



  • Oct 28, 2025 18:31 IST

    கொடைக்கானல்: மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

    கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் ஒன்றான பூம்பாறை-மன்னவனூர் மலைச்சாலையின் குறுக்கே, மரம் முறிந்து விழுந்தது. இதனால், சாலையை கடக்க முடியாமல் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் வராததால், பொதுமக்களை மரத்தினை வெட்டி அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர்.



  • Oct 28, 2025 18:30 IST

    கோவை: தோட்டத்தில் உலாவிய சிறுத்தை - சிசிடிவி காட்சி

    கோவை ஆனைமலையை அடுத்த குப்பிச்சிப்புதூரில் விவசாயி ஒருவரின் தோட்டத்திற்கு அருகே நடந்து சென்ற சிறுத்தையின் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி உள்ளது. யானை, காட்டெருமை,பன்றி, சிறுத்தை போன்ற விலங்குகள் அடிக்கடி அப்பகுதியில் உலாவுவது அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Oct 28, 2025 17:57 IST

    முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.40ஆக நிர்ணயம்

    நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 5 காசுகள் உயர்ந்து ரூ.5.40ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

     



  • Oct 28, 2025 17:38 IST

    திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவு

    முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த 22-ஆம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளான இன்று முருகப் பெருமானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். மேலும் பள்ளிக்கு விடுமுறை என்பதால் சாமி தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

     



  • Oct 28, 2025 17:12 IST

    இரவு 7 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இரவு 7 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் , கோவை, ஈரோடு, திருப்பூர், தென்காசி, தேனி, நீலகிரி, திருநெல்வேலி , கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

     



  • Oct 28, 2025 16:56 IST

    பாதுகாப்பு வளையத்தை அத்துமீறிய 2 பேருக்கு வலைவீச்சு

    கோவையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பாதுகாப்பு வளையத்தில் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் கரும்பக்கடவு பகுதியைச் சேர்ந்த அனீஸ் மற்றும் ஆஷிக் என்பது தெரிந்தது; காவல்துறையில் இருவர் மீதும் கஞ்சா வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது; இருவரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது



  • Oct 28, 2025 16:30 IST

    பாதுகாப்பில் குறைபாடு இல்லை - சி.பி.ராதாகிருஷ்ணன்

    எனது பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை; கோவை மக்கள்தான் எனக்கு பாதுகாப்பு - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

    கோவையில் மாநகராட்சி அலுவலகம் அருகே பாதுகாப்பு போடப்பட்ட இடத்தில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்தனர்; பாதுகாப்பு வளையம் இருந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களைப் பிடித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. 



  • Oct 28, 2025 15:37 IST

    கோவை பன்னிமடை அருகே அதிமுக பிரமுகர் மனைவி கொலை

    கோவை: பன்னிமடை அருகே தாளியூரில் அதிமுக பிரமுகர் கவி சரவணக்குமார் மனைவி மகேஸ்வரி கொலை செய்யப்பட்டார்.

    வீட்டில் ஓட்டுநராக வேலை பார்த்த சுரேஷ், மகேஸ்வரியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு போலீஸிடம் சரண்; கோவை வடவள்ளி காவல்நிலையத்தில் சுரேஷ் சரணடைந்த நிலையில் தடாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Oct 28, 2025 15:15 IST

    மத்தியகுழுவிடம் விவசாயிகள் குற்றச்சாட்டு

    சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், மத்திய அரசின் குழுவினர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வுக்கு வந்த மத்திய குழுவினரிடம் விவசாயிகள் பல புகார்களைத் தெரிவித்தனர்.

    விவசாயிகளின் முக்கியப் புகார்கள்:

    சேமிப்பு வசதி இல்லாததால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துவிடுகின்றன. இதனால், அதிகாரிகள் அவற்றைக் கொள்முதல் செய்ய மறுக்கின்றனர்.

    கொள்முதலில் தாமதம்: நெல்லை வாங்குவதற்கு அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்கள் என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.



  • Oct 28, 2025 15:10 IST

    கூட்டத்தை புறக்கணித்த அதிமுக கவுன்சிலர்கள்

    சீர்காழி நகராட்சி வார்டு அளவிலான சிறப்பு கூட்டத்தை 7 அதிமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். 

    கடந்த 2 முறை கூட்டம் நடந்தபோது அடிப்படை வசதிக்கோரி அளித்த மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணாததால் அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தாத செய்திகள் வெளியாகி உள்ளது. 



  • Oct 28, 2025 15:07 IST

    மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

    சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை கும்மத் பள்ளித்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடவசதி இல்லாததால் கூடுதல் கட்டடம் கேட்டு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.



  • Oct 28, 2025 14:31 IST

    திருப்பூரில் சத் பூஜை கோலாகலம்

    திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்காக இங்கு வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் முக்கிய பண்டிகையான சத் பூஜையை கோலாகலமாகக் கொண்டாடினர். சொந்த ஊர் செல்ல முடியாததால், குளத்துப்புதூர் குளத்தை கங்கையாகக் கருதி, 4 நாள் விரதத்தை நிறைவு செய்தனர். இன்று அதிகாலையில் குளத்தில் நீராடி, தண்ணீரில் நின்றவாறு, சூரியனுக்கு பால் பிரசாதமான 'அர்க்யா' படைத்து வழிபட்டனர்.



  • Oct 28, 2025 14:14 IST

    மாலை 4 மணி வரை மழை - வானிலை மையம்

    சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 13 மாவட்டங்களில் மாலை 4 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • Oct 28, 2025 14:13 IST

    கூட்டணி வைக்காவிடில் வழக்கு - சீமான்

    கரூர் விவகாரத்தில் விஜயையும் ஆதவ் அர்ஜுனாவையும் கைது செய்யாமல் வைத்துள்ளது கூட்டணிக்காக தான்; கூட்டணி வைக்காவிடில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் சிபிஐ விசாரணை எப்போது தொடங்கும் என்பதே கேள்விக்குறி என நெல்லையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.



  • Oct 28, 2025 13:46 IST

    தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்ட மலை பகுதிகளிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Oct 28, 2025 12:35 IST

    குற்றத்திற்கு முதன்மைக் காரணம் விஜய்தான்: சீமான்

    கரூரில் 41 பேர் உயிரிழந்த குற்றத்திற்கு முதன்மைக் காரணம் விஜய்தான்; தவறு இல்லை என்றால் ஏன் முன்பிணை கேட்கிறார்கள்? குற்றத்திற்கு காரணமானவரையே சிபிஐ விசாரிக்காது எனில் பிறகு எப்படி நியாயம் வெளிவரும்? யாரைப் பார்க்க கூட்டம் கூடியதோ அந்த நபர் மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்? என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி கேட்டுள்ளார். 



  • Oct 28, 2025 12:32 IST

    தேர்தல் முறையை அழிக்க முயற்சி: சு.வெங்கடேசன்

    தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது தேர்தல் முறையை சிதைப்பதுபோல; ஜனநாயகத்தில் தேர்தல் எனும் இதயத்தை அரிக்கும் செயல்; இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களின் வாக்குகளை நீக்கும் வகையில் நடவடிக்கை; பாஜகவின் அரசியல் நலனுக்கு எதுவெல்லாம் வாய்ப்போ அதையெல்லாம் தேர்தல் ஆணையம் செய்கிறது என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார். 



  • Oct 28, 2025 10:37 IST

    11 மாவட்டங்களில் மழை தொடரும் - வானிலை மையம் தகவல்

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Oct 28, 2025 10:14 IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,500 கன அடியாக சரிவு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 25,500 கன அடியில் இருந்து 15,500 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கும் நிலையில் நீர் இருப்பு 93.470 டி.எம்.சி.யாக உள்ளது. டெல்டா பாசனத்துக்காக 15,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக 500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.



  • Oct 28, 2025 10:14 IST

    தமிழக துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

    தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றம்; புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.



Trichy Coimbatore Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: