Coimbatore, Madurai, Trichy News Updates: சிறுமிக்கு பாலியல் தொல்லை; பா.ஜ.க முன்னாள் நிர்வாகி கைது

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BJP sexual abuse
ஏற்காட்டில் கோடை விழா நாளை தொடங்குகிறது: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் பல்வேறு துறைகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட உள்ளன. நாளை காலை 7 மணிக்கு ஏற்காடு மலைப்பாதையில் ஆண்கள், பெண்களுக்கான மலையேற்றம் நடக்கிறது. தொடர்ந்து ஏற்காடு கலையரங்கத்தில் புலியாட்டம், சிலம்பாட்டம், நாட்டுப்புற மற்றும் மேற்கத்திய நடன நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளன.
  • May 22, 2025 23:24 IST

    விபத்தில் முன்னாள் அமைச்சரின் பேத்தி உயிரிழப்பு

    கோவை அருகே அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி திவ்யபிரபா சாலை விபத்தில் உயிரிழந்தார். பல் மருத்துவரான இவர், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு சென்ற போது கல்லாறு அருகே கார் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 22, 2025 22:04 IST

    சிறுமிக்கு பாலியல் தொல்லை; பா.ஜ.க முன்னாள் நிர்வாகி கைது

    சிவகங்கையில் 15  வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் பா.ஜ.க முன்னாள் நிர்வாகி ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



  • Advertisment
  • May 22, 2025 19:26 IST

    பா.ஜ.க-வின் மற்றொரு வடிவமாக திகழும் த.வெ.க; வைஷ்ணவி குற்றச்சாட்டு

    பா.ஜ.க-வின் மற்றொரு வடிவமாக த.வெ.க திகழ்கிறது என்று அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகிய வைஷ்ணவி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தி.மு.க-வில் அவர் இணைந்தார். மேலும், "த.வெ.க-வில் ஓராண்டாக பயணித்தேன். இளைஞர்களை ஊக்குவிப்பார்கள் என்று நினைத்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • May 22, 2025 17:55 IST

    அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

    அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. ரயில் சேவையில் பாதிப்பு இல்லை. ரயில் நிலையத்தில் சரக்கு கையாளும் பாதையில் யார்டுக்கு செல்லும்போது ரயில் தடம் புரண்டது. சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் மட்டுமே தடம் புரண்டன. பெட்டிகளை மீட்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. 



  • Advertisment
    Advertisements
  • May 22, 2025 17:18 IST

    மதுரையில் விஜய் போட்டியா

    மதுரை மேற்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் களமிறங்க வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது. 



  • May 22, 2025 17:08 IST

    7 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி, நெல்லை, ஈரோடு மற்றும் சேலத்தில் மிதமான மழை பெய்யும்.



  • May 22, 2025 16:54 IST

    மனித உரிமை மீறல் - காவல்துறைக்கு ரூ.4 லட்சம் அபராதம்

    நெல்லையைச் சேர்ந்த இளைஞர் மீது விசாரணை என்ற பெயரில் போலீசார் தாக்குதல். ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு. இளைஞரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் விமலன், காவலர் மகாராஜனிடம் இருந்து தலா ரூ.2 லட்சம் வசூலிக்க உத்தரவு. பணத்தை பாதிக்கப்பட்ட இளைஞரிடம் வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 



  • May 22, 2025 16:42 IST

    7 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, ஈரோடு மற்றும் சேலத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • May 22, 2025 15:53 IST

    மோசடி நிறுவனங்கள் மீது புகாரளிக்க அறிவுறுத்தல்

    கோவையில் அதிக லாபம் தருவதாக கூறி மோசடி செய்த 5 நிறுவனங்கள். பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு பிரிவில் புகாரளிக்க காவல் துறை அறிவுறுத்தல்



  • May 22, 2025 14:34 IST

    விஞ்ஞானி டாக்டர் ஸ்ரீனிவாசன்  உடல், அரசு மரியாதையுடன் குன்னூரில் தகனம் 

    இந்திய அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவரும் மூத்த விஞ்ஞானியுமான டாக்டர் ஸ்ரீனிவாசன் (95) உடல், அரசு மரியாதையுடன்  நீலகிரி மாவட்டம் குன்னூரில் தகனம் செய்யப்பட்டது



  • May 22, 2025 13:47 IST

    ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

    கோவை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்த பயணியிடம் 5.25 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. 



  • May 22, 2025 13:23 IST

    கடலூரில் தே.மு.தி.க மாநாடு - 'கூட்டணி குறித்து அறிவிப்போம்': பிரேமலதா

    அடுத்தாண்டு ஜனவரி 9ல் கடலூரில் நடக்கும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அடுத்தாண்டு மாநாட்டில் அறிவிப்போம். 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்களை நியமிக்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.



  • May 22, 2025 12:26 IST

    ஏற்காட்டில் நாளை தொடங்குகிறது கோடை விழா

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் பல்வேறு துறைகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட உள்ளன. நாளை காலை 7 மணிக்கு ஏற்காடு மலைப்பாதையில் ஆண்கள், பெண்களுக்கான மலையேற்றம் நடக்கிறது. தொடர்ந்து ஏற்காடு கலையரங்கத்தில் புலியாட்டம், சிலம்பாட்டம், நாட்டுப்புற மற்றும் மேற்கத்திய நடன நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளன.



  • May 22, 2025 11:48 IST

    எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 17ம் தேதி நடந்த வஃக்பு சட்டத்திற்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில், மத மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசிய பா.ஜ.க.,வைச் சேர்ந்த எச்.ராஜா, கருப்பு முருகானந்தம் மற்றும் சையத் இப்ராஹிம் மீது முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது



  • May 22, 2025 11:05 IST

    கொடநாடு வழக்கு - கனகராஜ் உறவினர் ஆஜர்

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர் ரமேஷ் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். கனகராஜ் உயிரிழந்த சம்பவம் குறித்தும், பங்களாவில் அவர் சந்தித்த நபர்கள் குறித்தும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்



  • May 22, 2025 11:00 IST

    நயினார் நாகேந்திரன் பேட்டி

    அன்புமணியும், ராமதாசும் ஒன்றாக இணைந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம் திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியே வரவேண்டும் என்று நான் விருப்பப்படுகிறேன்–

    நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி



  • May 22, 2025 10:32 IST

    தஞ்சாவூர் அரசுப் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு

    தஞ்சாவூர் அருகே அரசு பேருந்தும், டெம்போ டிராவலர்ரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு



  • May 22, 2025 10:28 IST

    ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு 7 ஆம் ஆண்டு நினைவு தினம்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் 7ம் ஆண்டு நினைவு தினம். சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரின் புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.



  • May 22, 2025 10:28 IST

    ஒற்றைக் காட்டுயானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

    கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த இடதுகரை குடியிருப்பு பகுதியில் உலவி வரும் ஒற்றைக் காட்டுயானை தாக்கி, மேரியம்மாள் (60) என்ற மூதாட்டி உயிரிழந்தார்.

    தப்பி ஓடும் போது காயமடைந்த மற்றொரு மூதாட்டி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • May 22, 2025 09:29 IST

    அரசுப் பேருந்து - வேன் மோதல்: பலி 6 ஆக உயர்வு

    தஞ்சாவூர் அருகே கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த தனியார் டெம்போ வேனும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



  • May 22, 2025 09:08 IST

    சிவகங்கை கல்குவாரி விபத்து: பலி 6 ஆக உயர்வு

    சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல்(47) எனபவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.30 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: