/indian-express-tamil/media/media_files/2025/02/18/TPLLkkgIcxMuwYV2kcjH.jpg)
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்: நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதல் விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிள்ளையார்பட்டியில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்தனர். பூஜைப்பொருட்களையும், விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் உணவு வகைகளை படைத்து நைவேத்தியம் செய்தனர். மேலும், தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
- Aug 27, 2025 11:46 IST
திருச்சி உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை படையல்
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சி உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை அடிவாரத்தில் இருந்து எடுத்துச் சென்று படையலிடப்பட்டது. அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கும் 75 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டது.
- Aug 27, 2025 11:11 IST
விஷ பூச்சி கடித்ததில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு
வேலூர், விருபாட்சிபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் சஞ்சய் விஷ பூச்சி கடித்ததில் வலி தாங்க முடியாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தான்.
- Aug 27, 2025 10:41 IST
விநாயகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிவகங்கை பிள்ளையார்பட்டியில் விநாயகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி தொடங்கியது. அங்குச தேவருக்கு உற்சவ மூர்த்தி கற்பக விநாயகர் முன்னிலையில் பால், தயிர், சந்தனத்துடன் அபிஷேகம் செய்யப்பட்டன.
- Aug 27, 2025 10:37 IST
கும்மிடிப்பூண்டி பாலியல் வழக்கு: குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜு பிஸ்வகர்மா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
- Aug 27, 2025 10:30 IST
சேலம் அருகே டூவிலரை திருடி மாட்டிக் கொண்ட திருடன்
சேலம்: தீவட்டிபட்டி பேருந்து நிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச்செல்ல இளைஞர் முயன்ற போது வாகன உரிமையாளரான இளம்பெண், திருடனை பார்த்து சத்தம் போட்டு விரட்டியதில், நிலைதடுமாறிய திருடன் சாலையிலேயே பைக்குடன் விழுந்தார். தொடர்ந்து ஓடிய பெண், ஆத்திரமடைந்து அந்த வாலிபரை தாக்கியபோது, அந்த நபர் பைக்கை போட்டுவிட்டு அங்கிருந்து ஓடினார்.
- Aug 27, 2025 09:59 IST
குன்னூர் மார்க்கெட் கடைகளை காலி செய்ய உத்தரவு
நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் கடைகளை இடிக்க 2 வாரங்களுக்குள் காலி செய்து தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகராட்சிக்கு சொந்தமான 800 கடைகள் உள்ள நிலையில், புதிய மார்க்கெட் கட்டுமான பணிகள் துவங்க உள்ளதால் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது
- Aug 27, 2025 09:58 IST
கோவை: அன்னூரில் பர்னிச்சர் கடையில் தீ விபத்து
கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள ஏவிஎம் என்கிற பர்னிச்சர் கடையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் ஏசி, ஃபிரிட்ஜ், சோபா, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- Aug 27, 2025 09:58 IST
தேனி அருகே பொதுமக்கள் சாலைமறியல் - பரபரப்பு
தேனி அருகே கல்குவாரி விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட சசி என்கிற சதீஷ்குமாரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், 5 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Aug 27, 2025 09:42 IST
விநாயகர் சதுர்த்தி விழா - ராகுல்காந்தி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியையொட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: ”விநாயகர் சதுர்த்தி திருநாளில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நல்ல தருணம் உங்கள் அனைத்து தடைகளையும் நீங்கி மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஏற்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
- Aug 27, 2025 09:39 IST
சுர்ஜித், தந்தை சரவணனுக்கு செப்.9 வரை காவல் நீட்டிப்பு
ல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித், தந்தை சரவணனுக்கு செப்.9 வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலனுக்கும் செப்.9ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
- Aug 27, 2025 09:38 IST
நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 29ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 1ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
- Aug 27, 2025 09:35 IST
விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார்பட்டியில் சிறப்பு வழிபாடு
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் தங்கம் பூசிய மூஷிக வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் விநாயகர். பிள்ளையார்பட்டியில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.