/indian-express-tamil/media/media_files/2025/07/28/nellai-it-employee-murder-2025-07-28-11-28-20.jpg)
எம்.பி. கனிமொழி நேரில் ஆறுதல்
ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் இல்லத்திற்குச் சென்று அவரது பெற்றோருக்கு அமைச்சர் நேரு, எம்.பி. கனிமொழி ஆறுதல் தெரிவித்தனர்.
குற்றம் செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார் என கவின் பெற்றோரிடம் கனிமொழி நம்பிக்கை தெரிவித்தார்.
-
Aug 01, 2025 00:24 IST
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறித்த விபரம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, இன்று இரவு 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 30,500 கன அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் விநாடிக்கு 30,500 கன அடியாகவும் உள்ளது
-
Jul 31, 2025 19:40 IST
கவின் கொலை வழக்கு - விசாரணையை தொடங்கிய சி.பி.சி.ஐ.டி
நெல்லை ஐ.டி ஊழியர் கவின் கொல்லப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலை நடைபெற்ற இடத்தில் விசாரணை அதிகாரி ராஜ்குமார் நவ்ரோஜி தலைமையில் ஆய்வு நடைபெற்றுள்ளது.
-
Jul 31, 2025 18:42 IST
தேசிய நெடுஞ்சாலையில் விபத்து - 2 பேர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி, ஜிஞ்சுப்பள்ளி பகுதி தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு - 5 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Jul 31, 2025 18:40 IST
ஹாக்கி வீரர்கள் மீது கல்வீச்சு - பரபரப்பு காட்சிகள்
திண்டுக்கலில் பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டியில் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக ஹாக்கி வீரர்கள் மீது கல்லூரி மாணவர்கள் கல்வீசினர். ஹாக்கி மட்டையால் தாக்கியதில் 3 வீரர்கள் காயம். மோதலுக்கும், தங்களது கல்லூரி மாணவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
Jul 31, 2025 18:13 IST
குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 8 குழந்தை தொழிலாளர்களை மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மீட்டனர். கும்மிடிப்பூண்டியில் கடைகள், வர்த்தக நிலையங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 8 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
-
Jul 31, 2025 17:33 IST
நெடுஞ்சாலையில் திடீரென பிரேக் பிடித்து வாகனத்தை நிறுத்துவது தவறே - உச்ச நீதிமன்றம்
2017ல் கோவை அருகே கர்ப்பிணி மனைவி அசெளகரியமாக உணர்ந்ததால் காரை அதன் உரிமையாளர் திடீரென நிறுத்த, பின்னால் வந்த பைக் காரில் மோதி கீழே விழுந்த ஹக்கிம் என்பவர் மீது பேருந்து ஏறியதில் அவரின் கால் நசுங்கியது. இழப்பீடு தொடர்பாக ஹக்கிம் தொடர்ந்த வழக்கில், கார் உரிமையாளரின் வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் அவர் 50% இழப்பீடும், பேருந்து ஓட்டுநர் 30% இழப்பீடும் வழங்க உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றாததால் ஹக்கிம், 20% இழப்பீட்டுக்கு பொறுப்பேற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Jul 31, 2025 17:22 IST
கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட இடத்தில் சிபிசிஐடி ஆய்வு
நெல்லை கே.டி.சி. நகரில் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட இடத்தில் சிபிசிஐடி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொலைச் சம்பவம் நடந்த கே.டி.சி. நகர், அஷ்டலட்சுமி நகர் உள்ளிட்ட இடங்கள் மற்றும் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் சுபாஷினி பணியாற்றிய கிளினிக்கிலும் சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. கடந்த 27-ம் தேதி நெல்லையில் மென்பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்டார்.
-
Jul 31, 2025 17:11 IST
ஆய்வாளர் ஸ்ரீதர் மனு மீது ஆக.4ல் இறுதி விசாரணை
சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவராக மாற அனுமதி கோரிய ஆய்வாளர் ஸ்ரீதர் மனு மீது ஆகஸ்ட்.4ல் இறுதி விசாரணை நடைபெற உள்ளது. இறுதி விசாரணைக்காக வழக்கை ஆக.4ம் தேதிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது. இறுதி விசாரணைக்கு பிறகு தீர்ப்பு வழங்குவதாக மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.
-
Jul 31, 2025 17:04 IST
DSP அலுவலகம் அருகே கத்தி முனையில் கொள்ளை
DSP அலுவலகம் அருகே உள்ள வீட்டில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. வீடுபுகுந்து கத்தியை காட்டி தாய், மகளை மிரட்டி 40 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளையடித்து புர்கா அணிந்து தப்பியுள்ளார்.
-
Jul 31, 2025 16:58 IST
கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள் - திருமாவளவன்
கவினை நயந்து பேசி நம்ப வைத்து குறிப்பிட்ட, ஒரு இடத்திற்கு வரவழைத்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள். கவினை தனியொருவராக கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு கவின் தாயாரை 3 மணி நேரம் காவல் நிலையத்தில் காக்க வைத்திருக்கிறார்கள். எப்ஐஆரில் இடம்பெற்றுள்ள சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்திற்கு உரிய நீதியும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
-
Jul 31, 2025 16:56 IST
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மீன் வியாபாரி வெட்டிக் கொலை..!!
கமுதி அருகே மீன்வியாபாரி ஜவஹர்லால் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக மீன்வியாபாரி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
Jul 31, 2025 16:03 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேருக்கு ஆக.14 வரை நீதிமன்ற காவல்
ஜூன் 28, ஜூலை 1ல் இலங்கை கடற்படையால் கைதான 15 மீனவர்களுக்கு ஆக.14 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 15 பேரையும் ஆக.14 வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரையும் வவுனியா சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர். தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்தபோது ரோந்து வந்த இலங்கை படை 15 பேரையும் கைது செய்தது.
-
Jul 31, 2025 16:03 IST
புதிய டிஜிபி தேர்வை உடனே தொடங்கக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு
டிஜிபி பதவிக் காலம் ஆக.31ம் தேதியுடன் முடிவதால் புதிய டிஜிபி தேர்வை உடனே தொடங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிஜிபி ஓய்வுக்கு பின் பதவியை நீட்டிக்கவோ, பொறுப்பு டிஜிபியை நியமிக்கவோ கூடாது என ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் யாசர் அராபத் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். புதிய டிஜிபியை தேர்வு செய்யக் கோரிய வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வர உள்ளது.!!
-
Jul 31, 2025 14:38 IST
கவின் கொலை சம்பவத்திற்கும், என் பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லை - சுர்ஜித்தின் சகோதரி விளக்கம்
கவின் கொலை சம்பவத்திற்கும், தனது பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லை என கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் சகோதரி விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், கவினுக்கும், தனக்கும் நடந்தது யாருக்கும் தெரியாது என்று கூறிய அவர், தங்களை பற்றி தவறாக பேச வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். இது தவிர, இந்த சம்பவத்தில் தனது பெற்றோருக்கு தண்டனை வழங்குவது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.
-
Jul 31, 2025 13:17 IST
நெல்லை ஆணவக்கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சி.பி.சி.ஐ.டி
நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் உத்தரவிட்ட நிலையில், சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பெற்றுக் கொண்ட சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி ராஜ்குமார் இந்த வழக்கு குறித்து, பாளையங்கோட்டை உதவி காவல் ஆணையர் சுரேஷ் உடன் ஆலோசனை நடத்தினார்.
-
Jul 31, 2025 13:10 IST
கவின் ஆணவக் கொலை: சுர்ஜித்தின் தாயை கைது செய்வதில் தயக்கம் ஏன் - திருமாவளவன் கேள்வி
வி.சி.க. தலைவர் திருமாவளவன்: “நெல்லையில் நடைபெற்ற ஆணவக்கொலை சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இந்த வழக்கில் பிரதான குற்றவாளியான சுர்ஜித்தின் தாயின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் (FIR) இடம்பெற்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய காவல்துறை தயங்குவது ஏன் என தெரியவில்லை. தேசிய அளவில் ஆணவக்கொலை தடுப்புச்சட்டம் இயற்றப்பட வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு இந்தக் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாடு உட்பட பிற மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை” என்று கூறினார்.
-
Jul 31, 2025 12:46 IST
திருப்பூரில் 1-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் கைது
திருப்பூர் மாவட்டத்தில், முதலாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், ஜெய் என்ற வடமாநில இளைஞர் இன்று காலை கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெற்றோர், குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி, அந்தப் பள்ளியை முற்றுகையிட்டுத் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
Jul 31, 2025 11:45 IST
அன்புமணி மீது நடவடிக்கை தேவையில்லை - ராமதாஸ்
யார் என்ன நடைபயணம் போனாலும் எந்தப் பயனும் இல்லை. அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தேவையில்லாதது. பாமகவில் ஒரே தலைமை தான். பாமகவின் வேரும் வியர்வையும் தைலாபுரத்தில் தான் உள்ளது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
-
Jul 31, 2025 10:55 IST
கோவை குண்டு வெடிப்பு வழக்கு - டெய்லர் ராஜாவிடம் விசாரணை
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் டெய்லர் ராஜாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சாதிக் அலி எனும் டெய்லர் ராஜாவை மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா கடந்த 9ம் தேதி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்
-
Jul 31, 2025 10:46 IST
பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; அசாம் இளைஞர் கைது
திருப்பூரில் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த அசாம் இளைஞர் ஜெய் கைது செய்யப்பட்டுள்ளார்
-
Jul 31, 2025 10:24 IST
கவின் தந்தை திட்டவட்டம்
கொலையாளி சுர்ஜித்தின் தாயான காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ண குமாரியை கைது செய்தால் தான் கவின் உடலை வாங்குவேன் என கவின் தந்தை சந்திரசேகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
Jul 31, 2025 09:57 IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி
ஒகேனக்கலில் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 43,000 கன அடியாகக் குறைந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 57,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி குறைந்துள்ளது.
இதன் காரணமாக, கடந்த ஆறு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரிசல் இயக்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், ஆற்றில் குளிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
Jul 31, 2025 09:37 IST
கனிமொழி எம்.பி. பேட்டி
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த பின் கனிமொழி எம்.பி. பேட்டியளித்தார்
Video: Sun News
#Watch | "கவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும்"
— Sun News (@sunnewstamil) July 31, 2025
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த பின் கனிமொழி எம்.பி. பேட்டி.#SunNews | #KavinSelvaganesh | #NellaiCase | @KanimozhiDMK pic.twitter.com/BsHLjhA2Yh -
Jul 31, 2025 09:07 IST
1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
திருப்பூரில் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பள்ளியில் பாலியல் தொல்லை அளித்த அசாம் மாநில இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jul 31, 2025 09:07 IST
கவினின் தந்தைக்கு நயினார் நாகேந்திரன் ஆறுதல்
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட IT ஊழியர் கவினின் தந்தை சந்திரசேகரை சந்தித்து ஆறுதல் கூறினார் நயினார் நாகேந்திரன்
-
Jul 31, 2025 09:07 IST
டெல்டா மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 முதல் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, ஒருசில இடங்களில் இன்று (ஜூலை 31) முதல் ஆகஸ்ட் 5 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஆகஸ்ட் 2-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளிலும், 3-ம் தேதி கடலூர். விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் -
Jul 31, 2025 09:06 IST
தண்ணீர் தொட்டியில் விழுந்த ஆண் காட்டு யானை உயிரிழப்பு
கோவை காருண்யா நகர் அருகே 25 அடி தண்ணீர் தொட்டியில் விழுந்த ஆண் காட்டு யானை உயிரிழந்தது. தனியார் தோட்டத்திற்குள் அதிகாலை 3 மணியளவில் புகுந்த 10 வயது ஆண் காட்டு யானை, அங்கிருந்த கைவிடப்பட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை பொக்லைன் மூலம் மீட்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.