Coimbatore, Madurai, Trichy News: கிருஷ்ணகிரியில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து - 3 பேர் பலி

Coimbatore, Madurai, Trichy News Live- 20 July 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 20 July 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kri accident

முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை

Advertisment

நடப்பாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை. அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 22,500 கன அடியிலிருந்து 31,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

  • Jul 20, 2025 18:58 IST

    கிருஷ்ணகிரி அருகே 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு

    கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Jul 20, 2025 17:32 IST

    புதுக்கோட்டையில் குழந்தையை கடித்த குரங்கு

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தீதான்விடுதி கிராமத்தில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 6 மாத குழந்தையை குரங்கு கடித்ததில் தலையில் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு சுக்கிரன் விடுதி கிராமத்திலும் குழந்தையை குரங்கு கடித்தது.



  • Advertisment
    Advertisements
  • Jul 20, 2025 16:53 IST

    மகனை மீட்க கோரிக்கை

    ரஷ்யாவுக்கு படிக்க சென்ற மகனை கட்டாயப்படுத்தி உக்ரைன் போரில் ஈடுபடுத்த முயல்வதாக கடலூரை சேர்ந்த பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். தடை செய்யப்பட்ட பொருட்களை டெலிவரி செய்த வழக்கில் சிக்கி சிறைவாசம் அனுபவித்து வருவதாக மாணவன் ஆடியோ வெளியிட்ட நிலையில் மகனை மீட்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Jul 20, 2025 16:51 IST

    கணவன் போக்சோவில் கைது..!

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள வெங்கநாயக்கன்பாளையம் பகுதியில் திருமணமான இரண்டே நாளில் 17 வயது சிறுமி உயிரிழந்தார். கணவன் சக்திவேலை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Jul 20, 2025 16:15 IST

    மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

    நாகை - திருப்பூண்டியில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் வீடு புகுந்து நகையை பறித்த கும்பல் மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்துச் சென்றது. 



  • Jul 20, 2025 16:13 IST

    ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 32,000 கன அடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு - மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



  • Jul 20, 2025 16:11 IST

    சேலத்தில் நாளை தவெக கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

    சேலத்தில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த்  தலைமையில் மாநில அளவிலான கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் மைதானத்தில் நடைபெறும் என தவெக அறிவித்துள்ளது.



  • Jul 20, 2025 15:34 IST

    தூங்கிக் கொண்டிருந்த 6 மாத குழந்தையை கடித்த குரங்கு

    புதுக்கோட்டை அருகே தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 6 மாதக் குழந்தையை குரங்கு கடித்ததால், தலையில் பலத்த காயம் அடைந்துள்ளது. காயமடைந்த குழந்தை அரசு மருத்துவமனையில் அனுமதி. அப்பகுதியில் குரங்குகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர். 



  • Jul 20, 2025 14:50 IST

    ரஷ்யா படிக்க சென்ற மருத்துவ மாணவரை பொய் வழக்கு போட்டு உக்ரைன் போருக்கு அனுப்ப அந்நாட்டு போலிசார் தீவிரம்!

    ஸ்ரீமுஷ்ணம் அருகே ரஷ்யா படிக்க சென்ற மருத்துவ மாணவரை பொய் வழக்கு போட்டு உக்ரைன் போருக்கு அனுப்ப அந்நாட்டு போலிசார் தீவிரம். மாணவன் ஆடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகனை மீட்க அரசுக்கு பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.



  • Jul 20, 2025 14:00 IST

    தமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி, தூத்துக்குடியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • Jul 20, 2025 13:38 IST

    ஜூலை 22, 23 தேதிகளில் திருப்பூரில் கள ஆய்வு செய்ய மு.க. ஸ்டாலின் திட்டம்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூலை 22 மற்றும் 23 தேதிகளில் திருப்பூரில் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். சென்னை, கோவையில் இருந்து திருப்பூருக்குச் சென்று பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 22-ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு புறப்படுகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருப்பூர் செல்லும் அவர், திருப்பூரில் வேலம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.



  • Jul 20, 2025 13:21 IST

    சைபர் கிரைம் காவலர்கள் கேள்விக்கு படுக்கையில் படுத்தப்படி பதில் அளித்த மதுரை ஆதீனம்

    மதுரையில் உள்ள ஆதீன மடத்தில் சென்னை சைபர் கிரைம் காவலர்கள் விசாரணை நடத்தினர்; தன்னை கார் ஏற்றி கொல்ல முயற்சி நடந்ததாக மதுரை ஆதீனம் குற்றம்சாட்டியிருந்தார்; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அது பொய் என தெரியவந்ததால் ஆதீனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், மதுரை ஆதினத்திடம் சென்னை சைபர் கிரைம் போலீஸ் விசாரணையைத் தொடங்கியது. அப்போது, ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்ததால் படுக்கையில் படுத்த நிலையில் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.



  • Jul 20, 2025 11:53 IST

    சுவாமிமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்

    ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள், சுமார் இரண்டு கிலோமீட்டர் வரை நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். முருகப்பெருமான் தங்க கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை உதவி ஆணையர் உமாதேவி மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

     

     



  • Jul 20, 2025 11:36 IST

    மதுரை ஆதீனத்திடம் போலீசார் தீவிர விசாரணை

    கார் விபத்து விவகாரத்தில் மத ரீதியான மோதல் ஏற்படுத்தும் விதமாக பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரை உள்ளே நுழைய விடாமல், பாஜகவினர் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆதீன ஊழியர்கள் தவிர யாரும் இங்கே இருக்கக் கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளே சென்றனர்.



  • Jul 20, 2025 11:31 IST

    சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே டயர் வெடித்ததில் நிலைதடுமாறிய கார், சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jul 20, 2025 11:21 IST

    மனைவியை குத்தி கொலை செய்த கணவனுக்கு வலை

    குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கணவர் விஷ்ருத் என்பவரை போலீசார் வலைவீசீ தேடி வருகின்றனர். நேற்று இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மனைவி ஷ்ருதியை கடுமையாகத் தாக்கியதில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை ஷ்ருதியை சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்



  • Jul 20, 2025 10:58 IST

    நத்தம் அருகே பிரம்மாண்ட மீன்பிடித் திருவிழா

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கருத்தலக்கம்பட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. பொதுமக்களுக்கு மீன் குஞ்சுகள் உள்ளிட்ட 1 கிலோ முதல் 10 கிலோ எடை வரை மீன்கள் கிடைத்தன. கிடைத்த மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

     

     



  • Jul 20, 2025 10:54 IST

    குற்றாலம் சாரல் திருவிழா இன்று தொடக்கம்

    தொடர்மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது இந்த சூழலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குற்றால சாரல் திருவிழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது.



  • Jul 20, 2025 10:42 IST

    டெய்லர் ராஜாவிடம் போலீசார் தீவிர விசாரணை

    கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஆர்.எஸ்.புரம் உட்பட பல்வேறு இடங்களில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கோவையை சேர்ந்த சாதிக் என்ற டெய்லர் ராஜாவை கடந்த 9-ந் தேதி கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் கைது செய்தனர்.

     



  • Jul 20, 2025 10:33 IST

    மேட்டூர் அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை

    இந்த ஆண்டில்,மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை மூன்றாவது முறையாக எட்டியுள்ளதால், காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உபரி நீர் போக்கி பாதையில் உள்ள தகமாபுரி பட்டினம், அண்ணா நகர், பெரியார் நகர், புது பாலம்,தொட்டில்பட்டி பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வருவாய்த் துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

     



  • Jul 20, 2025 10:32 IST

    குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

    தென்காசி மாவட்டத்தில் பழைய குற்றாலம் மற்றும் புலியருவியில் மட்டும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிகளில் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது. இன்று விடுமுறை நாள் என்பதாலும் பழைய குற்றாலம், புலியருவியில் நீர்வரத்து சற்று குறைந்து காணப்படுவதாலும் காலை 9 மணி நிலவரப்படி இந்த 2 அருவிகளில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்க அனுமதி இல்லை.



  • Jul 20, 2025 10:22 IST

    ஆட்சியில் பங்கு கொடுக்க ஏமாளி அல்ல: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

    ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல, கூட்டணி குறித்து அதிமுகவிற்கு எந்த கவலையும் இல்லை. அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்

     - வேதாரண்யத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் 



  • Jul 20, 2025 09:13 IST

    மருத்துவமனைக்குள் புகுந்து பெண் குத்திக் கொலை

    கரூர், குடும்பத்தகராறில் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த மனைவி குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.



  • Jul 20, 2025 09:12 IST

    சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்

    கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் சூரிய உதயத்தை காண ஆயிரகணக்கான மக்கள் கடற்கரை அருகே திரண்டனர்.



  • Jul 20, 2025 09:12 IST

    பூனை காப்பாற்ற கிணற்றுக்குள் இறங்கிய முதியவர் உயிரிழப்பு

    ஈரோடு சூரம்பட்டி பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த பூனை காப்பாற்ற கிணற்றுக்குள் இறங்கிய முதியவர் கணேசன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டனர்.



  • Jul 20, 2025 09:11 IST

    6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம்



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: