Coimbatore, Madurai, Trichy News Highlights: கோவை வால்பாறையில் கரடி தாக்கி சிறுவன் உயிரிழப்பு

Coimbatore, Madurai, Trichy News Live updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tpr bear

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்: இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். 700க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு வேலை இழப்பும்,  நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய்  வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. 

  • Aug 12, 2025 00:12 IST

    கோவை வால்பாறையில் கரடி தாக்கி சிறுவன் உயிரிழப்பு

    கோவை, வால்பாறை அருகே வேவர்லி எஸ்டேட்டில் வடமாநில தொழிலாளரின் 8 வயது மகன் கரடி தாக்கி மரணமடைந்த நிலையில், கரடி நடமாட்டத்தால் அச்சமடைந்த தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் கரடியை பிடிக்க கோரி வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



  • Aug 11, 2025 20:08 IST

    தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு

    தமிழ்நாட்டில் தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த சரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தெரு நாய்கள் கடிப்பதால் முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது. சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களால், தமிழ்நாடு முழுவதும் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.



  • Advertisment
  • Aug 11, 2025 19:07 IST

    மர்ம மரணம் - வட மாநில தொழிலாளிகள் கைது 

    பழனியை அடுத்த தும்பலபட்டி கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் சரவணன் (23) என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் அங்கு வேலை செய்யும் புலம் பெயர் தொழிலாளி சிறுமி உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட மாநிலத்தைச் சேர்ந்த கோபால் மற்றும் அவரது இரு மகள்கள் (வயது 14, 16) அங்கு வேலை செய்யும் நிலையில், 16 வயது சிறுமி சரவணனை கொலை செய்துள்ளதும் கோபால் மற்றும் மற்றொரு சிறுமி இதனை மறைக்க உதவி செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது



  • Aug 11, 2025 18:51 IST

    நெல்லை ஆணவக் கொலை வழக்கு - சுர்ஜித்தை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

    நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித், அவரது தந்தை எஸ்.ஐ. சரவணனை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுர்ஜித், தந்தை சரவணனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சுர்ஜித், அவரது தந்தை சரவணனை 2 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நெல்லை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நெல்லை ஆணவக் கொலை வழக்கில் கைதாகி சுர்ஜித், அவரது தந்தை சரவணன் பாளையங்கோட்டை சிறையில் உள்ளனர்.



  • Advertisment
    Advertisements
  • Aug 11, 2025 18:50 IST

    ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் பலி - திருவாரூரில் சோகம் 

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கீழ்குடியில் புத்தாற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்தனர். நாட்டார் ஆற்றில் குளித்தபோது 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. நன்னிலம் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கினர்.



  • Aug 11, 2025 17:12 IST

    தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது: ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் வாதம்

    தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது என்று ஐகோர்ட் மதுரை கிளையில் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் 3வது நீதிபதி விஜயகுமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிக்கந்தர் மலை என்று அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?.ஆடு, கோழி பலியிடுவதற்கு, கந்தூரி நடத்துவதற்கு அனுமதி உண்டா. நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி இருக்கிறதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். நீதிபதியின் கேள்விகளுக்கு வருவாய் ஆவணங்களுடன் அரசு தரப்பில் ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது. தீட்டு என்பது ஜாதியிலோ, மதத்திலோ, மனிதர்களுக்கு உள்ளேயோ இருக்கக் கூடாது என்று அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. ஒன்றிய தொல்லியல்துறை தரப்பு வாதங்களுக்காக வழக்கை ஆகஸ்ட்.13க்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டது.



  • Aug 11, 2025 15:51 IST

    சாதிப் பெயரைக் கூறித் திட்டியவரின் கட்டை விரலைக் கடித்த இளைஞர் உட்பட இருவர் கைது.

    நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி அருகே பந்தல் போடும் வேலையில் சம்பளத் தகராறு ஏற்பட சாதிப் பெயரைக் கூறித் திட்டியவரின் கட்டை விரலை இளைஞர் கடித்து துப்பினார். திட்டிய ஆரோன் ராஜ் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைதான நிலையில் விரலை கடித்த முத்துவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

     



  • Aug 11, 2025 15:21 IST

    தி.மலை மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.3 கோடி மோசடி

    திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.3 கோடி மோசடியில் ஈடுபட்டதாக வங்கியின் மேலாளர் விஜயலட்சுமி உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கவரிங் நகைகளை வைத்து பணம் பெற்ற 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Aug 11, 2025 14:41 IST

    கவின் ஆணவக்கொலை வழக்கு - விசாரணை சற்று நேரம் ஒத்திவைப்பு

    நெல்லை ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கு - கைதான மகன், தந்தை இருவரும் சிபிசிஐடி விசாரணைக் காவலில் செல்ல மறுப்பு. கைதான சுர்ஜித், சஸ்பெண்ட் ஆன எஸ்.ஐ. சரவணன் இருவரும் இன்று நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் விசாரணைக் காவலில் எடுக்க சிபிசிஐடி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், விசாரணைக் காவலில் அனுப்பக் கூடாது என இருவர் தரப்பில் கோரிக்கை இதனால், சற்று நேரம் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 



  • Aug 11, 2025 14:40 IST

    சிறுமியை காரில் கடத்தியதாக வெளியான தகவல் தவறானது

    மானாமதுரை அருகே சிறுமியை 6 நபர்கள் காரில் கடத்தியதாக இன்று காலை வெளியான செய்திகள் தவறானவை - சிவகங்கை மாவட்ட காவல்துறை அறிக்கை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததுடன், சிறுமியிடம் விரிவான விசாரணை நடத்தியதில் அப்படி எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



  • Aug 11, 2025 14:38 IST

    பள்ளி மாணவி மீது பைக் மோதிய சிசிடிவி காட்சி

    புதுக்கோட்டையில் பள்ளி முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிய மாணவி மீது வேகமாக மோதிய பைக், நிற்காமல் சென்றது. சைக்கிளை போட்டுவிட்டு சக மாணவிகள்  ஓடிப்போய் காப்பாற்றினர். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியானது.



  • Aug 11, 2025 14:08 IST

    5 மாவட்டங்களில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு

    விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் நீலகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நீலகிரி மாவட்டங்களுக்கு ஆக.13ம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     



  • Aug 11, 2025 13:37 IST

    அ.தி.மு.க-வின் 2026 தேர்தல் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும் - மு.க.ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அ.தி.மு.க-வின் 2026 தேர்தல் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கப் போகிறது. எடப்பாடி பழனிசாமி எந்த தைரியத்தில் இங்கிருந்து ட்தொடங்கினர் எனத் தெரியவில்லை. மேற்கு மண்டலத்தில் அதிக திட்டங்களைக் கொண்டுவந்தது நமது திராவிட மாடல் ஆட்சிதான்” என்று பேசினார்.



  • Aug 11, 2025 13:28 IST

    தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூ, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (11.08.2025) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • Aug 11, 2025 13:25 IST

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் உருவாக்கிய தலைவர்கள் சிலைகளை திறந்து வைத்தார் ஸ்டாலின் 

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தை உருவாக்கிய தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திட்டப் பணியின்போது உயிர்நீத்த தொழிலாளர்களுக்கான நினைவு அரங்கமும் திறந்து வைத்தார்.



  • Aug 11, 2025 13:18 IST

    நீராறு, நல்லாறு, ஆணைமலையாறு திட்டம் விரைவில்... செயல்படுத்தப்படும் - மு.க. ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    நீராறு, நல்லாறு, ஆனைமலையாறு என்ற கனவுத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

    பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன வாய்க்கால்களை தூர்வார ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மாணவர்கள், இளைஞர்களுக்காக ரூ.9 கோடியில் நவீன நூலகம் அமைக்கப்படும்.

    ரூ.5 கோடியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.

    தாரபுரம் வட்டத்தில் நஞ்சைபாளையம்ப உப்பாற்றின் குறுக்கே ரூ.7 கோடியில் புதிய தடுப்பணை.

    ஊத்துக்குளியில் வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.

    அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறப்பது குறித்து வல்லுநர் குழு அமைக்கப்படும்.



  • Aug 11, 2025 11:48 IST

    பள்ளியின் முன் மாணவியை கடத்த முயற்சி

    சிவகங்கை, மானாமதுரை அருகே பள்ளிக்கூடத்தின் வாசலில் மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்த முயற்சி. காரில் இருந்து வெளியே குதித்து தப்பிய பள்ளி மாணவி, காயங்களுடன் மானாமதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவியை கடத்த முயன்ற கும்பல் தப்பியோடியது. சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Aug 11, 2025 11:09 IST

    திருப்பூர் மாவட்டத்திற்கு 7 புதிய அறிவிப்புகள்

    திருப்பூர் மாவட்டத்திற்கு 7 புதிய அறிவிப்புகளை பொதுமக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்



  • Aug 11, 2025 10:30 IST

    ஸ்டாலின் கோவை நிகழ்ச்சி நிரல் விவரம்

    கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, நீர்வளத் துறை அலுவலக வளாகத்தில் இன்று (11.08.2025) திங்கட்கிழமை காலை 11.45 மணியளவில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டம் உருவாக்கியவர்களின் திருவுருவச் சிலைகள் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டப் பணிகளின் போது உயிர்நீத்த தொழிலாளர்களுக்கான நினைவு அரங்கம், ஆகியவற்றை மு. க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    மேலும், பொள்ளாச்சி நீர்வளத் துறை அலுவலக வளாகத்திற்கு 'சி.சுப்பிரமணியம் வளாகம்' மற்றும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரங்கங்களுக்கு 'வி.கே.பழனிசாமி கவுண்டர் அரங்கம்', 'பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அரங்கம்' எனப் பெயர்கள் சூட்டுகிறார்.



  • Aug 11, 2025 10:23 IST

    ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு

    திருப்பூர், உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திடலுக்கு மக்களை சந்தித்தபடியே சாலை மார்க்கமாக சென்ற மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    Video: Sun News



  • Aug 11, 2025 09:27 IST

    சாத்தூர் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு

    சாத்தூர் அருகே விஜயகரிசல்குளத்தில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாரியம்மாள்(44) இன்று உயிரிழந்தார்.



  • Aug 11, 2025 09:14 IST

    ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

    இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு வேலை இழப்பு. நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய்  வருவாய் இழப்பு ஏற்படும்.

     



  • Aug 11, 2025 09:14 IST

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும்

    தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், வரும் 16ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     



  • Aug 11, 2025 09:14 IST

    பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு - குளிக்கத் தடை

    தொடர் மழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாள் என்பதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில் மழை பெய்தின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அதிகாரிகள் தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்

     



  • Aug 11, 2025 09:13 IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,766 கனஅடியாக குறைந்தது

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,200 கனஅடியில் இருந்து 8,766 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 118.200 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 90.628 டி.எம்.சி.யாக உள்ளது.

     



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: