Coimbatore, Madurai, Trichy News Highlights: விநாயகர் சதுர்த்தி விழா - பிள்ளையார்பட்டியில் தேரோட்டம் தொடக்கம்

Coimbatore, Madurai, Trichy News Live- 26 August 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 26 August 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pillaiyaar patti

ஈரோட்டில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் தொடக்கம்: அக்னிவீர் திட்டத்தில் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் தொடக்கம், ஈரோட்டில் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை ஆகியவை அதிகாலை முதல் தொடங்கின.

Advertisment

11 மாவட்டங்களில் இருந்து எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு இன்று முதல் வரும் செப். 7ம் தேதி வரை உடற்தகுதித் தேர்வு நடக்க உள்ளது. கூடுதல் எஸ்.பி. தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

  • Aug 26, 2025 18:56 IST

    அரவக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்: ஸ்டாலின் இரங்கல்

    அரவக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ. கலிலூர் ரகுமான் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கலிலூர் ரகுமான் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். கலிலூர் ரகுமானின் மறைவு சிறுபான்மை மக்களுக்கு பேரிழப்பாகும்; தனது சிறந்த பணியால் தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர் கலிலூர் ரகுமான் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். 



  • Aug 26, 2025 18:49 IST

    விநாயகர் சதுர்த்தி விழா - பிள்ளையார்பட்டியில் தேரோட்டம் தொடக்கம் 

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டியில் தேரோட்டம் தொடங்கியது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே, பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர்கோயிலில், விநாயகர் சதுர்த்தி திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி ஊர்வலம் வந்து அருள்பாலித்தார். கடந்த 23ம் தேதி அசுரனை வதம் செய்யும் கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது. விழாவின் 9ம் நாளான இன்று மாலை தேரோட்டம் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோயிலில் இருந்து கற்பக விநாயகர் திருத்தேரில் எழுந்தருளினார்.

    மூலவருக்கு பக்தர்கள் அருகம்புல் மாலை அணிவித்தும், அர்ச்சனை செய்தும் வழிபட்டனர். ஆண்டுக்கு ஒருமுறை விநாயகர் சதுர்த்தி விழாவில் மட்டும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியளிப்பார். அதன்படி இரவு 10 மணி வரை சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியளிக்க உள்ளார். மாலை 4.40 மணியவில் தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, பெரிய தேரில் விநாயகரும், சிறிய தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளுனார். சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுப்பது சிறப்பு. இரவில் சுவாமி யானை வாகனத்தில் வீதி உலா வருவார். விழாவின் 10வது நாளான நாளை (ஆக.27) காலை 9.30 மணியளவில் கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொளுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெறும். நாளை இரவில் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்



  • Advertisment
    Advertisements
  • Aug 26, 2025 18:39 IST

    நெல்லை ஆணவக் கொலை - சுர்ஜித், தந்தை சரவணனுக்கு காவல் நீட்டிப்பு 

    நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித், தந்தை சரவணனுக்கு செப்டம்பர் 9 வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலனுக்கும் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

     



  • Aug 26, 2025 18:21 IST

    மதுரை: மனைவிக்கு புகைப்படத்திற்கு  பதில் மதுபாட்டில்!

    மதுரை மாவட்டம் சின்னபூலாம்பட்டியில்  சேந்த தங்கவேல் என்பவரின் ரேஷன் கார்டில் அவர் மனைவியின் புகைப்படத்துக்கு பதில் மதுபாட்டில் படம் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான மகளின் பெயரை நீக்கியதை அடுத்து, இந்தப் புகைப்படம் மாற்றப்பட்டு விட்டதாக தங்கவேல் குற்றம் சாட்டியுள்ளார். 



  • Aug 26, 2025 17:41 IST

    6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இரவு 7 மணி வரை 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.



  • Aug 26, 2025 17:06 IST

    சேலம் - அலையன்ஸ் விமான சேவை ரத்து

    சேலம் விமான நிலையத்தில் இருந்து அலையன்ஸ் விமானங்களின் சேவை அனைத்தும் இன்று ரத்து செய்யப்படுகிறது. விமான பயணத்துக்காக முன்பதிவு செய்தோருக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் என அலையன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.



  • Aug 26, 2025 16:46 IST

    புலி நடமாட்டம் - பிரம்மாண்ட கூண்டு வைப்பு

    கூடலூரில் 13 பசு மாடுகளை வேட்டையாடி போக்கு காட்டும் புலியை 30 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட கூண்டு வைத்து பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  30-க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு நடக்கிறது.



  • Aug 26, 2025 16:45 IST

    உடைந்து விழுந்த சீலிங்

    சேலம் கோட்டை பகுதியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பேட்மிண்டன் அரங்கின் சீலிங் உடைந்தது. பந்தை எடுக்க சென்ற 6ஆம் வகுப்பு மாணவன் ஸ்ரீநிவினுக்கு கை, காலில் பலத்த காயமடைந்தார்.



  • Aug 26, 2025 16:43 IST

    கவின் ஆணவக் கொலை வழக்கு - செப். 9ம் தேதி வரை நீதிமன்ற காவல்

    நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன், சகோதரர் ஜெயபாலன் ஆகிய மூவருக்கும் செப். 9ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.



  • Aug 26, 2025 16:13 IST

    பாலியல் வழக்கு - பொள்ளாச்சி ஜெயராமன் பெயரை பயன்படுத்த தடை

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமனை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துக்களை தெரிவிக்க இடைக்கால தடை.  வழக்கில் தங்களை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட யூடியூப் சேனல்களுக்கு தடைவிதிக்க கோரி பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு. 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்கால தடை  விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019-ல் நடந்த சம்பவம் தொடர்பான வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் ஆகியோரை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துக்களை தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 



  • Aug 26, 2025 16:08 IST

    ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டனர். எல்லை தாண்டியதாக கடந்த 9-ஆம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கபப்ட்டுள்ளது. 6 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் இந்திய மதிப்பில் தலா ரூ.87,000; ஒருவருக்கு ரூ.14,500 அபராதம் விதித்தது. பறிமுதல் செய்யப்பட்ட படகு தொடர்பான விசாரணைக்கு 2026 ஜனவரி 22-ஆம் தேதி உரிமையாளர் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.



  • Aug 26, 2025 16:07 IST

    அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் தங்கம் தென்னரசு

    காரியாபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். முகாம் நடக்கும் இடத்தில் முறையான ஏற்பாடுகள் செய்யாத அதிகாரிகளை அமைச்சர் கண்டித்தார். உங்களுடன் ஸ்டாலின் முகாமை கோயிலில் நடத்திய அதிகாரிகளை தங்கம் தென்னரசு எச்சரித்தார். மக்களுக்கு சிரமம் இல்லாமல் மனுக்களை தருவதற்கு சரியான இடத்தை தேர்வு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.



  • Aug 26, 2025 15:43 IST

    சாத்தூர் அருகே பட்டாசு கழிவுகள் வெடித்துச் சிதறி விபத்து

    சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் பட்டாசு கழிவுகள் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது. தனியார் பட்டாசு ஆலை அருகே கொட்டப்பட்டிருந்த கழிவுகள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக வெப்பத்தால் பட்டாசு கழிவுகள் வெடித்து பல கி.மீ. தூரத்துக்கு சத்தம் கேட்டதால் மக்கள் பீதியடைந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



  • Aug 26, 2025 12:54 IST

    ஆம்பூர் கலவர வழக்கு - தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு

    கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ஆம்பூர் கலவரம் தொடர்பான வழக்கில் 177 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில் தீர்ப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பு தேதி வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. காலை முதல் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூரில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.



  • Aug 26, 2025 12:09 IST

    கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்



  • Aug 26, 2025 12:01 IST

    உச்ச நீதிமன்றம் உத்தரவு

    திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டல் குழுமம் குத்தகை பாக்கியில் ரூ.20 கோடியை தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.



  • Aug 26, 2025 11:58 IST

    2 டன் எடையுள்ள ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

    சட்டவிரோதமாக  கேரளாவிற்கு சேலத்திலிருந்து கோவை வழியே கொண்டு செல்லப்பட்ட, 2 டன் 15,000 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்த மதுக்கரை தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     



  • Aug 26, 2025 11:56 IST

    வடமாநில இளைஞர் தற்கொலை

    கோவை அரசு மருத்துவமனையின் கழிவறையில் வடமாநில இளைஞர் துய்ப்பில் வரலா (22) உயிரை மாய்த்துக்கொண்டார். தொடர் தலைவலிக்கு சிகிச்சை பெற சென்ற போது விபரீத முடிவு எடுத்துள்ளார்.



  • Aug 26, 2025 11:11 IST

    தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை உயர்வு

    ஓணம் பண்டிகை தொடக்கம் மற்றும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.400க்கு விற்பனையான பிச்சிப்பூ இன்று ரூ.1000 ஆக விற்பனை. மல்லிகை, அருகம்புல், கேந்தி என அனைத்துப் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.



  • Aug 26, 2025 10:45 IST

    மதுரையில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மாட்டுத்தாவணி மலர் சந்தையில், ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2,500, முல்லை பூ ரூ.1,000, செவ்வந்தி ரூ.1,000, பிச்சிப் பூ ரூ.1,000, கனகாம்பரம் ரூ.1,000, அரளி ரூ.600 மற்றும் பட்டன் ரோஸ் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.



  • Aug 26, 2025 09:26 IST

    கோவையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக பணம் கேட்டு மிரட்டிய மூவர் கைது

    கோவையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக பணம் கேட்டு மிரட்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சரவணம்பட்டியில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்களிடம் பணம் கேட்டபோது பீகாரை சேர்ந்த விஜய்குமார் ராய் வெறும் ரூ.51 கொடுத்தார் என அசோக், திலீப், தினேஷ் ஆகிய 3 பேர் அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து விஜய்குமார் ராய் அளித்த புகாரின்பேரில் 3 பேரை கைது செய்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Aug 26, 2025 09:20 IST

    களைகட்டிய சந்தைகள்

    நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை ஒட்டி மாநிலம் முழுவதும் சந்தைகள் களைகட்டியது. பூ, பழங்கள், தோரணங்கள், பொரி உள்ளிட்டவற்றை வாங்க மக்களும், வியாபாரிகளும் குவிந்ததால் விற்பனை அமோகமாக நடைபெற்றது.



  • Aug 26, 2025 09:19 IST

    காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் - கடலூரில் தொடங்கி வைத்த அமைச்சர் சி.வெ.கணேசன்

    கடலூர் மாவட்டம் விருதாச்சலம் டேனிஷ் மிஷன் நடுநிலைப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: