Coimbatore, Madurai, Trichy News Live: கோபி கொடிவெரி அணையில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

Coimbatore, Madurai, Trichy News Live- 25 August 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 25 August 2025- கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kodiveri dam

ஆம்புலன்ஸை தாக்கிய அ.தி.மு.க.வினர் - பரபரப்பு: திருச்சி மாவட்டம் துறையூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அ.தி.மு.க.வினர் தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. எடப்பாடி வருகைக்காக துறையூரில் காத்திருந்த அ.தி.மு.க.வினர், அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸுை தடுத்து நிறுத்தி கதவை திறந்து ஓட்டுநரை தாக்க பாய்ந்ததால் ஏற்பட்டது. அவசர சிகிச்சைக்காக நோயாளி ஒருவர் உள்ளே இருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் எனவும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விளக்கியுள்ளார். ஆனால், அதற்கு செவிசாய்க்காத சிலர், ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அவரைத் தாக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Aug 25, 2025 19:34 IST

    கோபி கொடிவெரி அணையில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

    பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு குறைந்ததால், கோபி கொடிவெரி அணையில் 7 நாட்களுக்குப் பிறகு நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Aug 25, 2025 19:29 IST

    விளையாட்டு துறையில் சாதித்தால் முன்னேறலாம்: ராணிப்பேட்டை அதிமுக செயலாளர்

    வாலாஜா சாத்தம்பாக்கத்தில் நடைபெற்ற வட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.20ஆயிரம் வழங்கிய ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார், இளைஞர்கள் போதை பழக்கத்தை கற்றுக்கொள்ளாமல் விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் காட்டுங்கள் என வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.



  • Advertisment
  • Aug 25, 2025 18:49 IST

    சிறப்பு புலனாய்வுகுழு அமைப்பு

    கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.  வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.



  • Aug 25, 2025 18:48 IST

    4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Aug 25, 2025 18:02 IST

    108 அவசர ஊர்தி ஓட்டுநர்கள் பாதுகாப்பு வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல்

    108 அவசர ஊர்தி ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இருளாண்டி மனு தாக்கல் செய்தார். 



  • Aug 25, 2025 17:20 IST

    துக்க நிகழ்வுக்கு சென்று திரும்பிய போது விபத்து - 10க்கும் மேற்பட்டோர் காயம்

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே செவ்வேரி என்ற பகுதியில் வளைவில் திரும்பிய லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துக்க நிகழ்வுக்கு சென்று திரும்பிய போது விபத்து நடந்துள்ளது. 



  • Aug 25, 2025 16:54 IST

    பாம்பன் மீனவர்கள் 10 பேருக்கு காவல் நீட்டிப்பு - இலங்கை நீதிமன்றம் உத்தரவு 

    பாம்பன் மீனவர்கள் 10 பேருக்கு செப்டம்பர் 1 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பன் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.



  • Aug 25, 2025 16:29 IST

    தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் - ஓட்டுநர் கைது

    கடலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் தனியார் பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்திற்கு ஓட்டுநரே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருக்கிறது. பள்ளி வேன் கவிழ்ந்ததில் 8 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



  • Aug 25, 2025 15:57 IST

    துறையூரில் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் - அ.தி.மு.க-வைச் சேர்ந்த 14 பேர் மீது வழக்கு 

    திருச்சி துறையூரில் அதிமுக கூட்டத்தின்போது ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக 14 பேர் மீது கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துறையூர் நகரச் செயலாளர், நகரமன்ற உறுப்பினர், வடக்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 14 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

     



  • Aug 25, 2025 15:40 IST

    மதுரையில் இருந்து துபாய் புறப்பட்ட விமானம் இயந்திரக் கோளாறு

    மதுரையில் இருந்து இன்று நண்பகல் 12.20 மணிக்கு துபாய் புறப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானம், இயந்திரக் கோளாறு காரணமாக புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 160-க்கும் மேற்பட்ட பயணிகள் பல மணி நேரமாக விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.



  • Aug 25, 2025 13:50 IST

    திருவாரூரில் சிறைக்காவலர் வீடு புகுந்து தாக்குதல்; தி.மு.க கவுன்சிலர் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு 

    திருவாரூரில் சிறைக்காவலர் உள்ளிட்ட 3 பேரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய புகாரில் திமுக கவுன்சிலர் புருஷோத்தமன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் சிறைக்காவலர் உள்ளிட்ட 3 வீடுகள் மீது தாக்குதல் என புகார் அளிக்கப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த சிறைத்துறை காவலர் இளங்கோ உள்ளிட்டோர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Aug 25, 2025 13:12 IST

    கிட்னி விற்பனை வழக்கு: ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் சிறப்புக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் - ஐகோர்ட் 

    கிட்னி விற்பனை வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் ஒரு சிறப்புக்குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும்; குழுவில் இடம்பெறுவர்கள் குறித்து தமிழ்நாடு டி.ஜி.பி பிற்பகல் 3 மணிக்கு மேல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை  உத்தரவிட்டுள்ளது.

    மேலும், தமிழ்நாடு முழுவதும் மனித உறுப்புகள் விற்பனை நடைபெறுகிறது. இதில் ஒரு மருத்துவர் ஒரு மருத்துவமனைக்கு மட்டும் தொடர்பு இருக்காது; முழு நெட்வொர்க்கையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சுப்ரமணியன், அருள்முருகன் தெரிவித்துள்ளனர்.



  • Aug 25, 2025 12:55 IST

    கடலூர் அருகே தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்து; ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

    கடலூர் அருகே தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் வேனை இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது



  • Aug 25, 2025 12:15 IST

    கவின் செல்வகணேஷ் குடும்பத்தார் ஸ்டாலினுடன் சந்திப்பு

    நெல்லையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் குடும்பத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது வி.சி.க தலைவர் திருமாவளவன் உடன் இருந்தார்



  • Aug 25, 2025 11:21 IST

    ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள்

    கோவை ஆவாரம்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் வைக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

    திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் ஆவாரம்பாளையத்தை கடந்த போது கற்கள் வைக்கப்பட்ட‌து தெரியவந்தது ,ரயில் சக்கரம் ஏறியதில் சிமெண்ட் கற்கள் உடைந்து சிதறியது. ரயிலை கவிழ்க்க முயற்சியா?  என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Aug 25, 2025 10:30 IST

    மாணவனை கடித்த‌ ஷூவில் இருந்த பாம்பு

    கடலூர், திட்டக்குடி அடுத்துள்ள தொழுதூரை சேர்ந்த 7ம் வகுப்பு  மாணவனை ஷூவில் இருந்த பாம்பு கடித்த‌து. உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.



  • Aug 25, 2025 09:33 IST

    தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் -6 மாணவர்கள் காயம்

    கடலூர் மாவட்டம் பூவனூரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன், ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். பொதுமக்கள் உடனடியாக வந்து வேனை தூக்கி, மாணவர்களைக் காப்பாற்றினர். வேன் கவிழ்ந்த நேரத்தில் ரயில் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.



  • Aug 25, 2025 09:25 IST

    திருச்சி: ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அ.தி.மு.க.வினர் தாக்க முயற்சி

    திருச்சி மாவட்டம் துறையூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அ.தி.மு.க.வினர் தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. எடப்பாடி வருகைக்காக துறையூரில் காத்திருந்த அ.தி.மு.க.வினர், அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸுை தடுத்து நிறுத்தி கதவை திறந்து ஓட்டுநரை தாக்க பாய்ந்ததால் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்தையும் அ.தி.மு.க.வினர் சேதப்படுத்தியதால் துறையூரில் உச்சகட்ட பதற்றம் நிலவியது. 

     



  • Aug 25, 2025 09:25 IST

    ஈரோட்டில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: நாளை தொடங்குகிறது

    இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்கள் சேர்ப்பு முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி வரை ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இருந்து அக்னிவீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர் -ஸ்டோர் கீப்பர், அக்னிவீர் டிரேட்ஸ்மேன், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.



  • Aug 25, 2025 09:23 IST

    ஆலங்குடி அருகே டிப்பர் லாரி மோதி 4 வயது குழந்தை மரணம்

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வெள்ளக்கொல்லை கிராமத்தில், 4 வயது குழந்தை சஞ்சனா, டிப்பர் லாரி மோதி உயிரிழந்தார். குழந்தை வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: