/indian-express-tamil/media/media_files/2025/07/18/miniser-2025-07-18-21-37-24.jpg)
லஞ்சம் பெற்ற அறநிலையத்துறை உதவி ஆணையர் கைது
தனியார் கோயில் வருவாய் பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டு, முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாயை பெறும் போது, கோவை அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து இந்திராவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
Jul 19, 2025 00:39 IST
வரதட்சணை கொடுமை - காவலரின் தந்தை சஸ்பெண்ட்
மதுரை வரதட்சணை கொடுமை புகார் - காவலர் பூபாலனின், தந்தை இன்ஸ்பெக்டர் செந்தில்குமரனை சஸ்பெண்ட் செய்து, மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் உத்தரவு.
-
Jul 18, 2025 21:35 IST
பள்ளி மாணவர்களுக்காக பேருந்து வசதி: அமைச்சர் சிவசங்கருக்கு மாணவி பாராட்டு
பள்ளி மாணவர்களுக்காக பேருந்து வசதி ஏற்படுத்தித் தந்த அமைச்சர் சிவசங்கர்.. தனது கோரிக்கை நிறைவேறிய மகிழ்வில் நன்றிக் கடிதம் எழுதி வந்து அமைச்சரிடம் வாசித்துக் காட்டிய மாணவி. அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட பரணம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களது ஊரிலிருந்து பள்ளிக்கு வந்து செல்லும் நேரத்தில் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என கடந்த மாதம் அமைச்சர் சிவசங்கரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக புதிய அரசுப் பேருந்து சேவையை காலை, மாலை என இரு வேளைகளிலும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.
-
Jul 18, 2025 19:50 IST
ஸ்டிக்கர் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்
ராணிப்பேட்டை மாவட்டம் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி `மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' எனும் தலைப்பில் மாவட்ட வாரியாக பயணம் மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கார், ஆட்டோ, டூவீலர்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
-
Jul 18, 2025 19:32 IST
"நேர்மைக்கு கிடைத்த பரிசு" - டி.எஸ்.பி சுந்தரேசன் கருத்து
கார் மறுக்கப்பட்டதாக புகார் அளித்த மயிலாடுதுறை டி.எஸ்.பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். "நேர்மைக்கு கிடைத்த பரிசு" என சஸ்பெண்ட் குறித்து டி.எஸ்.பி சுந்தரேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
-
Jul 18, 2025 19:09 IST
உடன்குடி அனல்மின் நிலையத்தில் 1,320 மெகாவாட் மின் உற்பத்தி
திருச்செந்தூர் உடன்குடி அனல்மின் நிலையத்தில் 1,320 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோடை காலத்துக்குள் 1320 மெகாவாட் மின் உற்பத்தி தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
Jul 18, 2025 18:58 IST
பண்ருட்டி - அ.தி.முக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் 12 மணிநேரமாக சோதனை
பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் 12 மணிநேரமாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. சத்யா பன்னீர்செல்வம் மீது தற்போது புதிய வழக்கு பதிந்து லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டுள்ளது.
2016-2021ல் பண்ருட்டி எம்.எல்.ஏ.வாக இருந்த சத்யா பன்னீர்செல்வம் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. சத்யா கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகராட்சி தலைவராக இருந்தபோது ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. பன்னீர்செல்வம் மீதான வழக்கு அடிப்படையில் 2024 பிப்.-ல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது
-
Jul 18, 2025 18:44 IST
மதுரை ஆதீனத்திற்கு முன் ஜாமீன் - என்னென்ன நிபந்தனைகள் விதிப்பு?
தனது கார் விபத்து சம்பவத்திற்கு மத ரீதியாக சாயம் பூசிய விவகாரத்தில் மதுரை ஆதீனத்திற்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஆதீனம் 60 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால் அவர் வசிக்கும் இடத்திற்குச் சென்று போலீசார் விசாரிக்கலாம். விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை சாட்சிகளை கலைக்கக் கூடாது, தலைமறைவாகக் கூடாது
மதுரை ஆதீனம் தலைமறைவானால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யலாம். ரூ.10,000 ரூபாய்க்கான இரு நபர் ஜாமினை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மதுரை ஆதீனம் தாக்கல் செய்ய வேண்டும்.
-
Jul 18, 2025 16:53 IST
சிறுமி வன்கொடுமை வழக்கு - எஸ்.பி தலைமையில் குழு அமைப்பு
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை கைது செய்ய எஸ்.பி தலைமையில் 3 டி.எஸ்.பி குழுக்கள் அமைத்து காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் நடைபெற்ற பகுதியில் பதிவான செல்போன் சிக்னல், வாகன எண்கள் ஆகியவற்றை சேகரிக்கும் பணிகள் நடைபெறுகிறது.
-
Jul 18, 2025 15:59 IST
சிறுமி வன்கொடுமை - 7 பேருக்கு ஆயுள் தண்டனை
கோவையில் 2019ம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட சென்ற 17 வயது மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 7 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
-
Jul 18, 2025 15:29 IST
பழனி முருகனுக்கு இதுவரை இல்லாதளவு தங்க காணிக்கை!
பழனியில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதில் இதுவரை இல்லாத அளவிற்கு 5,005 கிராம் தங்கம் காணிக்கையாக கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. இத்துடன் வெள்ளி 11438 கிராமும், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 1324ம் தொகையாக ரூ.2,81,16,256ம் கிடைத்துள்ளது.
-
Jul 18, 2025 15:09 IST
வரதட்சணை - கொண்டாடிய காவலர்
மதுரையில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை அப்பந்திருப்பதி காவலர் பூபாலன் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார். மனைவியை கொடுமைப்படுத்தியது குறித்து தனது சகோதரியிடம் விவரித்து மகிழ்ந்த ஆடியோ வெளியானது.
-
Jul 18, 2025 14:36 IST
சிறுமிக்கு அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் - அமைச்சர் கீதா ஜீவன்
திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி அளித்துள்ளார். குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தர காவல்துறை நடவடிக்கை எடுக்கும். தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன; சிறுமிக்கு அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
-
Jul 18, 2025 14:14 IST
பள்ளிப்பாளையம் கிட்னி விற்பனை - பகீர் தகவல்கள்
விசைத்தறி தொழிலாளர்களை மூளைச் சலவை செய்து, அவர்களின் கிட்னியை விற்று மோசடி கிட்னி விற்பனையில் ஈடுபட்டவர்கள், இடைத்தரகர்கள் தலைமறைவாகினர். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் வழங்கப்படவில்லை, கிட்னியை கொடுத்தவர்களே பிற்காலத்தில் கிட்னி புரோக்கர்களாக மாறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் வீரமணி மூலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
-
Jul 18, 2025 14:12 IST
நீலகிரி, கோவைக்கு நீடிக்கும் ஆரஞ்ச் அலர்ட்..!
நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று தொடங்கி நாளை மறுநாள் வரை 3 நாளைக்கு வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
-
Jul 18, 2025 11:58 IST
நா.த.க, த.வெ.க போன்ற கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் - இ.பி.எஸ்
அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் போன்ற ஒத்த மனநிலை கொண்ட கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
“நா.த.க, த.வெ.க போன்ற கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும். தி.மு.க-வுக்கு எதிரான மனநிலை கொண்ட கட்சிகள் ஒன்று சேர்வது அவசியம் அதன் அடிப்படையிலேயே பா.ஜ.க உடன் கூட்டணி” என்று இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
-
Jul 18, 2025 11:25 IST
குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம்; 3 பேர் கைது
திருவாரூர் அருகே காரியாங்குடி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
Jul 18, 2025 10:49 IST
வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாக தாக்கிய காவலர் கணவர் மீது வழக்குப்பதிவு
மதுரையில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாக தாக்கிய காவலர் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் மனைவிக்கு கணவர் வரதட்சணை டார்ச்சர் கொடுத்து தாக்கியுள்ளார். இந்த புகாரின் பேரில் காவலர் கணவர் மற்றும் அவரது தந்தை எஸ்.ஐ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
-
Jul 18, 2025 09:19 IST
குமரி மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை!
இந்திய வானிலை எச்சரிக்கையை அடுத்து குமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
-
Jul 18, 2025 09:18 IST
நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங் கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.