/indian-express-tamil/media/media_files/2025/07/17/admkj-2025-07-17-21-12-25.jpg)
அரசு மருத்துவமனையில் ஆட்சியர் இரவில் திடீர் ஆய்வு: படுக்கை மெத்தை சேதமடைந்து, பச்சிளம் குழந்தையுடன் தரையில் படுத்திருந்த தாய்மார்கள் வீடியோ வெளியான நிலையில், கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் உள்ள, அரசு மகப்பேறு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் இரவில் திடீர் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் இருந்த பொதுமக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.
-
Jul 17, 2025 21:18 IST
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது திமுகதான்: எடப்பாடி பழனிசாமி
கச்சத்தீவு விவகாரத்தில் ஒன்றும் தெரியாததைப்போல் முதல்வர் நடிக்கிறார். மீனவர்களுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததும், நிதியை உயர்த்தி வழங்கியதும் அதிமுகதான். மீனவர்கள் மீது அக்கறை இல்லாத அரசு திமுக என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
Jul 17, 2025 21:17 IST
சாமி கும்பிடுவதில் பிரச்சினை - கிழிக்கப்பட்ட அறநிலையத்துறை பதாகை
மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்துவதில் இரு சமுதாயத்திற்கு இடையே பிரச்சினை. அனைத்து சமூகத்தினரும் கோயிலில் வழிபடலாம், பக்தர்களை தடுத்தால் வழக்கு பதிவு" - அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்ட பதாகையை அகற்றக் கோரி வாக்குவாதம். அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்ட பதாகையை கிழித்த ஊர் மக்கள்
-
Jul 17, 2025 21:17 IST
பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு - 3 பேர் கைது
திருவாரூர், காரியாங்குடி அரசு தொடக்கப்பள்ளி சமையல் கூடத்தை சேதப்படுத்தி, குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம். விஜயராஜ், காளிதாஸ், செந்தில் ஆகிய 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
-
Jul 17, 2025 21:08 IST
தர்மர் பட்டாபிஷேக அன்னதான விழா: அதிமுக முன்னணி பொறுப்பாளர்கள் பங்கேற்பு
வாலாஜாபேட்டையில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் 137ம் ஆண்டு திருவிழாவின் ஒரு பகுதியாக தர்மர் பட்டாபிஷேக அன்னதான விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டு, அன்னதானத்தை தொடங்கி வைத்து பொதுமக்களோடு உணவருந்தினார். மேலும், அதிமுக முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-
Jul 17, 2025 19:45 IST
திருச்சி தி.மு.க கவுன்சிலர் வீடு மீது தாக்குதல் - சாலை மறியலில் இறங்கிய குடும்பத்தினர்
திருச்சி மாநகராட்சி 64வது வார்டு தி.மு.க மாமன்ற உறுப்பினர் மலர்விழி வீட்டின் மீது இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை கண்டித்து அவரது குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
-
Jul 17, 2025 18:48 IST
அஜித்குமார் வழக்கு - திருப்புவனம் காவல் ஆய்வாளரிடம் சி.பி.ஐ விசாரணை
போலீசார் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகின்றனர். அதன்படி, திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமாரிடம் தற்போது சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்ற அனைத்து காவலர்களையும் வெளியேற்றி விட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
-
Jul 17, 2025 17:05 IST
திருப்புவனம் அஜித் வழக்கு - 5 பேருக்கு சிபிஐ சம்மன்
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது மரணமடைந்த விவகாரத்தில் மடப்புரம் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வருகைதந்துள்ளனர். உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திக் வேல், பிரவீன் குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், செக்யூரிட்டி வினோத் குமார் மற்றும் நவீன் குமார் ஆகியோர் நாளை விசாரணைக்கு ஆஜராக சிபிஐ உத்தரவிட்டுள்ளது.
-
Jul 17, 2025 16:29 IST
ஆசிரியர் மீது தாக்குதல்-4 மாணவர்கள் சஸ்பெண்ட்
சிவகாசி அருகே போதையில் அரசு பள்ளி ஆசிரியரை தாக்கிய விவகாரத்தில் 2 மாணவர்கள் உறுதுணையாக இருந்த 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருத்தங்கல் அரசு பள்ளியில் நேற்று போதையில் வந்ததை தட்டிக்கேட்டதால் மதுபாட்டிலால் ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் மண்டை உடைக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் மீது நடவடிக்கை; பள்ளியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
Jul 17, 2025 16:26 IST
திருச்செந்தூரில் திடீரென 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்..
திருச்செந்தூரில் திடீரென 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. ஆபத்தை உணராமல் மக்கள் செல்பி புகைப்படம் எடுக்க கடலுக்கு ஆழமான பகுதிகளுக்கு சென்றன.
-
Jul 17, 2025 16:04 IST
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கூட்ட நெரிசல்
திருவள்ளூர் மாவட்டத்தில் அயப்பாக்கத்தில் செயல்பட்டுவரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில், மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க ஒரே நேரத்தில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்தனர்.
-
Jul 17, 2025 16:01 IST
திருச்சியில் கைப்பற்றப்பட்ட 86.345 கிலோ கஞ்சா எரித்து அழிப்பு
திருச்சி மாநகரத்தில் பல்வேறு காவல் நிலையங்கள் மூலம் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகளை பாதுகாப்பான முறையில் அழிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அதன்படி, கடந்த டிசம்பர் 2024 முதல் 08.07.2025-ந் தேதி வரை திருச்சி மாநகரத்தில் உள்ள 14 காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW) ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்குகளில் சுமார் 86.345 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றபட்ட கஞ்சாவை மாண்பமை நீதிமன்ற உத்தரவுபடி, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அறிவுத்தலின்படி, நேற்று 16.07.2025-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி கிராமத்தில் உள்ள மருத்துவக் கழிவுகளைப் பாதுகாக்கும் மற்றும் அகற்றும் தனியார் நிறுவனத்தில் உயர்மட்ட போதை பொருள் ஒழிப்பு கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (PCB) வகுத்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக எரித்து அழிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.செய்தி: க.சண்முகவடிவேல்
-
Jul 17, 2025 15:46 IST
பழனியில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி ரூ.6 கோடி மோசடி: தம்பதி கைது
பழனியில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி ரூ.6 கோடி மோசடி செய்த புகாரில் தம்பதி கைது செய்துள்ளனர். செந்தில்குமார், ஜெயந்தி தம்பதி, சக்திவேல் சேர்ந்து ஸ்ரீநேசா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தியுள்ளனர். உண்டு உறைவிடப் பள்ளி நடத்தி வருவதாகவும், புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரித்து வருவதாகவும் கூறி மோசடி செய்துள்ளனர். தொண்டு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக பணம் தந்தால் மாதம் 2% வட்டி தருவதாக கூறி மோசடி செய்துள்ளனர். மோசடி வழக்கில் மேலும் தலைமறைவாக உள்ளவர்களுக்கு மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
-
Jul 17, 2025 15:10 IST
தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலையில் தீ விபத்து!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரூ.1 கோடி ரூபாய் மதிப்புள்ள காற்றாலை தீயில் எரிந்து சேதம். தீ விபத்துக்கான காரணம் குறித்து நிறுவனத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
-
Jul 17, 2025 15:06 IST
அரசு உறைவிட பள்ளியில் 30 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
சுபாஷ் சந்திரபோஸ் உறைவிடப்பள்ளியில் காலை உணவருந்திய 33-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மாணவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் சம்பந்தப்பட்ட பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
-
Jul 17, 2025 14:14 IST
நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று (ஜூலை 17) ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
Jul 17, 2025 13:34 IST
வாகனம் திரும்பப் பெறப்பட்டதால் அலுவலகத்திற்கு நடந்து சென்ற டி.எஸ்.பி
மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) சந்திரசேகரின் கார், எந்தவித முன்னறிவிப்புமின்றி திரும்பப் பெறப்பட்டதால், அவர் தனது அலுவலகத்திற்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
வழக்கமாக, டி.எஸ்.பி சந்திரசேகர் தனது அதிகாரப்பூர்வ வாகனத்தில் வந்து செல்லும் நிலையில், இன்று காலை அவரது கார் திரும்பப் பெறப்பட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, அவர் தனது இல்லத்திலிருந்து அலுவலகம் வரை கால்நடையாகவே செல்ல நேர்ந்தது.
-
Jul 17, 2025 13:14 IST
வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தியது யார்? 2 நாட்களில் தெரியும் - ராமதாஸ்
தைலாபுரத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேட்டி: “தைலாபுரம் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தியது யார்? என்பது 2 நாட்களில் தெரியும். மகளிர் மாநாட்டுக்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படும். அவர் வரலாம். வராமலும் போகலாம். மாநாட்டு பிரசுரத்தில் அன்புமணி பெயர் மற்றும் படம் வரும்/ வரலாம்” என்று கூறியுள்ளார்.
-
Jul 17, 2025 13:10 IST
நம்பிக்கையில்லாத் தீர்மானம்; சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி பதவியிழப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி பதவியிழந்தார். இவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த கூட்டத்தில் நடந்த குரல் வாக்கெடுப்பில் நிறைவேறிய நிலையில், இன்று கவுன்சிலர்களிடையே நடந்த ரகசிய வாக்கெடுப்பிலும் 28 வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக விழுந்துள்ளன.
-
Jul 17, 2025 12:48 IST
பொள்ளாச்சி அருகே விபத்து - 3 பேர் மரணம்
பொள்ளாச்சி அருகே ஆழியார் பகுதியில் 4 சக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்
-
Jul 17, 2025 11:59 IST
பஜ்ரங் தளம் நிர்வாகி மேனா மோகன் மீது வழக்குப்பதிவு
புதுக்கோட்டை: பஜ்ரங் தளம் அமைப்பின் கோட்ட பொறுப்பாளர் மேனா மோகன் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அழகம்பாள்புரம் அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக நேற்று விநாயகர் கோயிலை அகற்றுவதைக் கண்டித்து அந்த அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவ்வழியே பைக்கில் சென்றவர் அவசரமாக செல்ல வேண்டும் எனக் கூறி வழி விடச் சொல்லும் போது, மேனா மோகன் அவரை தாக்கியுள்ளார். தாக்கப்பட்ட அழகேசன் தனது ஊர்க் காரர்களை அழைத்து வந்து மேனா மோகனை தாக்கினார். இருதரப்பு மோசதலை அடுத்து மேனா மோகன் மீதும் அவர் அளித்த புகாரில் கிராமத்தினர் 11 பேர் மீதும் வழக்குப்பதிவு.
-
Jul 17, 2025 11:57 IST
வரி விதிப்பில் மதுரை மாநகராட்சிக்கு இழப்பு: வழக்கை, சிபிஐக்கு மாற்ற நீதிமன்றம் மறுப்பு
வரி விதிப்பில் மதுரை மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கை, சிபிஐக்கு மாற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு
மண்டலத் தலைவர் உள்ளிட்ட 7 பேரை பதவி விலக வைத்திருக்கும் முதல்வரின் நடவடிக்கையால், இவ்வழக்கில் விசாரணை நேர்மையாக நடக்கும் என நம்புகிறோம். தென்மண்டல ஐ.ஜி, மதுரை ஆணையர் இணைந்து மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு அமைக்க வேண்டும். சிறப்பு விசாரணைக்குழு அதன் அறிக்கையை அவ்வப்போது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்
நீதிபதிபதிகள் உத்தரவு
-
Jul 17, 2025 10:32 IST
காட்பாடி அருகே போக்குவரத்து சோதனைச் சாவடியில் ரூ.95,000 பறிமுதல்
காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை போக்குவரத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.95,000 பறிமுதல். பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
Jul 17, 2025 09:49 IST
நவமலை செல்லும் வழியில் வாகனம் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் பகுதியில் வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனம் நவமலை செல்லும் வழியில் கவிழ்ந்து விபத்து, இருவர் உயிரிழந்தனர். காயமடைந்த 12 பேர் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jul 17, 2025 09:45 IST
ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: வட மாநில இளைஞர்கள் கைது
கடலூர் எஸ்பிஐ ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 வட மாநில வாலிபர்களை போலீசார் கைது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். கடலூரில் ரூம் எடுத்து முகாமிட்டு திருட்டு முயற்சிகளில் ஈடுபட முயன்றது அம்பலமானது.
-
Jul 17, 2025 09:21 IST
அண்ணாமலையார் கோயிலில் சேகர் பாபு சாமி தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடித்து காத்திருக்கும் பக்தர்களுக்கு வாழைப்பழம் வழங்கி நிறை குறைகளை கேட்டறிந்தார். கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டுசெல்வது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.
-
Jul 17, 2025 09:20 IST
நெல்லை மாநகராட்சி குப்பைக்கிடங்கு தீ அணைக்க போராட்டம்
நெல்லை மாநகராட்சி ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் நேற்று பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. 100 ஏக்கர் பரப்பில் உள்ள குப்பைக் கிடங்கில், 2வது நாளாக இன்றும் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
-
Jul 17, 2025 09:20 IST
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் இரவில் ஆய்வு
கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் உள்ள, அரசு மகப்பேறு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் இரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். படுக்கை மெத்தை சேதமடைந்து, பச்சிளம் குழந்தையுடன் தரையில் படுத்திருந்த தாய்மார்கள் வீடியோ வெளியான நிலையில், ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். மருத்துவமனையில் இருந்த பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.