/indian-express-tamil/media/media_files/2025/07/14/dmk-students-2025-07-14-17-10-40.jpg)
திருப்பரங்குன்றம் கோயிலில் சிறப்பு கட்டண தரிசனம் ரத்து
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், இன்றும், நாளையும் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து. பக்தர்கள் பொது தரிசனத்திலேயே அனுமதிக்கப்படுவார்கள்.
அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
-
Jul 14, 2025 17:12 IST
திமுக மாணவரணி போராட்டம்
கோயில் பணத்தில் கல்லூரி நடத்துவதா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சிவானந்தா காலனியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
Jul 14, 2025 16:56 IST
செய்யாறில் அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ் நாட்டில் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு பதவியேற்றதில் இருந்து, மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நிர்வாகத் திறனற்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின், தனது குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்டு வருகின்ற காரணத்தால், மக்கள் பல்வேறு வகைகளில் சொல்லொண்ணா வேதனையை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் விரோதச் செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி வாழ் மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
* செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்காமல் வெளி மாநிலத்தவருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி, உள்ளூர் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதை, விடியா திமுக அரசு கண்டும் காணாமலும் இருந்து வருகிறது.
செய்யாறு தொகுதியில் இயங்கி வரும் நூற்றுக்கணக்கான கல்குவாரிகளில் சட்டத்திற்குப் புறம்பாக, அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதால், தமிழகத்தில் இயற்கை வளங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான அளவு திறக்காததாலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு மாதக் கணக்கில் பணப் பட்டுவாடா செய்யப்படததாலும், விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
எனது தலைமையிலான அம்மா ஆட்சியில், செய்யாறு அரசு மருத்துவனைக்கு புதிய கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட்டு, தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது. விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இம்மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு போதிய மருத்துவர்கள் நியமிக்கப்படாததாலும், நோயாளிகளுக்கு மருந்து முழுமையாக வழங்கப்படாததாலும், நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
எனது ஆட்சிக் காலத்தில், செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
தமிழ் நாடு மின்சார வாரியத்தின் சார்பில், வெம்பாக்கம் ஊராட்சியில் 123 கே.வி மின்திட்டம் அமைப்பதற்கு எனது தலைமையிலான அம்மாவின் அரசில் அரசாணை வெளியிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு இத்திட்டத்தை கிடப்பில் போட்டுவைத்துள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமலும், கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கிடப்பிலும் போட்டு வைத்துள்ள விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தின் சார்பில், 19.7.2025 சனிக் கிழமை காலை 10 மணியளவில், செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளர் ராமு தலைமையிலும்; திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தூசி மோகன், முன்னால் எம்.எல்.ஏ., முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள்,
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், நகர, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 14, 2025 15:54 IST
குன்னூரில் விறகு சேகரிக்க சென்ற பெண் 130 அடி உயர பாறையிலிருந்து விழுந்து பலி..!!
நீலகிரி குன்னூரில் விறகு சேகரிக்க சென்ற பெண் 130 அடி உயர பாறையிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். உபதலையைச் சேர்ந்த மேரி ரெபல்லோ (53), பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே பலியானார்.
-
Jul 14, 2025 15:09 IST
கோவை சித்திரைச் சாவடி தடுப்பணையில் மூழ்கி இளைஞர் பலி!!
கோவை சித்திரைச் சாவடி தடுப்பணையில் மூழ்கி மாநகராட்சி தற்காலிக ஊழியர் கார்த்திக் (28) உயிரிழந்தார். 3 நண்பர்களுடன் ஆற்றில் குளித்த கார்த்திக், ஆழமான பகுதியில் இறங்கியபோது நீரில் மூழ்கியுள்ளார். தகவலறிந்து வந்த தொண்டாமுத்தூர் தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய கார்த்திக் உடலை மீட்டனர்.
-
Jul 14, 2025 15:08 IST
எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்..!!
எடப்பாடியில் முன்னாள் அதிமுக ஊராட்சி தலைவர் ராஜ்குமார் உட்பட 6 முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். துணைத்தலைவர் செல்வகுமார், ஊராட்சி செயலர் சுப்பிரமணி, அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இணைந்தனர்.
-
Jul 14, 2025 14:52 IST
பெண்களை அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகி கைது..!!
தலித், இஸ்லாமிய பெண்களை அவதூறாக பேசிய அதிமுக அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் கைது செய்யப்பட்டார். அதிமுக நிர்வாகியை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி நாகை நாகூர் சாலையில் விசிகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Jul 14, 2025 14:11 IST
"6 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை"
"நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களிலும், தென்காசி மற்றும் நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளிலும் மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
Jul 14, 2025 13:47 IST
அப்பா பேச்சை கேட்காத மகன் என யாரும் சொல்லிவிடக் கூடாது - உதயநிதி ஸ்டாலின்
தி.மு.க நிர்வாகி கே.என்.சேகரன் மகன் திருமண விழாவில், கலந்துகொண்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்திப் பேசினார். அப்போது, “அப்பா பேச்சை கேட்காத மகன் என யாரும் சொல்லிவிடக்கூடாது; அந்த பிரச்னை எனக்கும் இருக்கு, மணமகனுக்கும் இருக்கு” என்று கூறினார்.
-
Jul 14, 2025 13:05 IST
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக சாக்கோட்டை க.அன்பழகன் நியமனம்
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக சாக்கோட்டை க.அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் அப்பொறுப்பில் இருந்த கல்யாண சுந்தரம் விடுவிக்கப்படுகிறார் என்று தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
-
Jul 14, 2025 09:43 IST
விருதுநகரில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்
விருதுநகர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. 15 ஆய்வு குழுக்கள் நியமிக்கப்பட்டு, இன்று முதல் பட்டாசு ஆலைகளை ஆய்வு மேற்கொள்ளவுள்ள நிலையில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளது. ஆய்வுகளில் விதிமீறல் இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பட்டாசு ஆலை வெடி விபத்துகளை தொடர்ந்து 10 நாட்களுக்குள் அனைத்து ஆலைகளையும் ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
-
Jul 14, 2025 09:19 IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,760 கனஅடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 20,500 கன அடியில் இருந்து 19,760 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.85 அடியாகவும், நீர் இருப்பு 93.32 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடி நீர் வெளியேற்றம்.
-
Jul 14, 2025 09:18 IST
தமிழகத்தில் 6 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் நாளை முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 7 முதல் 11 செ.மீ கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதால் நாளை முதல் 20 ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
-
Jul 14, 2025 09:18 IST
மானாமதுரைக்கு புதிய டி.எஸ்.பி. நியமனம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை டிஎஸ்பி-யாக இருந்த சண்முகசுந்தரம், அஜித்குமார் கொலை வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் காரைக்குடி டிஎஸ்பி-யாக இருந்த பார்த்திபனை மானாமதுரை டிஎஸ்பியாக நியமித்து உள்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். இன்று சிபிஐ விசாரணை தொடங்க உள்ள நிலையில் புதிய டிஎஸ்பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.