சின்னக்கல்லார் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை தற்போது வால்பாறை டவுண் அருகில் முகாமிட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் பிடிக்கப்பட்ட மக்னா யானை, ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட சின்னக்கல்லார் வனப்பகுதியில் கடந்த மாதம் விடப்பட்டது.
மக்னா யானைக்கு ரேடியோ காலர் ஐடி(சேட்லைட்) பொருத்தப்பட்டுள்ளதால் யானை நடமாட்டத்தை வனத்துறை அமைத்துள்ள தனி குழுவும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
தேயிலை தோட்டத் தொழிலாளர் நிறைந்த பகுதி என்பதால், யானை குடியிருப்பு பகுதிக்கு வராமல் இருக்க வனத்துறை உயர் அதிகாரி உத்தரவின் பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் சின்னக்கல்லார் பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை, சிறு குன்றா சாலை வழியாக வந்து வால்பாறை டவுண் அருகில் முகாமிட்டுள்ளது.
நகரப் பகுதிக்குள் யானை நுழையாமல் இருக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளார்கள்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“