பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.
கோவை மாவட்டம் மதுக்கரை பேரூர் பகுதியில் ஊருக்குள் உலாவிய மக்னா காட்டு யானை நேற்றைய தினம் கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்ட மேட்டுப்பாளையம் அருகே உள்ள முள்ளி வனப்பகுதியில் விட வனத்துறையினர் லாரியில் ஏற்றி கொண்டுவந்தனர். ஆனால் முள்ளி பகுதியில் யானை விடப்பட்டால் மீன்டும் யானை ஊருக்குள் வரும் என கூறி விவசாயிகள் வெள்ளியங்காடு பகுதியில் யானை வந்த லாரியை சிறைப்பிடித்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் யானை முள்ளியில் இறங்கிவிடமால் மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்திற்கு கொன்டு செல்லபட்டது இதனையடுத்து அங்கு லாரியாலேயே நேற்று பிடிபட்டது முதல் சுமார் 14 மனி நேரமாக லாரியிலேயே யானை நிறுத்திவைக்கபட்டு எங்கு கொண்டு செல்வது என உயர் அதிகாரிகளின் உத்தரவிற்காக காத்திருந்தது. யானைக்கு மயக்கம் தெளியும் போது ஆக்ரோசமாவதால் இரண்டு முறை மீண்டும் மயக்க ஊசி செலுத்தபட்டது

இதனையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு வனத்துறை உயர் அதிகாரிகள் ஆனைமலை டாப்சிலிப் மற்றும் வால்பாறை ஆகிய இரு இடங்களை தேர்வு செய்து அங்கு கொண்டு செல்ல அனுமதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து யானைக்கு மீண்டும் மூன்றாவது மயக்க ஊசி செலுத்தபட்டது. பின்னர் லாரியில் நிறுத்தப்பட்டிருந்த மக்னா யானை 5 பேர் கொண்ட மருத்துவக்குழு பாதுகாப்புடன் மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் பார்கவ்தேஜா பேசுகையில், “பிப்ரவரி 6ம் தேதி மக்னா யானை டாப்சிலிப் வனப்பகுதிகள் விடுவிக்கப்பட்டது. பத்து நாட்கள் வனப்பகுதிக்குள் இருந்த அந்த யானை கடந்த 19 ஆம் தேதி அங்கிருந்து வெளியேறி விட்டது. வனப்பகுதியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து பொள்ளாச்சி சேத்துமடை பகுதியில் இருந்து தற்போது வரை யானையின் நடமாடத்தை 70-100 வனத்துறையினர் கண்காணித்து வந்து தற்போது பிடித்துள்ளோம்.

இதில் 200 வனத்துறையினர், 100 காவல்துறையினர், கோவை, ஓசூர், சத்தியமங்கலம் பகுதியில் இருந்து வனத்துறை மருத்துவர் குழுவினர் ஈடுப்பட்டுள்ளனர். இந்த மக்னா யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது. யானையை எங்கு விடலாம் என உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்படும்.
யானை கடந்து வந்த தூரத்தில் இதுவரை எவ்வித உயிர் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பொருட்சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சின்னத்தம்பி கும்கி யானை இந்த மக்னா யானையை பிடிக்க மிகவும் உதவியாக இருந்தது.” என்று கூறினார்.

வனத்துறை மருத்துவர் சுகுமார் பேசுகையில், “4 மருத்துவக் குழுக்கள் செயல்பட்டனர். மக்னா யானையை பிடிக்க தேவையான அளவிற்கு மட்டும் மயக்க மருந்து செலுத்தப்பட்டது.
யானைக்கு 40லிருந்து 45 வயது இருக்கும். இது மக்னா என்ற போதிலும் யாரையும் தாக்காமல் அருகில் செல்பவர்களிடமிருந்து விலகி தான் சென்றது. அது அதனுடைய குணமாக இருக்கலாம். யானையை அடர் வனப்பகுதிக்குள் விடுவித்து உணவு குடிநீர் ஆகியவை வைத்து வனப்பகுதிக்குள்ளேயே இருக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்.” என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil