Advertisment

’2024 நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க போகும் நம்மவரே’: கோவையில் மக்கள் நீதி மய்யம் போஸ்டர்

கோவை மக்களின் குரலாக 2024 நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க போகும்... நம்மவரே! வருக வருக..!

author-image
WebDesk
New Update
Coimbatore

Kamal hassan poster

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று கோவை வருகிறார்.

Advertisment

கோவையில் நட்சத்திர ஹோட்டலில் மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளும் அவர், அதனை தொடர்ந்து தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

Coimbatore

இந்நிலையில் கமலஹாசனை வரவேற்கும் விதமாக கோவை தெற்கு வார்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரயில் நிலையம், டவுன்ஹால் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த போஸ்டரில், "யார் எதிர்த்தாலும்! எந்த மலை தடுத்தாலும்! இமய மலையாய் உம்மை தூக்கி பிடிக்கும் கோவை மக்களின் குரலாக 2024 நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க போகும்... நம்மவரே! வருக வருக..!" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment