கோவையை அடுத்த ஒக்கிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (50). கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டு அருகே கஞ்சா செடி வாசம் வருவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
Advertisment
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து செட்டிபாளையம் போலீசார் முத்துப்பாண்டி வீட்டின் அருகே சென்று சோதனை செய்தனர்.
அப்போது அவரது வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகள் இருந்தது தெரியவந்தது.
செட்டிபாளையம் காவல் நிலையம்
Advertisment
Advertisements
இதையடுத்து சுமார் 5 அடிக்கு மேல் வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை அகற்றி பறிமுதல் செய்த போலீசார், முத்துப்பாண்டியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடிகளின் எடை 1.6 கிலோ வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“