உலக யானை தினம்: காட்டு யானை தாக்கியதில் அரசு அலுவலர் பலி!

Wild elephant kills Tamilnadu tourism official in Coimbatore Tamil News: கோவை மாவட்டம் சிங்கம்பதி கிராமத்தில் வசிக்கும் முருகன் என்பவரை காட்டு யானை தாக்கியதில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Wild elephant kills Tamilnadu tourism official in Coimbatore Tamil News: கோவை மாவட்டம் சிங்கம்பதி கிராமத்தில் வசிக்கும் முருகன் என்பவரை காட்டு யானை தாக்கியதில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

author-image
WebDesk
New Update
Coimbatore: Man dies in wild elephant attack

Tamilnadu: Wild elephant kills man in Coimbatore Tamil News

பி. ரஹ்மான் கோவை மாவட்டம்

Coimbatore News in Tamil: கோவை சிறுவாணி மலை அடிவாரம் சாடிவயல் அடுத்த சிங்கம்பதி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இதேபோல், அந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. சில சமயங்களில் மனித - வனவிலங்கு மோதல்கள் ஏற்படுகிறது.

Advertisment

இந்நிலையில், சிங்கம்பதி கிராமத்தில் வசிக்கும் முருகன் என்பவர் காட்டு யானை தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முருகன் தமிழக சுற்றுலா துறையில் வாச்சராக வேலை செய்து வருகிறார். அவர் காலை தனது வீட்டில் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த காட்டு யானை திடீரென எதிர்பாராத விதமாக அவரைத் தாக்கியது.

இதில் முருகன் படுகாயம் அடைந்தார். மேலும் அப்பகுதி மக்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். பின்னர் காட்டு யானையை கூச்சலிட்டு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காட்டு யானை அங்கிருந்து சென்றது.

Advertisment
Advertisements

பின்னர் படுகாயம் அடைந்த முருகனை உறவினர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உலக யானைகள் தினத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலியானது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Tamilnadu Elephant Coimbatore Elephant Attack

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: