கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி: துரிதமாக செயல்பட்ட போலீசார்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஒருவர் உடலில் டீசல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்த நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஒருவர் உடலில் டீசல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்த நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

author-image
WebDesk
New Update
Coimbatore Man Tries To Set Himself On Fire collector office premises Police acted swiftly Tamil News

காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்து அவரை பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

coimbatoreகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஒருவர் உடலில் டீசல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் சத்தமிடவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அவரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வந்த ரவிச்சந்திரன் என்பது தெரிய வந்தது. அவர் தற்போது திருப்பூரில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்த நிலையில் 20 நாட்கள் வேலை செய்ததற்கான ஊதியத்தை கொடுக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். 

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்து அவரை பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: